வோடபோன் ஐடியா நிறுவனம் Vi என புதிய அவதாரத்தினை எடுத்துள்ள நிலையில், அதிரடியான பல புதிய திட்டங்களை எடுத்து வருகின்றது.
பெயரினை மாற்றிய கையோடு புதிய ரிங் டோன் ஆப் மற்றும் புதிய ரிங் டோன் என பல திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது வீ.
அதோடு தற்போது 351 ரூபாய்க்கான திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ஒர்க் ஃப்ரம் ஹோம் ப்ரீபெய்ட் திட்டமான இது, 100 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.
டேட்டா பேக் மட்டும் தான்
இந்த ப்ரீபெய்ட் திட்டம் வழங்கும் 100 ஜிபி டேட்டாவானது 4ஜி சேவையின் கீழ் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் உள்ள ஒரு நல்ல விஷயம் என்னவெனில் இது வெறும் டேட்டா பேக் ஆகும். ஆனால் இந்த திட்டத்தின் கீழ் எந்த குரல் அழைப்பு நன்மைகளும் சேர்க்கப்படவில்லை. இந்த அதிரடியான திட்டமானது 56 நாட்களுக்கு மட்டுமே பொருந்தும்.
வாய்ஸ் கால் சேவை வேண்டாம்
இந்தத் திட்டத்தில் உள்ள நல்ல விஷயம் என்னவெனில் எனக்கு எந்த வாய்ஸ் கால் சேவையும் தேவையில்லை, மாறாக டேட்டா சேவை மட்டும் போதும் என்பவர்களுக்கு, இதனை கூடுதலாக இந்த திட்டத்தினை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டியைக் கொண்டுள்ளதால், டேட்டா சேவையினை நீண்ட நாட்களுக்கு பெற முடியும்.
பயனுள்ள திட்டம்
ஏனெனில் ஒருவர் டேட்டா சேவையினைத் தான் அதிகம் பயன்படுத்துவார்கள் எனில், இது மிகுந்த பயனுள்ள திட்டமாக இருக்கும். அதோடு Vi நிறுவனம் மற்றொரு Work From Home ப்ரீபெயிட் திட்டத்தினையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது 251 ரூபாய் திட்டமாகும். இதன் மூலம் வாடிக்கையாளர் 50 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. இந்த பேக்கிலும் வாய்ஸ் கால் நன்மைகள் எதுவும் சேர்க்கப்படவில்லை. இந்த பேக்கின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள் ஆகும்.
இன்னும் சில திட்டங்கள் உண்டு
இந்த இரண்டு திட்டங்களையும் ஒப்பிடுகையில் Vi -லிருந்து புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 351 ரூபாய் மதிப்பிலான ஒர்க் ஃப்ரம் ஹோம் பேக், 251 ரூபாய் மதிப்பிலான ஒர்க் ஃப்ரம் ஹோம் பேக்கை விட மதிப்புமிக்கது என்பதை புரிந்து கொள்ள முடியும். ஏனென்றால் இந்த இரண்டு திட்டங்களுக்கும் வெறும் 100 ரூபாய் வித்தியாசம் தான். ஆனால் நன்மைகள் பெரியளவில் வேறுபடுகின்றன.
குறைவான டேட்டா பேக்குகளும் உண்டு
இதே குறைந்த அளவில் டேட்டா மட்டும் போதும் என்பவர்களுக்கும் 98 ரூபாயில் 12 ஜிபி டேட்டா கிடைக்குமாறும் ஒரு புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இது 28 நாட்களுக்கு வேலிடிட்டி. இதே `16 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 1 ஜிபி டேட்டா 24 மணி நேர வேலிடிட்டியுடன் கிடைக்கும். இதே மற்றொரு திட்டத்தில் 48 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 3ஜிபி டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியும் கிடைகும்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications