ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி புதன்கிழமை வைப்ரென்ட குஜராத் உச்சி மாநாட்டில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எப்போதும் ஒரு குஜராத்தி நிறுவனம் தான். ரிலையன்ஸ் குழுமத்தின் மொத்த முதலீட்டில் 3ல் ஒரு பங்கு 150 பில்லியன் டாலரை குஜராத்தில் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த முதலீட்டாளர் கூட்டத்தில் குஜராத் மாநிலத்தின் பசுமை வளர்ச்சித் துறையில் உச்சம் தொடவும், 5G மற்றும் AI திறன்களைப் பயன்படுத்துதல், வேலை வாய்ப்புகளை ஊக்குவித்தல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகிய 5 முக்கிய உறுதிமொழிகளைப் பிரதமர் மோடியின் முன்பும், முதலீட்டாளர் முன்பும் தெரிவித்தார்.

முகேஷ் அம்பானி அடுத்த பத்து ஆண்டுகளில் குஜராத்தின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முதலீடுகளை ரிலையன்ஸ் செய்யும் என உறுதி அளித்தார்.
1. தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் ஜாம்நகரில் 5,000 ஏக்கரில் திருபாய் அம்பானி கிரீன் எனர்ஜி ஜிகா வளாகத்தைக் கட்டத் தொடங்கியுள்ளது. இதன் மூலம், ஏராளமான கிரீன் எனர்ஜி துறையில் அதிகப்படியான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதன் மூலம் குஜராத் கிரீன் எனர்ஜி பொருட்களின் ஏற்றுமதியில் முன்னோடியாக இருக்கும் எனத் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் திருபாய் அம்பானி கிரீன் எனர்ஜி ஜிகா வளாகம் செயல்பாட்டுக்கு வரும் எனத் தெரிவித்தார்.
2. ரிலையன்ஸ் ஜியோ குஜராத் மாநிலம் முழுவதையும் 5ஜி சேவையைப் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தியுள்ளோம். இதன் மூலம் மாநிலம் டிஜிட்டல் டேட்டா தளம் மற்றும் ஏஐ பயன்பாட்டில் வேகமாகப் பயணிக்க முடியும். ஏஐ, 5ஜி சேவை துணையுடன் ஏஐ மருத்துவர்கள், ஏஐ ஆசிரியர்கள், ஏஐ விவசாயம் என ஹெல்த்கேர், கல்வி, விவசாயம் போன்ற துறையில் பெரும் புரட்சியைச் செய்ய முடியும்.
3. ரிலையன்ஸ் ரீடைல் வாயிலாகக் குஜராத் மாநிலத்தில் இருக்கும் பல லட்சம் மளிகைக் கடைகள், சிறு வர்த்தகர்கள், விவசாயிகள் உயர்தரப் பொருட்களை வாங்கவும், விற்கவும் ஒரு பாலமாக அமைந்துள்ளது.
4. புதிய மெட்டிரியல் தயாரிப்பில் முன்னோடியாக இருக்கும் குஜராத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவின் முதல் உலகத் தரம் வாய்ந்த கார்பன் ஃபைபர் தொழிற்சாலையை Hazira பகுதியில் அமைக்க உள்ளது.
5. பிரதமர் மோடி 2036ல் ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடந்த விருப்பம் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரிலையன்ஸ் பவுண்டேஷன் பல அமைப்புகள் உடன் இணைந்து குஜராத்தில் கல்வி, விளையாட்டு, திறன் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளது மட்டும் அல்லாமல் ஒலிம்பிக் போட்டிகளில் பெரும் வெற்றியாளர்களை உருவாக்க உள்ளோம்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications