ரூ.10000 கோடிக்கு அதிபதியான நித்தியானந்தா மரணமா? பரபரப்பை ஏற்படுத்தும் சகோதரி மகன் வீடியோ உண்மையா..?

தமிழ்நாட்டின் மிகவும் சர்ச்சைக்குரிய சாமியாரான நித்தியானந்தா இறந்துவிட்டதாக அவரது சகோதரியின் மகன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருப்பது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

நித்தியானந்தா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவரது சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் வீடியோவில் தெரிவித்துள்ளார். ஆனால் உருவாக்கிய கைலாசாவில் இருந்து யாரும் இதை உறுதிப்படுத்தவில்லை. இந்த நிலையில் மாலையில் நித்தியானந்தா தரப்பில் இத்தகவல் பொய்யானது என விளக்கம் கொடுத்துள்ளது.

ரூ.10000 கோடிக்கு அதிபதியான நித்தியானந்தா மரணமா? பரபரப்பை ஏற்படுத்தும் சகோதரி மகன் வீடியோ உண்மையா..?

இந்த நிலையில், நித்தியானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் வெளியிட்ட வீடியோவில், "இந்து தர்மத்தைக் காக்க நித்தியானந்தா உயிர்த் தியாகம் செய்துவிட்டார்" என்று கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. எனினும், சுந்தரேஸ்வரர் கூறியது உண்மையா என்பது இன்னும் உறுதியாகவில்லை. கைலாசா நிர்வாகம் இந்த தகவல் குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. நித்தியானந்தாவின் மரணம் குறித்து பல்வேறு ஊகங்கள் நிலவி வருகின்றன.

இதேபோல் பலரும் இதை ஏப்ரல் 1 முட்டாள் தினத்திற்காக போலியாக உருவாக்கப்பட்ட வீடியோ என்றும் கருத்து நிலவுகிறது. இதனால் அதிகாரப்பூர்வ தகவல் மூலம் மட்டும் இத்தகவல் உறுதி செய்யப்படும். மேலும் டிவிட்டரில் நித்தியானந்தா பக்கத்தில் கடைசியாக 6 மணிநேரத்திற்கு முன்பு ஒரு வீடியோ பகிரப்பட்டு உள்ளது. இதில் நித்தியானந்தா Real Hindu Yogic Hack to Unlock Brain Power & Focus Instantly என்ற தலைப்பில் பேசியுள்ளார்.

பரமஹம்ச நித்தியானந்தா-வின் இயற்பெயர் அ. ராஜசேகரன், 1977 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி, இந்தியாவின் ஆன்மீக நகரமான திருவண்ணாமலையில் பிறந்தார். அருணாசலம் மற்றும் லோகநாயகி ஆகியோருக்கு இரண்டாவது மகனாக பிறந்த நித்தியானந்தாவின் ஆரம்பக்கால வாழ்க்கை மிகவும் வறுமையில் இருந்தது, அவரின் வாழ்க்கைப் பாதை ஆன்மீகத்தில் நுழைந்த பின்பு சில வருடத்தில் பெரும் மாற்றத்தைக் கண்டது.

குறிப்பாக நித்தியானந்தா தியானபீடம் என்ற அறக்கட்டளையை அவர் நிறுவிய பின்பு அவரது வாழ்க்கையும், புகழும் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டார். இந்த அறக்கட்டளை, இந்தியா மட்டும் அல்லாமல் பல நாடுகளில் கோவில்கள், குருகுலங்கள் மற்றும் ஆசிரமங்களின் வழியமைப்பை உருவாக்கியுள்ளது.

இந்த அமைப்பு, சுமார் 10000 கோடி ரூபாய் நிகர மதிப்பு கொண்டது என பைனான்சியல் எக்ஸ்பிரஸ் 2023ல் தனது செய்தியில் தெரிவித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் இவரிடம் கிலோ கணக்கில் தங்கம் இருப்பதாகவும் தெரிகிறது.

நித்தியானந்தா தனது 17 வயதில், ஆன்மீக தேடலால் தூண்டப்பட்டு, அவர் தனது வீட்டை விட்டு வெளியேறினார். தெய்வீகம் மற்றும் தியானம் என தனது வாழ்க்கை மாறி தற்போது இந்தியாவின் பிரபல சாமியாராக உள்ளார். கடந்த சில வருடங்களாக இந்தியாவில் இருந்து வெளியேறிய அவர் தான் சொந்தமாக உருவாக்கிய கைலாசாவில் இருந்துகொண்டு உலகம் முழுவதும் இருக்கும் தனது பக்தர்களிடம் வீடியோ வாயிலாக பேசி வருகிறார்.

2019 ஆம் ஆண்டில், அவர் இந்தியாவை விட்டு வெளியேறி, கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியதாக அறிவித்தார். கைலாசா ஒரு கற்பனையான தீவு நாடாக நம்பப்படுகிறது. இது ஐக்கிய அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நித்தியானந்தாவின் இந்த ஆன்மீக பயணம், பல சர்ச்சைகளையும் உள்ளடக்கியது. அவரது போதனைகள், நடைமுறைகள் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவை பல விமர்சனங்களைச் சந்தித்தன. பாலியல் குற்றச்சாட்டுகள், நில அபகரிப்பு வழக்குகள் மற்றும் பல சட்ட சிக்கல்களில் அவர் சிக்கினார்.

நித்தியானந்தாவின் இறப்பு குறித்து பல்வேறு ஊகங்கள் நிலவி வருகின்றன. நித்தியானந்தாவின் இறப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக அவரது பக்தர்கள் காத்திருக்கின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+