ரூ.2500 மகளிர் உரிமை தொகை வாக்குறுதியை நிறைவேற்றுவாரா விஜய்? – ஆகஸ்ட் 5இல் பட்ஜெட் தாக்கல்..!!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடந்ததால் கடந்த திமுக ஆட்சியில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. புதிதாக அமையும் அரசு தான் இந்த நிதியாண்டுக்கான முழு நீள பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும். அந்த வகையில் விஜய் அரசு எப்போது பட்ஜெட் தாக்கல் செய்யும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் தமிழக சட்டசபை கூட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார்.

ரூ.2500 மகளிர் உரிமை தொகை வாக்குறுதியை நிறைவேற்றுவாரா விஜய்? – ஆகஸ்ட் 5இல் பட்ஜெட் தாக்கல்..!!

பட்ஜெட் தொடர் தொடர்பாக, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தமிழக சட்டசபையில் ஆகஸ்டு 5ஆம் தேதி காலை 10 மணிக்கு 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் அடுத்த நாள் அதாவது ஆகஸ்ட் 6ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவித்தார்.பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என அவர் கூறினார்.

ஆகஸ்ட் 5ஆம் தேதி 2026-27ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அம்சங்களை பட்டியலிட்டு பேசுவார். அடுத்த நாள், 2026-27ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. வேளாண் துறை அமைச்சர் வினோத், இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வார். தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதமும், அமைச்சர்களின் பதிலுரையும் இடம்பெறும். அதன்பின்னர், துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறும்.

Also Read

தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதல் பட்ஜெட் இது என்பதால், தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் அறிவிப்புகளாக இதில் இடம்பெறுமா என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை மாண்புமிகு மகளிர் திட்டமாக மாற்றி 2,500 ரூபாய் பெண்களுக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பை பெண்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர்.

Recommended For You

தவெக சார்பில் தேர்தலின் போது பெண்களுக்கு அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணம், திருமணத்தின் போது தங்கம் வழங்கும் அண்ணன் சீர் திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அவை குறித்தும் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் சீர் திட்டம் செப்டம்பர் முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மற்ற திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் வாக்குறுதிகள், வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில் முதலீடுகளை ஈர்க்கும் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெறலாம் என சொல்லப்படுகிறது. தொடர்ந்து பட்ஜெட் குறித்து ஆய்வு கூட்டங்களை பல துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் நடத்தியுள்ளார். முன்னதாக விஜய் அரசு தமிழக நிதி நிலவரம் குறித்த வெள்ளை அறிக்கை தாக்கல் செய்திருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+