இந்தியாவில் கடன் வாங்கிவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி சென்று அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருபவர்களில் ஒருவர் விஜய் மல்லையா. இவர் இங்கிலாந்த் மற்றும் பிரான்சில் 330 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வாங்கியுள்ளதாக CBI குற்றப்பத்திரிக்கையில் கூறியுள்ளது.
இந்த சொத்துகள் 2015 - 16ம் ஆண்டில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் மிக நெருக்கடியான சூழலை எதிர்கொண்ட சமயம் வாங்கியதாக கூறப்படுகின்றது.
இந்த காலகட்டத்தில் வங்கிகளில் கடனை செலுத்தாமல் நிலுவையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த காலகட்டத்தில் இப்படி சொத்து வாங்கியிருப்பது பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
கடன் மோசடி
விஜய் மல்லையா வங்கிகளில் கடன் வாங்கி விட்டு கடனை திரும்ப செலுத்தாமல் நாடு விட்டு, நாடு தப்பியோடியவர். ஐடிபிஐ வங்கியில் 900 கடன் மோசடியில் சிபிஐ விசாரித்து வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவராவார்.
விஜய் மல்லையா வங்கி அதிகாரிகளுடன் நல்லுறவை வைத்துக் கொண்டு மோசடி செய்து கடன் வாங்கியதும் கண்டறியப்பட்டது. இது குறித்து ஐடிபிஐ வங்கியின் முன்னாள் அதிகாரியான தாஸ் குப்தா என்பவர் தனது அதிகாரத்தினை தவறாக பயன்படுத்தி, மோசடி செய்ததாகவும் தகவல்கள் வெளியானது.
கடன் வரம்பை மீறி கடன்
கடன் வரம்பையும் மீறி, விதிமுறைகளை மீறி பொருட்படுத்தாமலும் கிங்பிஷர் நிறுவனத்துக்கு ஐடிபிஐ வங்கி கடன் கொடுத்துள்ளது. பொதுத்துறை வங்கிகள் குழுவாக, விஜய் மல்லையாவுக்கு கடன் கொடுத்த நிலையில், அது பிரச்சனையில் இருக்கும்போது கூட ஐடிபிஐ வங்கி கடன் கொடுத்துள்ளது என்ற குற்றச்சாட்டும் இருந்தது.
விஜய் மல்லையாவுக்கு எதிராக வழக்கு
இதற்கிடையில் எஸ்பிஐ தலைமையிலான பாங்க் ஆப் பரோடா, கார்ப்பரேஷன் வங்கி, பெடரல் வங்கி, ஐடிபிஐ வங்கி, இந்திய ஓவர்சீஸ் வங்கி, ஜம்மு & காஷ்மீர் வங்கி, பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், யூகோ வங்கி, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, ஜேஎம் பைனான்ஷியல் அசெட் ரிகன்ஸ்ட்ரக்ஷன் உள்ளிட்ட 13 நிதி நிறுவனங்கள் ஒருங்கிணைந்து விஜய் மல்லையாவுக்கு எதிரான வழக்கை நடத்தி வருகின்றன.
பல் கேள்விகள்
விஜய் மல்லையா ஒட்டுமொத்தமாக 17 வங்கிகளில் ரூ.9000 கோடி அளவிற்கு கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தாமல் நாட்டை விட்டே தப்படியோடிவர். ஆனால் இந்த கடன் என பல்வேறு பிரச்சனைகள் இருந்தாலும், அந்த காலகட்டத்தில் மோசடியாக சொத்தும் வாங்கியிருப்பது இன்னும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications