சீனா-வின் வளர்ச்சியைக் கண்டு மிரண்டு போன அமெரிக்கா பல காரணங்களுக்காக டிரம்ப் ஆட்சி காலத்தில் இருந்தே சீனாவுக்கும், சீனாவில் இருக்கும் நிறுவனங்களுக்கும் நெருக்கடி கொடுக்கத் துவங்கியது.
இந்த நிலையில் தான் சீனாவில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் அனைத்தும் அந்நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்தது. இவை அனைத்தும் கொரோனா தொற்றுக்கு முன்பே நடந்தது, இக்காலகட்டத்தில் சீனா-வை வெளியேறிய பெரும்பாலான நிறுவனங்கள் தனது உற்பத்தி தளத்தை வியட்நாம் நாட்டில் தான் அமைத்தது. பின்னாளில் இந்தியா அதிகப்படியான நிறுவனங்களை ஈர்த்தது.
இந்த 3 வருடத்தில் வியட்நாம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வளர்ச்சி அடைந்தது மட்டும் அல்லாமல் அந்நாட்டு அரசு நிர்ணயம் செய்த இலக்கை விடவும் அதிகப்படியான வளர்ச்சியைப் பதிவு செய்து பெரும் வளர்ச்சியைக் கண்டு உலக நாடுகளை வியக்க வைத்துள்ளது.
வியட்நாம்
வியட்நாம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2022 இல் 8.02 சதவீதம் வளர்ச்சி அடைந்ததுள்ளது. இது 1997 முதல் பதிவான வருடாந்திர வளர்ச்சியில் மிகப்பெரிய அளவாகும். வியட்நாம் நாட்டின் வலுவான உள்நாட்டுச் சில்லறை விற்பனை மற்றும் ஏற்றுமதியின் ஆதரவு உடன் தற்போது பிரம்மாண்ட வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
வியாட்நாம் வளர்ச்சி
2022 ஆம் ஆண்டில் வியாட்நாம் நாட்டின் வளர்ச்சி இலக்கு 6.0 - 6.5 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது இலக்கை காட்டிலும் மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இந்நாட்டின் வளர்ச்சி வெறும் 2.58 சதவீதமாக இருந்த நிலையில் 2022 ஆம் ஆண்டில் 8.02 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
கோவிட்-19 தொற்று
2021 ஆம் ஆண்டில் கோவிட்-19 தொற்றுக் காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் இந்நாட்டின் வர்த்தகம், உற்பத்தி, ஏற்றுமதி அளவுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் பொருளாதாரத்திலும், தொழிற்சாலை செயல்பாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.
டிமாண்ட்
உலகளாவிய மந்தநிலை மற்றும் வியட்நாம் நாட்டின் தயாரிப்புகளுக்கு உலக நாடுகளில் இருக்கும் டிமாண்ட் குறையும் என அச்சம் இருந்த வேளையில் வியட்நாம் நாட்டின் ஏற்றுமதியில் தாக்கம் பற்றிய அச்சங்கள் இருந்தபோதிலும், 2022 ஆம் ஆண்டில் அதிகப்படியான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
நிச்சயமற்ற தன்மை
உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் சவால்களுக்கு மத்தியில் வியட்நாம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அளவு மிகவும் கவனிக்கத்தக்கது என்று பொதுப் புள்ளியியல் அலுவலகம் (GSO) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
GDP வளர்ச்சி
2022 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 13.71 சதவீதம் வளர்ச்சியில் இருந்து நான்காவது காலாண்டில் வியட்நாம் நாட்டின் GDP வளர்ச்சி 5.92 சதவீதம் ஆகக் குறைந்துள்ளது என்று GSO தெரிவித்துள்ளது.
ஏற்றுமதி
2022 இல் வியட்நாம் நாட்டின் ஏற்றுமதி 10.6 சதவீதம் அதிகரித்து 371.85 பில்லியன் டாலராக இருந்தது, அதே சமயம் சில்லறை விற்பனை 19.8 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த ஏற்றுமதியும் சில்லறை விற்பனையும் பெரிய அளவிலான ஜிடிபி வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இந்திய பொருளாதார வளர்ச்சி
இந்த நிலையில் இந்திய பொருளாதார வளர்ச்சி 2022-23 ஆம் நிதியாண்டில் 6.9 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது. இதற்கு முன்பு 6.5 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications