ரூ.10000 கோடி முதலீட்டை தட்டிசென்ற மாவட்டம்.. 97 ஒப்பந்தம், 7 துறை, 20 மாவட்டம் - முழு விபரம்

விஜய் தலைமையிலான அரசு இன்று அவசர அவசரமாக சென்னையில் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி முடித்தது. இக்கூட்டத்தில் திட்டமிட்டப்படி படி 97 நிறுவனங்களுடன் சுமார் 67,452 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்த முதலீட்டின் வாயிலாக 1,06,998 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் 97 நிறுவனத்தில் 25 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதல் முறையாக முதலீடு செய்கிறது.

ரூ.10000 கோடி முதலீட்டை தட்டிசென்ற மாவட்டம்.. 97 ஒப்பந்தம், 7 துறை, 20 மாவட்டம்  - முழு விபரம்

இதுமட்டும் அல்லாமல் கடந்த 100 நாட்கள் விஜய் தலைமையிலான ஆட்சியில் தமிழ்நாடு அரசு 1 லட்சம் கோடி ரூபாய்க்கு அளவிலான முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில் எந்த துறையில், எந்த மாவட்டத்தில், எந்த நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளது என்பதை முழுமையாக பார்ப்போம்.

ஸ்பேஸ் மற்றும் ஏரோஸ்பேஸ்

சென்னையில் துவங்கப்பட்டு இன்று இந்தியாவில் விண்வெளி துறையில் புதிய நம்பிக்கையாக திகழும் அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் முதலீடு செய்து 1500 வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளது. இப்புதிய முதலீட்டின் மூலம் மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் திரவ எரிபொருள் ஏவுவூர்தியின் அசம்பிளி மற்றும் இன்டிகிரேஷன் பணிகளுக்காக தளம் அமைக்க உள்ளது.

இதேபோல் மற்றொரு பிரபலமான விண்வெளி துறை நிறுவனமான Skyroot Aerospace 250 கோடி ரூபாய் முதலீட்டில் சேமிப்பு, அசம்பிளி, இணைப்பு, சோதனை தளத்தை அமைக்க உள்ளது. இதன் மூலம் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.

ஆட்டொமொபைல் துறை

கார், லாரி, பஸ்களுக்கான டயர்களை தயாரிக்க 5143 கோடி ரூபாய் முதலீட்டில் காஞ்சிபுரத்தில் தொழிற்சாலை அமைக்கிறது ஜேகே டயர்.

ஜெர்மனி நாட்டை சேர்ந்த டயாம்லர் ஒரகடத்தில் சுமார் 400 ஏக்கரில் டிசைன், ஆர் அண்ட் டி, கமர்சியல் வாகனங்களை தயாரிப்பதற்கு 4000 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய அமைப்பை உருவாக்க உள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க Lucas TVS சுமார் 2500 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது.

பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் Ultraviolette Automotive நிறுவனம் 700 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய பைக் தொழிற்சாலையை ஓசூரில் அமைக்க உள்ளது.

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த Autoliv செய்யாறு சிப்காட்டில் இருக்கும் தனது inflator உற்பத்தி ஆலையை 616 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கம் செய்ய உள்ளது.

ஐடி, டேட்டா சென்டர், ஏஐ ஹார்ட்வேர்

தூத்துக்குடியில் ஹைப்ரிட் ஹைப்பர்ஸ்கேல் டேட்டா சென்டர் அமைக்க 10000 கோடி ரூபாய் முதலீட்டில் 400 வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளது Lighthouse Green Datacenter. இந்த வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் இதுதான் மிகப்பெரிய முதலீடாகும்.

ஏர்டெல் நிறுவனத்தின் கீழ் இயக்கும் Nxtra தனது சென்னை டேட்டா சென்டரை விரிவாக்கம் செய்யவும், திருச்சியில் புதிய டேட்டா சென்டரை அமைக்கவும் 1,417 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.

அமெரிக்காவின் SuperMicro Computers சென்னையில் ஏஐ சர்வர்களை தயாரிக்க இந்தியாவில் முதல் முறையாக களமிறங்கி சென்னையை சேர்வு செய்துள்ளது. இதற்காக 477 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.

எலக்ட்ரானிக்ஸ், இன்ஜினியரிங்

எலக்ட்ரானிக்ஸ் உரிதிபாகங்களை தயாரிக்கும் Avalon Technologies சென்னையில் தனது தொழிற்சாலையை 1000 கோடி ரூபாய் முதலீட்டில் 3000 வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளது.

இதேபோல் ஓசூரில் டைட்டன் இன்ஜினியரிங் 1000 கோடி ரூபாய் முதலீட்டில் தனது ஆப்ரேஷன்ஸை விரிவாக்கம் செய்ய உள்ளது. இதன் மூலம் 1200 பேருக்கு கூடுதல் வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.

குஜராத்தை சேர்ந்த Shaily Engineering கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் உதிரிபாகங்களை தயாரிக்க 500 கோடி ரூபாயில் முதலீடு செய்து 400 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளது.

டெக்ஸ்டைல் துறை

விருதுநகர் பிஎம் மித்ரா டெக்ஸ்டைல் பார்கில் RB Wovens & Pallavaa Group சுமார் 1675 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை செய்து 4600 வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளது.

இலங்கையை சேர்ந்த MAS Holdings தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டத்தில் தனது உற்பத்தி ஆலையை அமைக்க 880 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.

இதேபோல் Mothi Spinner & V.P. Tex Group 600 கோடியும், WFB Baird சிவகங்கை சிப்காட்டி்ல் 100 கோடியில் டெக்ஸ்டைல் உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது.

ஹெல்த்கேர், பார்மா, மருத்து உபரகரணங்கள்

திருவள்ளூரில் கேப்லின் குரூப் சுமார் 925 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய பயோமெடிக்கல் ஆலையை அமைக்க உள்ளது.

மைசூரை சேர்ந்த 3V Vascular Technologies தமிழ்நாட்டில் முதல் முறையாக ஓரகடத்தில் 525 கோடிரூபாயில் உற்பத்தி அலையை அமைக்கிறது.

செயின்ட்-கோபைன் நிறுவனம் கிருஷ்ணகிரியில் புதிய ஆலை + காஞ்சிபுரத்தில் ஏற்கனவே உள்ள தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய 2000 கோடி ரூபாய் முதலீடு செய்து 600 வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளது.

ஜப்பான் நாட்டை சேர்ந்த YKK நிறுவனம் திருவள்ளூரில் இந்தியாவின் மிகப்பெரிய ஜிப்பர் உற்பத்தி ஆலையை அமைக்க 1,651 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இந்த ஆலையில் 4,300 பேருக்கு வேலை கிடைக்கும்.

பிட்சர் (ஜெர்மனி) காஞ்சிபுரத்தில் HVAC கம்ப்ரசர்கள் தயாரிக்க இந்தியாவில் முதல் ஆலையை 300 கோடி ரூபாய் முதலீடு அமைக்க உள்ளது.

வேலூரில் பாவ் யான் இந்தியா ஷூ நிறுவனம் காலணி / தோல் உற்பத்தி ஆலையை அமைக்க 240 கோடி முதலீடு செய்து 3,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளது.

அசென்டாஸ் ஃபர்ஸ்ட்ஸ்பேஸ் திருவள்ளூரில் தொழிற் பூங்காவை அமைக்க ரூ.100 கோடி முதலீடு செய்து 1,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளது.

இதுவே நகரங்கள் வாயிலாக பார்க்கும் போது.. காஞ்சிபுரம் - ஓரகடம், தூத்துக்குடி தான் இந்த வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதிக முதலீட்டை ஈர்த்துள்ளது.

மாவட்டம் / பகுதிமுதலீடு செய்யும் நிறுவனங்கள்மொத்த முதலீடு (கோடி ரூபாய்)மொத்த வேலைவாய்ப்புகள்முக்கிய துறைகள்
சென்னை / சென்னை மண்டலம்SuperMicro Computers, Avalon Technologies, Nxtra by Airtel (விரிவாக்கம்), YKK India₹4,545+ கோடி7,300+AI சர்வர்கள், எலக்ட்ரானிக்ஸ், தரவு மையங்கள், ஜிப்பர்கள்
காஞ்சிபுரம் / ஒரகடம்JK Tyre, Daimler India, Saint-Gobain (விரிவாக்கம்), 3V Vascular Technologies, Bitzer₹11,968+ கோடி4,610+ஆட்டோமொபைல், கண்ணாடி, மருத்துவத் தொழில்நுட்பம், டயர்கள், HVAC
கிருஷ்ணகிரி / ஓசூர்Saint-Gobain (புதிய ஆலை), Titan Engineering, Ultraviolette Automotive₹3,700 கோடி1,800+EV மையம், பொறியியல், கட்டுமானப் பொருட்கள்
திருவள்ளூர்YKK India, Caplin Group, Ascendas FirstSpace₹2,676 கோடி5,300+பயாலஜிக்ஸ், தொழில் பூங்காக்கள், ஜிப்பர்கள்
தூத்துக்குடிLighthouse Green Datacenter₹10,000 கோடி400ஹைப்பர்ஸ்கேல் தரவு மையம், பசுமை எரிசக்தி
விருதுநகர்RB Wovens & Pallavaa Group (PM MITRA பூங்கா)₹1,675 கோடி4,600மெகா ஜவுளித் தொழில்
திருவண்ணாமலை (செய்யாறு)Autoliv (ஸ்வீடன்)₹616 கோடி450ஆட்டோ இன்ஃப்ளேட்டர் உற்பத்தி
வேலூர்Bao Yan India Shoe Pvt Ltd₹240 கோடி3,000காலணி / உற்பத்தித் தொழில்
சிவகங்கைWFB Baird₹100 கோடி1,500லினன் துணிகள்
திருச்சிNxtra By Airtel (புதிய Greenfield திட்டம்)(Airtel-ன் மொத்த ₹1,417 கோடி முதலீட்டில் அடங்கும்)தரவு மையம்
பல மாவட்டங்கள் / தமிழகம் முழுவதும்MAS Holdings, Agnikul, Skyroot, Lucas TVS, Shaily Engineering, Mothi / VP Tex₹6,225+ கோடி13,600+விண்வெளி, EV, ஜவுளி, நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+