தொலைத் தொடர்பு துறையில் ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்கு பின்னர், வோடபோன் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள், பிஎஸ்என்எல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பல பிரீபெய்டு திட்டங்களை அறிவித்து வருகின்றன.
குறிப்பாக ஜியோவுக்கு சமமாக பல சலுகைகளையும் வாரி வழங்கி வருகின்றன. சில ஜியோவினை விட சிறந்த சில திட்டங்களையும் வாரி வழங்கி வருகின்றன.
அந்த வகையில் வோடபோன் ஐடியா நிறுவனம், கூடுதலாக 50ஜிபி டேட்டாவினை வாரி வழங்குகின்றது. சரி வாருங்கள் அது என்ன திட்டம். மற்ற நிறுவனங்களில் இது போன்ற திட்டங்கள் ஏதும் உண்டா? வாருங்கள் பார்க்கலாம்.
வோடபோன் ஐடியாவின் வருட திட்டம்
வோடபோன் ஐடியா நிறுவனம் தற்போது 2,595 ரூபாய் மதிப்பிலான வருட திட்டத்தினை வழங்கி வருகின்றது. இந்த குறைந்த விலையில் பல சலுகைகளை இந்த நிறுவனம் வழங்கி வருகின்றது. இந்த நீண்டகால திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டாவினை வழங்கி வருகின்றது. அதாவது மொத்தம் 730 ஜிபி டேட்டாவினை வழங்குகின்றது. அதோடு இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால் திட்டத்தினையும் வழங்குகின்றது.
அன்லிமிடெட் சேவை
இந்த அன்லிமிடெட் வாய்ஸ் கால் சேவையானது அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் இலவசமே. அதோடு தினசரி 100 இலவச எஸ்எம்எஸ்கள் உண்டு. இதோடு வோடபோன் நிறுவனம் இலவசமாக zee5 சந்தாவினையும் ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்குகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக இந்த திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியை கொண்டுள்ளது.
வோடபோனின் சலுகை
இப்படி நல்ல திட்டத்தில் தான் கூடுதலாக 50ஜிபி டேட்டாவினையும் வோடபோன் அறிவித்துள்ளது. ஆக மொத்தத்தில் இந்த வருட திட்டத்தில் மொத்தம் 780ஜிபி டேட்டாவினை பெற முடியும். இதனுடன் வீயின் மூவிஸ், டிவி கிளாசிக், வீக்கெண்ட் ரோல் ஓவர் டேட்டா வசதியும் இந்த திட்டத்தில் உண்டு.
இந்த வருட திட்டத்தினை நீங்கள் மாத கணக்கில் பார்த்தால் மாதம் 216 ரூபாய் மட்டுமே நீங்கள் இதற்காக செலவிடுகிறீர்கள். உண்மையில் இது மற்ற மாத திட்டங்களோடு பார்க்கும்போது ஒரு நல்ல திட்டமே.
ஜியோ திட்டங்கள்
இதே போல ரிலையன்ஸ் ஜியோ 2,399 ரூபாய் திட்டத்தினை வழங்குகிறது. இந்த திட்டத்திலும் தினசரி 2ஜிபி டேட்டா என மொத்தம் 730 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த அன்லிமிடெட் வாய்ஸ் கால் சேவை, அதோடு தினசரி 100 இலவச எஸ்எம்எஸ்கள் உண்டு. இலவசமாக ஜியோ ஆப் சேவையும் வழங்குகிறது. இந்த திட்டமானது 365 நாட்கள் வேலிடிட்டியைக் கொண்டது.
ஜியோவின் மற்றொரு பிளான்
ஜியோவில் மற்றொரு வருட திட்டமும் உண்டு. இது 2,121 ரூபாயாகும். இது தினசரி 1.5ஜிபி டேட்டாவையும், இந்த அன்லிமிடெட் வாய்ஸ் கால் சேவை, அதோடு தினசரி 100 இலவச எஸ்எம்எஸ்கள் உண்டு. இந்த திட்டம் 336 நாட்கள் வேலிடிட்டியை கொண்டது. இது குறைவான டேட்டா உபயோகப்படுத்துபவர்களுக்கு நல்ல திட்டமே.
ஏர்டெல் திட்டங்கள்
ஏர்டெல்லில் தற்போது 2,498 ரூபாய் மதிப்பிலான திட்டம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதன் மூலம் அன்லிமிடெட் கால், 100 இலவச எஸ்எம்எஸ் வழங்கப்படுகிரது. அதோடு 365 வேலிடிட்டியையும் கொண்டது. மேலும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 1 மாதத்திற்கு அமேசான் பிரைம் வீடியோ, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம் சந்தா உள்ளிட்டவை கிடைக்கும். இது தவிர 400 ரூபாய் மதிப்புள்ள டிவி சேனல்கள், அன்லிமிடெட் மூவிஸ், டிவி ஷோ இலவசமாக வழங்கப்படுகிறது.
ஏர்டெல்லின் மற்றொரு திட்டம்
அதோடு பாஸ்டேக்கிற்கு 100 ரூபாய் கேஸ்பேக் இலவசமாக பெற முடியும். அதோடு ஹலோடியூன், வின்ங் மியூசிக், மெம்பர்ஷிப்பும் உண்டு. இது தவிர 2,698 ரூபாய் மதிப்பிலான ரீசார்ஜ் திட்டத்தினையும் ஏர்டெல் வழங்கி வருகின்றது. இந்த திட்டத்திலும் வழக்கமான சலுகையோடு டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி திட்டங்கள் ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகின்றது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications