பிரதமர் மோடி முன்னிலையில் குஜராத் மாநிலத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டின் 3 நாள் கூட்டம் இன்று துவங்கியது ஜனவரி 12ஆம் தேதி வரையில் நடக்க உள்ளது. தமிழ்நாட்டு முதலீட்டாளர்கள் மாநாட்டிற்குப் பின்பு இந்திய மக்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்த முதலீடுகளில் ஒன்றாக இருந்தது குஜராத் முதலீட்டாளர் மாநாடு.
வைப்ரன்ட் குஜராத் உச்சி மாநாட்டில் ஜப்பான் நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான சுசூகி மோட்டார்ஸ், தற்போதுள்ள குஜராத் ஆலையில் புதிய உற்பத்தி தளத்தை அமைக்க ரூ.3,200 கோடியும், குஜராத் மாநிலத்தில் இரண்டாவது கார் தொழிற்சாலையை அமைக்க ரூ.35,000 கோடியும் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்ததுள்ளது.

சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் தோஷிஹிரோ சுசூகி (Toshihiro Suzuki)கூறுகையில், இந்த ஆண்டு இறுதிக்குள் சுசூகி நிறுவனம் தனது குஜராத் ஆலையில் இருந்து முதல் எலக்ட்ரிக் வாகனத்தை மக்கள் மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் எனக் கூறினார்.
மேலும் குஜராத் தொழிற்சாலையில் தயாராகி அறிமுகம் செய்யப்படும் கார் மாடலை இந்தியாவில் மட்டும் விற்பனை செய்யாமல் ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளோம் என்று தோஷிஹிரோ சுசூகி தெரிவித்தார்.
இந்தப் புதிய உற்பத்தி லைன் அமைக்கப்படுவதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 2.5 லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய முடியும் என Toshihiro Suzuki கூறினார். சுசூகி மோட்டார் நிறுவனத்தின் குஜராத் மாநிலத்தின் ஆண்டு உற்பத்தி அளவு தற்போது 7.5 லட்சம் கார்களாக இருக்கும் வேளையில் இந்த எண்ணிக்கை 10 லட்சமாக அதிகரிக்க உள்ளது.
இதேபோல் 35000 கோடி ரூபாய் முதலீட்டில் குஜராத் மாநிலத்தில் அமைக்கப்படும் இரண்டாவது கார் தொழிற்சாலையின் மூலம் வருடத்திற்குக் கூடுதலாக 10 லட்சம் கார்களைத் தயாரிக்க முடியும். இதன் மூலம் மாருதி சுசூககி குஜராத்தில் இருந்து மட்டுமே வருடத்திற்கு 20 லட்சம் கார்களைத் தயாரித்துப் புதிய சாதனையைப் படைக்க உள்ளது.
இந்த 20 லட்சம் கார்கள் தயாரிப்பு இலக்கை 2030-32 காலகட்டத்தில் எட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, இந்த 2 தொழிற்சாலையில் ஒரே நேரத்தில் 28 மாடல் கார்களைத் தயாரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மாருதி சுசூகி நிறுவனத்தில் ஜப்பான் நாட்டின் சுசூகி நிறுவனம் 58 சதவீத பங்குகளை வைத்துள்ளது.
இந்திய பொருளாதார வளர்ச்சியில் அதிகப்படியான முதலீட்டை ஈர்த்து அதிகப்படியான வளர்ச்சி அடைவது யார் என்ற போட்டி அனைத்து மாநிலங்கள் மத்தியிலும் உள்ளது. குறிப்பாக டாப் 5 இடத்தில் இருக்கும் மாநிலங்களுக்குள் எப்போதும் பெரும் போட்டியிருக்கும். இதனாலேயே தொழிற்துறையினர் மத்தியில் தமிழ்நாட்டைத் தொடர்ந்து குஜராத் முதலீட்டாளர் மாநாடு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications