விஜய் முதலமைச்சரானவுடன் முதல் கையெழுத்து என்ன? பெண்களுக்கு குட் நியூஸ் காத்திருக்கு..!!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சி உருவெடுத்திருக்கிறது. கூடிய விரைவில் கூட்டணியோடு விஜய் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க போகிறார் முதலமைச்சராகவும் பதவி ஏற்க போகிறார்.

தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக வாக்காளர்கள் இந்த முறை அதிகளவிலான வாக்குகளை தமிழக வெற்றி கழகத்திற்கு வழங்கியிருக்கிறார். வாரிசு அரசியல் வேண்டாம் , மாற்றம் வேண்டும் , விஜய் எனும் ஒற்றை ஆள் என இந்த தேர்தலில் மக்கள் தவெகவை தேர்ந்தெடுத்ததற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது தவெகவின் தேர்தல் அறிக்கை.

விஜய் முதலமைச்சரானவுடன் முதல் கையெழுத்து என்ன? பெண்களுக்கு குட் நியூஸ் காத்திருக்கு..!!

தமிழக வெற்றிக் கழகம் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கொடுத்த முக்கியமான வாக்குறுதிகள் என்னென்ன என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம்:

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 நிதி

ஆண்டுக்கு 6 எல்பிஜி சிலிண்டர்கள் இலவசம்

திருமணத்திற்கு 1 சவரன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை

பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

முதியோர், கைம்பெண், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 ஆயிரம் நிதி

பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம்

குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் மருத்துவ காப்பீடு

ஆண்டுதோறும் இலவச முழு உடல் பரிசோதனை

போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு திட்டம்

200 யூனிட் இலவச மின்சாரம்

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4 ஆயிரம்

5 லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் உருவாக்கம்

தொழில் தொடங்க ரூ.25 லட்சம் கடன்

விவசாயிகளுக்கு ரூ.15 ஆயிரம் ஆண்டு உதவித்தொகை

பயிர்க்கடன் தள்ளுபடி, 100 சதவீதம் பயிர் காப்பீடு

மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.27 ஆயிரம்

Also Read

விஜய் பதவி ஏற்ற உடன் முதலில் எந்த திட்டத்தில் கையெழுத்திடப் போகிறார் என்பதுதான் தற்போது எழுந்திருக்க கூடிய மிகப்பெரிய எதிர்பார்ப்பு. கணிசமான அளவு பெண்கள் வாக்குகள் வந்திருப்பதால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 2500 ரூபாய் நிதி உதவி வழங்கக்கூடிய திட்டத்தில் விஜய் முதலில் கையெழுத்திடுவார் அல்லது திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை வழங்கக்கூடிய திட்டத்தில் அவர் கையெழுத்திடுவார் என்று சொல்லப்படுகிறது.

Recommended For You

ஏற்கனவே தமிழ்நாடு 10 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருக்கக்கூடிய சூழலில் விஜய் -இன் பிரம்மாண்டமான இலவசங்கள் மற்றும் உதவி தொகைகளுக்கான நிதியை திரட்ட முடியுமா, இது ஒட்டுமொத்தமாக மாநிலத்தின் பொருளாதாரத்திலேயே தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுகிறது.

விஜய் இந்த திட்டங்களை எவ்வளவு திறமையாக கையாள போகிறார் , மாநிலத்தின் நிதியையும் மேம்படுத்தி மக்களுக்கான இந்த திட்டங்களையும் எப்படி செயல்படுத்த போகிறார் என்பதுதான் அவர் முன்னர் இருக்கக்கூடிய முக்கியமான ஒரு சவாலாக இருக்கிறது. அதனை தாண்டி கூட்டணி கட்சிகளையும் பகைத்து கொள்ளமால் ஆட்சி நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்பதால் விஜய் இவற்றை எல்லாம் எப்படி கையாள போகிறார் என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+