நாளுக்கு நாள் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக யுபிஐ பரிவர்த்தனைகள், பேங்க் பரிவர்த்தனைகள் என பலவற்றுக்கும் அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சில நாட்களுக்கு முன்பு ஆயிரக்கணக்கான ஹேக்கர்களின் நம்பர் பிளாக் செய்யப்பட்டது. ஆனாலும் இந்த மோசடி சம்பவங்கள் குறைந்த பாடில்லை. அதற்கு உதாரணமாக உடுப்பியைச் சேர்ந்த ஒரு நபர் தன்னிடம் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் சைபர் குற்ற பிரிவு காவல் துறை அதிகாரிகள் போல நடித்து ரூ.89 லட்சத்தை ஏமாற்றி பறித்ததாக புகார் அளித்துள்ளார்.
ஆள் பெயர் தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பும் போது ஜாக்கிரதையாக இருக்குமாறு காவல்துறையினர் தொடர்ந்து எச்சரிக்கையை வழங்கி வருகின்றனர். ஆனாலும் சமீப காலமாக நடந்து வரும் மோசடி சம்பவங்களை உற்றுப் பார்த்தால் அவை லட்சக்கணக்கில் தான் உள்ளது. அதேபோல இந்த சம்பவமும் நடந்துள்ளது. தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பும் போது கண்டிப்பாக உஷாராக இருக்க வேண்டும்.

45 வயதான சந்தோஷ் குமார், தனக்கு TRAI-இலிருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்ததாகக் கூறியுள்ளார். சட்டவிரோத விளம்பரங்களுக்காக தனது மொபைல் எண்ணைப் பயன்படுத்தியதாகவும், தொல்லை தரும் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் பாதிக்கப்பட்ட நபரிடம் கூறியுள்ளார்.
இதன் விளைவாக பாதிக்கப்பட்டு நபருக்கு எதிராக 17 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பயமுறுத்தியதாகவும், மேலும் 2 மணி நேரத்திற்குள் அவரது அனைத்து தொடர்புகளையும் துண்டித்து விடுவதாக மிரட்டி, கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மோசடிக்காரர்கள் கூறியதாக தெரிவித்தார்.
அதன் பிறகு மோசடிக்காரர்கள் வீடியோ கால் செய்துள்ளனர். போலீஸ் சீருடையில் தோன்றி மும்பையின் அந்தேரி கிழக்கிலிருந்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று தன்னை அடையாளம் காட்டிக்கொண்டு பாதிக்கப்பட்ட நபரிடம் பேசியுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவருக்கு பண மோசடி வழக்கில் தொடர்பு இருப்பதாகவும் கூறியுள்ளனர் .அவற்றை சரிபார்க்க வங்கி கணக்கு விவரங்களை கேட்டு மிரட்டி உள்ளனர். RBI நிதி சரிபார்ப்புக்காக நாக்பூரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, சிவில் லைன்ஸ் கிளையுடன் தொடர்புடைய ஒரு கணக்கிற்கு ரூ.89 லட்சத்தை மாற்றுமாறு அறிவுறுத்தினர்.
இதை நம்பிய சந்தோஷ் செப்டம்பர் 12-ஆம் தேதி அன்று பணத்தை மாற்றியுள்ளார். பிறகு அந்த மோசடிக்காரர்களிடமிருந்து எந்தவித அழைப்பும் இவருக்கு வரவில்லை. தான் ஏமாந்ததை உணர்ந்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகள் 66(C) மற்றும் 66(D) மற்றும் BNS-இன் பிரிவுகள் 318(4) மற்றும் 308(6) ஆகியவற்றின் கீழ் CEN காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எந்த ஒரு விஷயத்திற்கும் ஆன்லைன் பரிவர்த்தனை தீர்வல்ல. மேலும் எந்த குற்றம் செய்தாலும் முதலில் காவல்துறையினர் காவலில் வைத்து அதன் பிறகு கோர்ட் விசாரணையை முடித்த தான் எந்தவித தண்டனையும் வழங்கப்படும். எனவே யாரேனும் உங்களிடம் பார்சல் வந்திருப்பதாக கூறி மோசடி செய்தாலோ, உங்களுடைய போன் நம்பர் தவறாக பயன்படுத்தப்பட்டதாக கூறி பேசினாலோ அவற்றை தீர விசாரிப்பது தான் நல்லது. ஒருவேளை இந்த நபர் அழைப்பு வந்தவுடன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்திருந்தால் இவ்வளவு பெரிய நிதி இழப்பு ஏற்படாமல் இருந்திருக்கும்


Click it and Unblock the Notifications