பங்குச் சந்தையில் பணத்தை போடாதே, பங்குச் சந்தையில் பணத்தை போட்டு விட்டாயா அப்ப அதை மறந்துவிடு, பங்குச் சந்தையில் ஜெயித்தவர்களை விட தோற்றவர்கள் தான் அதிகம் என்று பலரும் கூறுவதை கேட்டு இருப்போம்.
இதேவேளையில் குறுகிய காலத்தில் அபரிதமான லாபம் ஈட்டுவதற்கு ஒரு அற்புதமான இடம்தான் பங்குச் சந்தை என்று அவர்களுக்கு தெரிவதில்லை. அதற்கு உதாரணமாக பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளர் விஜய் கேடியாவை நாம் குறிப்பிடலாம்.

அண்மையில் எலிகான் இன்ஜினீயரிங் கம்பெனி பங்குகளை நல்ல லாபத்தில் விற்பனை செய்ததற்காக பெரிய அளவில் பிரபலமானவர் விஜய் கேடியா. இவர் பங்குச் சந்தையில் சுமார் ரூ.800 கோடி மதிப்பிலான சொத்துக்களை சேர்த்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிறந்தவர் விஜய் கேடியா. இவரின் ஆரம்ப கட்ட வாழ்க்கை துயரங்களால் நிரம்பியது. விஜய் கேடியாவின் தந்தை பங்கு தரகராக இருந்தார். விஜய் கேடியாவுக்கு பத்து வயதாக இருக்கும் போது அவரது தந்தை காலமானார். இதனால் அவரது குடும்பம் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்தது, விஜய் கேடியாவின் கல்வியையும் பாதித்தது.
விஜய் கேடியா தனது 19வது வயதில் பங்குச் சந்தை வர்த்தகத்தில் களம் இறங்குகிறார். பங்குச் சந்தையால் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் ஆறு பேருடன் ஒரு அறையை பகிர்ந்து கொள்ளும் சூழலை சந்திக்கிறார். இருப்பினும் விஜய் கேடியா மளம் தளரவில்லை. 1992ம் ஆண்டில் பங்குச் சந்தையில் ஒரு வலுவான ஏற்றம் தொடங்கியது. போட்ட இடத்தில் தான் தேட வேண்டும் என்பது போல் விஜய் கேடியா பங்குச் சந்தையில் மீண்டும் பணத்தை முதலீடு செய்கிறார்.
இந்த முறை பங்குச் சந்தை அவரை கைவிடவில்லை. விஜய் கேடியா பஞ்சாப் டிராக்டர்ஸ் பங்குகளில் முதலீடு செய்தார், பின்னர் அதை 500 சதவீத லாபத்தில் விற்றார். இதில் கிடைத்த வருமானத்தில் ஏ.சி.சி. பங்குகளை வாங்கி, அதை சுமார் 1000 சதவீத லாபத்தில் விற்றார். இந்த வெற்றி விஜய் கேடியாவின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.
மும்பையில் சொந்தமாக ஒரு வீட்டை வாங்கினார். இருப்பினும் விஜய் கேடியா எப்போதும் வெற்றியை மட்டுமே சந்திக்கவில்லை. ஏனெனில் பங்குச் சந்தை வீழ்ச்சி கண்டபோது ஒரு துன்பத்தை சந்தித்தார். இருந்தாலும் 2002-03ல் பங்குச் சந்தை மீண்டும் ஏற்றம் கண்டபோது அவர் கணிசமான லாபத்தை அள்ளினார்.
விஜய் கேடியா இன்று நாட்டின் பிரபலமான மற்றும் மரியாதைக்குரிய மற்றும் திறமையான முதலீட்டாளர்களில் ஒருவராக உள்ளார். பங்குச் சந்தையில் விஜய் கேடியாவின் அசாதாரண வெற்றி அவரது ஆழ்ந்த அறிவு மற்றும் முதலீடு புத்திசாலித்தனத்திற்கு சான்றாகும்.
ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். போன்ற பெரிய கல்வி நிறுவனங்களில் பட்டங்களை பெற்ற சில உயர் சாதனையாளர்களை போலல்லாமல், விஜய் கேடியா தனது செல்வத்தை அடித்தளத்தில் இருந்து கட்டியெழுப்பினார். தற்போது கோடிகளில் கொழிக்கும் விஜய் கேடியா ஒரு காலத்தில் தனது குழுந்தைக்கு பால் வாங்குவதற்காக 14 ரூபாய் இல்லாமல் கஷ்டப்பட்டார்.
விஜய் கேடியா தனது வாழ்க்கை பயணத்தை பற்றி குறிப்பிடுகையில், 19 வயதில் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட தொடங்கினேன். சுமார் ரூ.35 ஆயிரம் மதிப்பிலான பங்குகள் சரிவை சந்தித்தது. வெறும் 15 நாட்களில் முன்பேர வர்த்தகத்தில் ஈடுபட்டு இந்த நஷ்டத்தை மீட்டெடுக்க ஆசைப்பட்டேன். கடவுளிடம் வேண்டினேன் மற்றும் இந்த இக்கட்டான நிலையில் இருந்து நான் காப்பாற்றப்பட்டால் மீண்டும் பங்குச் சந்தையில் நுழைய மாட்டேன் என்று சபதம் எடுத்தேன் என்று தெரிவித்தார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications