சென்னை: இந்திய எண்டர்டெயின்மென்ட் துறையில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு உயர்ந்துள்ள முகேஷ் அம்பானியின் வயாகாம் 18, சமீபத்தில் டிஸ்னி இந்தியாவைக் கைப்பற்றியதன் மூலம் பிராட்காஸ்டிங், ஸ்ட்ரீமிங் என இரு பிரிவிலும் ஆதிக்க நிலையை அடைந்துள்ளது. ஆனால் இந்த வர்த்தகத்தை முழுமையாகப் பயன்படுத்தி அதிகப்படியான லாபம், வருவாய் பெற இத்துறையில் இருக்கும் பெரும் தலைகளை ஈர்க்கும் பணியில் முகேஷ் அம்பானி களமிறங்கியுள்ளார்.
இதன்படி சமீபத்தில் யூடியூப் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் இஷான் சட்டர்ஜி ராஜினாமா செய்துள்ள நிலையில், வயாகாம்18-க்கு சொந்தமான ஜியோ சினிமா-வின் தலைமை வருவாய் அதிகாரியாக (சிஆர்ஓ) இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது.

கூகுளில் 13 ஆண்டுகள் பணியாற்றிய இஷான் சட்டர்ஜி, ஆறு ஆண்டுகள் யூடியூப்பில் பணியாற்றினார். 2022 நவம்பர் முதல் யூடியூப் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக பணியாற்றி வருகிறார். இந்த 6 வருடத்தில் யூடியூப் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக மட்டும் அல்லாமல் யூடியூப்-ன் ஏசியா பசிபிக் பிராந்தியத்திற்கான ப்ராடெக்ட் பார்ட்னர்ஷிப் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
வயாகாம்18-க்கு சொந்தமான ஸ்ட்ரீமிங் தளம் தான் இந்த ஜியோ சினிமா, இப்பிரிவின் வளர்ச்சிக்காக நியமிக்கப்படும் இரண்டாவது பெரிய தலை இஷான் சட்டர்ஜி. இதற்கு முன்பு அமேசான் பிரைம் வீடியோவின் இந்தியா தலைவர் சுஷாந்த் ஸ்ரீராம், ஜியோ சினிமா-வின் தலைமை மார்கெட்டிங் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இஷான் சட்டர்ஜி மற்றும் சுஷாந்த் ஸ்ரீராம் ஆகியோர் வயாகாம்18 இன் டிஜிட்டல் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான கிரண் மணி கீழ் பணியாற்ற உள்ளனர். கிரண் மணி முன்னதாக கூகுளில் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான ஆண்ட்ராய்டு மற்றும் கூகுள் பிளேயின் பொது மேலாளராகவும், நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றினார்.
2022 ஆம் ஆண்டில் ஜியோ சினிமா தளம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திடம் இருந்து வயாகாம்18 நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதிலிருந்து இந்திய ஸ்ட்ரீமிங் சந்தையை தலைகீழாகப் புரட்டிப்போட்டு உள்ளது. வயாகாம்18 நிறுவனத்தின் முந்தைய ஸ்ட்ரீமிங் தளங்களான வூட், வூட் செலக்ட் மற்றும் வூட் கிட்ஸ் ஆகியவையும் ஜியோ சினிமாவில் இணைக்கப்பட்டுள்ளதன் மூலம் கூடுதல் பலம் பெற்றது.
முகேஷ் அம்பானி தலைமையில் இயங்கும் வாய்காம் 18 இலவச சேவை அளித்தது மூலம், இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் ஸ்ட்ரீமிங் தளமாக ஜியோ சினிமா உருவெடுத்துள்ளது. இதில் இந்தியன் பிரீமியர் லீக் மற்றும் பிக் பாஸ் போன்ற பிரபலமான கிரிக்கெட் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை இலவசமாக பார்க்க முடியும் என்பதால் குறைந்த காலகட்டத்தில் அதிகப்படியான மக்கள் இத்தளத்தில் குவிந்தது மூலம் பெரும் வெற்றி அடைந்தது.
ஜியோ சினிமா தளத்தில் எச்பிஓ, என்பிசி யுனிவர்சல் மற்றும் பாராமவுண்ட் போன்ற உலகளாவிய கண்டென்ட்-களையும் வழங்குகிறது. இஷான் சட்டர்ஜி நியமனம் ஜியோ சினிமாவின் எதிர்கால வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications