விமான பயணம் என்பது பலருக்கும் கனவு பயணமாக இருக்கும். அப்படிப்பட்ட உங்கள் கனவை வெறும் 9 ரூபாயில் நிறைவேற்ற ஒரு சலுகை உள்ளது.
அதுவும் இந்தியாவில் அல்ல சர்வதேச நாடான வியட்நாமுக்கு பயணிக்க இத்தகைய ஆஃபர் கிடைத்துள்ளது. சர்வதேச விமான நிறுவனமான வியட்ஜெட் தான் இத்தகைய ஆஃபரை வாரி வழங்கியுள்ளது.
அதெல்லாம் சரி இந்த ஆஃபரின் முழு விவரம் என்ன? எப்போது புக் செய்யலாம்? மற்ற கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன வாருங்கள் பார்க்கலாம்.
புரோமோஷனல் டிக்கெட்
இன்று நம்மூரில் உள்ள ரயில் நிலையங்களில் உள்ள பிளாட்பார்ம் டிக்கெட்களின் விலையை விட குறைச்சலா இருக்கே என்பது புரிகிறது. வியட்ஜெட் ஏர்லைன்ஸின் இந்த ஆஃபரானது 30,000 புரோமோஷனல் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே. இந்த டிக்கெட்கள் மூலம் ஆகஸ்ட் 15 முதல் மார்ச் 26 வரையில் பயணித்துக் கொள்ளலாம்.
எப்போது வரை புக் செய்யலாம்?
இதற்கான டிக்கெட்டுகளை ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 26 வரையில் புக் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆஃபரானது நாளை முடிவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யும்போது, இந்த விளம்பர டிக்கெட்டுகளுக்கு உரிமை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எங்கிருந்து எங்கு வரை?
இந்த சலுகையானது டெல்லி, மும்பை, அகமதாபாத் மற்றும் ஹைத்ராபாத் முதல் வியட்நாம் வரையில் பயணித்துக் கொள்ள முடியும். இதில் வியட்நாமின் தலை நகரான ஹனோய், ஹோ சி மின், டா நாங் மற்றும் ஃபூ குவோக் உள்ளிட்ட சுற்றுலா நகரங்களுக்கும் பயணித்துக் கொள்ளலாம்.
சுற்றுலா தலம்
இந்தியா வியட்நாமில் பயண சந்தையை வளர்ப்பதற்கும், இரு நாடுகளிலும் உள்ள தேவையை அதிகரிக்கும் விதமாக இத்தகைய சலுகையை அறிவித்திருப்பதாக வியட்நாம் தூதர் தெரிவித்துள்ளார். இந்திய சுற்றுலாப் பயணிகளிடையே வலுவான சுற்றுலா தலமாக வியட்நாம் உருவாகி வருவதாக வியட்நாமின் தூதர் பாம் சான் சாவ் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.
விசா நடைமுறையும் எளிது
இதற்கான விசா நடைமுறையும் தற்போது எளிமைப்படுத்தப்பட்டுள்ளது, இனி தூதரகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. தற்போது அதிக எண்ணிக்கையில் வியட்நாம் சென்று வர ஏராளமான விண்ணப்பங்கள் வருகின்றன. கொரோனாவுக்கு பிறகு சராசரியாக விசாக்களின் எண்ணிக்கை 24 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications