தமிழ்நாட்டில் சினிமா ரசிகர்கள் மத்தியில் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியிருப்பது நடிகரும், TVK கட்சி தலைவருமான விஜய்யின் விவாகரத்து மனு தான். செங்கல்பட்டு குடும்பநீதிமன்றத்தில் அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்த மனுவில் விஜய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தியது மட்டும் அல்லாமல் விஜய்யின் வருமானம் மற்றும் சமூக அந்தஸ்துக்கு ஏற்ப ஒரு கவுரவமான மற்றும் நியாயமான ஜீவனாம்ச தொகையை தனக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.
இதன் மூலம் சமூக ஊடகங்களில் பலர் கேட்கும் முக்கியமான கேள்வி: "வழக்கு சங்கீதாவுக்கு சாதகமாக சென்றால், விஜய் தனது சொத்தில் 50% கட்டாயமாக வழங்க வேண்டுமா?" என்பது தான். ஜெப் பெசோஸ் - மெக்கென்சி ஸ்காட், பில் கேட்ஸ் - மெலின்டா போன்றோர் விவாகத்தில் கனவரின் சொத்தில் பெரும் பகுதி சொத்துகளை மனைவிகள் பெற்றார்.

இந்த நிலையில் இந்தியாவில் காஸ்ட்லியான விவாகரத்து என்றால் ஸ்ரீதர் வேம்பு பிரமிளா ஸ்ரீனிவாசன் விவாகரத்து தான், 15000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த வழக்கு தற்போது நடந்து வருகிறது. திரையுலகை எடுத்துக்கொண்டால் 2014ல் நடந்த ஹிருத்திக் ரோஷன் மற்ரும் சுசேன் கான் விவாகரத்து தான், இதில் சுசேன் சுமார் 380 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை பெற்றார்.
இந்த நிலையில் விஜய்-யின் சொத்து மதிப்பு 600 கோடி ரூபாயாக இருக்கும் நிலையில், சங்கீதாவுக்கு ஜீவனாம்சமாக 50 சதவீத சொத்துக்கள் கிடைக்குமா..?
இந்த கேள்விக்கு நேரடியான பதில் - இல்லை. இந்தியாவில் விவாகரத்து நடந்தால் கணவரின் சொத்தின் 50% மனைவிக்கு தானாக வழங்கப்படும் என்ற விதி எதுவும் இல்லை. இது மேற்கத்திய நாடுகளில் காணப்படும் '50-50 property split' முறை. இந்திய சட்டம் வேறுபட்ட பாதையைப் பின்பற்றுகிறது.
இந்திய சட்டம் என்ன சொல்கிறது?
இந்த விவகாரம் பெரும்பாலும் 1955 ஆம் ஆண்டின் இந்து திருமணச் சட்டத்தின் கீழ் பார்க்கப்படுகிறது. இந்தச் சட்டம் இந்துக்கள், அதில் விஜய் மற்றும் சங்கீதா போன்றவர்களுக்கும் பொருந்தும்.
இந்தியாவில் "community property" என்ற நிலைப்பாடு இல்லை. அதாவது திருமண காலத்தில் சம்பாதித்த அனைத்தும் தானாக சமமாகப் பிரிக்கப்படும் என்ற விதி இல்லை. திருமணத்திற்கு முன் ஒருவர் வைத்திருந்த சொத்து அல்லது அவரின் பெயரில் வாங்கப்பட்ட சொத்து அவருக்கே சொந்தமானதாகவே தொடரும்.
நீதிமன்றம் பார்க்கும் முக்கிய அம்சம் "நியாயம்". யார் எவ்வளவு சம்பாதித்தார்கள்? யார் வீட்டுப் பொறுப்பை ஏற்றார்கள்? குழந்தைகளின் தேவைகள் என்ன? வாழ்க்கை முறை எப்படி இருந்தது? போன்ற பல அம்சங்களை ஆய்வு செய்து தான் தீர்ப்பு வழங்கப்படும்.
ஜீவனாம்சம் என்றால் என்ன?
ஜீவனாம்சமாக அல்லது அலிமனி அல்லது பராமரிப்பு தொகை என்பது சொத்து பகிர்வு அல்ல. அதிக வருமானம் பெறும் துணை (பொதுவாக கணவர்) மற்றவரின் எதிர்கால வாழ்க்கை பாதுகாப்புக்காக வழங்கும் நிதி உதவி.
இந்து திருமணச் சட்டம் பிரிவு 25ன் கீழ் "நியாயமான மற்றும் பொருத்தமான" தொகையை நீதிமன்றம் நிர்ணயிக்கலாம். சில வழக்குகளில் மாத வருமானத்தின் சுமார் 25% வரை பராமரிப்பு தொகை வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் இது கட்டாயமான நிலையான சதவீதம் அல்ல. ஒவ்வொரு வழக்கும் தனித்தனியாக மதிப்பீடு செய்யப்படும்.
50% சொத்து வழங்கிய வரலாறு?
இந்தியாவில் கணவரின் மொத்த சொத்தில் சரியாக 50% வழங்க நீதிமன்றம் கட்டாயப்படுத்திய தீர்வு இதுவரை எந்த வமுக்கிய வழக்கு எதுவும் இல்லை.
2024 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற வழக்கான Rinku Baheti vs Sandesh Sharda வழக்கில் மனைவிக்கு ரூ.12 கோடி நிரந்தர ஜீவனாம்சமாக வழங்கப்பட்டது. ஆனால் அது கணவரின் முழு சொத்தின் பாதி அல்ல.
பிரபல விவாகரத்து வழக்கான Hrithik Roshan - Sussanne Khan வழக்கில் ரூ.380 கோடி என பேசப்பட்டாலும், அது நீதிமன்றம் கட்டாயப்படுத்திய 50% பகிர்வு அல்ல; இருதரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் முடிவானது.
விஜய்-சங்கீதா வழக்கில் என்ன நடக்கலாம்?
சங்கீதா மனுவில் உணர்ச்சி, மன மற்றும் உடல் புறக்கணிப்பு, கள்ளதொடர்பு குற்றச்சாட்டு உள்ளிட்ட காரணங்களை முன்வைத்துள்ளார். 27 ஆண்டுகள் திருமண வாழ்க்கை, இரண்டு குழந்தைகள், விஜய்யின் திரைப்பட மற்றும் அரசியல் வருமானம் போன்றவை நீதிமன்றம் கவனிக்கும் முக்கிய அம்சங்களாக இருக்கும்.
விஜய்யின் நிகர சொத்து மதிப்பு 600 கோடிக்கு மேல் என மதிப்பிடப்பட்டாலும், அதில் 50% தானாக வழங்கப்படும் என்ற சட்டம் இல்லை. இருவரின் பெயரில் கூட்டு சொத்துகள் இருந்தால் அவை தனியாக மதிப்பீடு செய்யப்படும். சங்கீதாவின் தனிப்பட்ட சொத்துக்கள் (நகை, ரியல் எஸ்டேட் சொத்துக்கள்) அவருக்கே உரிமை.
ஜீவனாம்சமாக தொகை மாதாந்திரமாகவோ அல்லது ஒருமுறை பெரிய தொகையாகவோ இருக்கலாம். விஜய்-யின் 600 கோடி ரூபாய் சொத்து, அரசியல் வாழ்க்கை கருத்தில் கொண்டால், பெரிய தொகை வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அது 50% என்ற கணக்கில் இருக்க வேண்டிய அவசியமில்லை.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications