வோடபோன் ஐடியா கொடுத்த சூப்பர் ஆஃபர்.. ZEE5 முற்றிலும் இலவசம்..!

இந்தியாவின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமான வோடபோன் ஐடியா நிறுவனம் VI எனப் புதிதாகப் பெயர் மாற்றம் செய்து புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக பல்வேறு சிறப்புச் சலுகைகளை அறிவித்து வருகிறது. இதன் படி தற்போது இந்தியக் குடும்பங்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஜீ தொலைக்காட்சியின் பிரத்தியேக செயலியான Zee5-ன் ஒரு வருட ப்ரீமியம் சேவையை VI ரீசார்ஜ் உடன் கொடுக்கிறது.

இந்தச் சேவை பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு மட்டுமே VI கொடுக்கும் காரணத்தால் இப்பகுதி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

மேலும் VI தனது போஸ்ட்பெயிட் மற்றும் ப்ரீபெய்டு ஆகிய இரண்டு தரப்பு வாடிக்கையாளர்களுக்கும் 219 ரூபாய் ரீசார்ஜ் முதல் பல திட்டங்களுக்கு Zee5 செயலியின் ஒரு வருட ப்ரீமியம் சேவையை VI வழங்குகிறது.

முதல் முறை ரீசார்ஜ்

முதல் முறை ரீசார்ஜ்

VI தளத்திற்குப் புதிதாக இணையும் வாடிக்கையாளர்களுக்குப் பிரத்தியேகமாக 455 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் டாக்டைம், டேட்டா உட்பட Zee5 செயலியின் ஒரு வருட ப்ரீமியம் சேவையை VI வழங்குகிறது.

இது புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

VI 355 ரூபாய் ப்ரீபெய்டு திட்டம்

VI 355 ரூபாய் ப்ரீபெய்டு திட்டம்

இந்தத் திட்டத்தின் கீழ் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் 50 ஜிபி டேட்டா-வை VI கொடுக்கிறது. இதோடு Zee5-ன் ஒரு வருட ப்ரீமியம் சேவை, VI மூவிஸ், VI டிவி ஆகிய சேவைகளும் இத்திட்டத்தில் அடங்கும்.

ஆனால் இத்திட்டத்தில் காலிங் திட்டங்கள் எதுவும் இல்லை.

 

VI 405 ரூபாய் ப்ரீபெய்டு திட்டம்

VI 405 ரூபாய் ப்ரீபெய்டு திட்டம்

இந்தத் திட்டத்தின் கீழ் 90 ஜிபி டேட்டா உடன் அனைத்து நெட்வொர்க்-கிற்கும் இலவச காலிங் சேவையும், தினமும் 100 எஸ்எம்எஸ், உடன் Zee5-ன் ஒரு வருட ப்ரீமியம் சேவை கொடுக்கிறது VI.

 

இதனுடன் MPL செயலியில் கேம் விளையாட 125 ரூபாய் மதிப்பிலான assured bonus cash, சோமேட்டோ தளத்தில் 75 ரூபாய் மதிப்பிலான daily discount கொடுக்கிறது VI. மேலும் இத்திட்டம் 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கொண்டது.

VI 595 ரூபாய் ப்ரீபெய்டு திட்டம்

VI 595 ரூபாய் ப்ரீபெய்டு திட்டம்

இந்தத் திட்டத்தின் கீழ் தினமும் 2 ஜிபி டேட்டா, அனைத்து நெட்வொர்க்-கிற்கும் இலவச அன்லிமிடெட் காலிங் சேவை, தினமும் 100 எஸ்எம்எஸ் என 56 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது இத்திட்டம்.

இதோடு Zee5-ன் ஒரு வருட ப்ரீமியம் சேவை, VI மூவிஸ், VI டிவி, MPL செயலியில் கேம் விளையாட 125 ரூபாய் மதிப்பிலான assured bonus cash, சோமேட்டோ தளத்தில் 75 ரூபாய் மதிப்பிலான daily discount கொடுக்கிறது VI.

 

VI 2595 ரூபாய் ப்ரீபெய்டு திட்டம்

VI 2595 ரூபாய் ப்ரீபெய்டு திட்டம்

இந்தத் திட்டத்தின் கீழ் தினமும் 2 ஜிபி டேட்டா, அனைத்து நெட்வொர்க்-கிற்கும் இலவச அன்லிமிடெட் காலிங் சேவை, தினமும் 100 எஸ்எம்எஸ் என 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது இத்திட்டம்.

இதோடு Zee5-ன் ஒரு வருட ப்ரீமியம் சேவை, MPL செயலியில் கேம் விளையாட 125 ரூபாய் மதிப்பிலான assured bonus cash, சோமேட்டோ தளத்தில் 75 ரூபாய் மதிப்பிலான daily discount கொடுக்கிறது VI.

 

போஸ்ட்பெய்டு

போஸ்ட்பெய்டு

VI நெட்வொர்கின் போஸ்ட்பெய்டு திட்டத்தில் 499 ரூபாய் மற்றும் 699 ரூபாய் திட்டங்களுக்கு Zee5 மற்றும் அமேசான் ப்ரைம்-ன் ஒரு வருட ப்ரீமியம் சேவையும், 1099 ரூபாய் திட்டத்திற்கு ஒரு வருடத்திற்கான நெட்பிளிக்ஸ் திட்டமும் கொடுக்கிறது VI.

6 ஜிபி டேட்டா

6 ஜிபி டேட்டா

VI வாடிக்கையாளர்கள் ஏற்கனவே Zee5-ன் ஒரு வருட ப்ரீமியம் சேவையை வைத்திருந்தால், இந்தச் சிறப்பு ரீசார்ஜ்-ஐ செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு 6 ஜிபி இண்டர்நெட் எவ்விதமான கூடுதல் கட்டணமுமின்றிக் கொடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதனால் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் லாபம் கிடைக்க உள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+