ஒரு காலத்தில் இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா, கடன் பிரச்சனையால் லண்டனுக்கு தப்பிச் சென்றார்.
கடன் பிரச்சனை காரணமாக லண்டனுக்கு தப்பி ஓட்டம் பிடித்த விஜய் மல்லையா, இந்தியாவில் 10க்கும் மேற்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் 9,000 கோடி ரூபாய் கடனை பெற்று விட்டு, அதனை கட்டாமல் லண்டனுக்கு தப்பி சென்றார்.
இதனால் இந்தியாவில் பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இவர், லண்டன் அரசிடம் தஞ்சமடைந்து அங்கு வாழ்ந்து வந்தார்.
யார் இந்த விஜய் மல்லையா?
கொல்கத்தாவை சேர்ந்த இவர் முன்னாள் ராஜ்ய சபா மற்றும் பாரளுமன்ற உறுப்பினரும் கூட. இவர் மதுபானம் மற்றும் விமானத் தொழிலில் முன்னணியில் இருந்தவர். யுனைடெட் ப்ரூவெரீஷ் க்ரூப்ஸ் மற்றும் கிங்க்பிஷ்ஸர் விமான நிறுவனத்தின் தலைவரான இவர், விளையாட்டு துறைகளிலும் முதலீடு செய்து வந்தவர்.
கடன் அதிகம்
இந்திய அரசு வங்கிகளில் கடன் வாங்கி விட்டு வெளிநாட்டுக்கு தப்பி போகலாம் என்று இந்தியாவுக்கு சொல்லிக் கொடுத்தவரே விஜய் மல்லையா தான் எனலாம். சுமார் 9000 கோடி ரூபாய் கடனை வாங்கி விட்டு, திருப்பி கட்டச் சொன்னால் கட்ட முடியாமல், நான் கடன் வாங்கவில்லை, கிங்க் பிஸ்ஷர் நிறுவனம் கடன் வாங்கியது என்று கூறியவர்.
சில சட்ட சிக்கல்கள்
இந்த நிலையில் தான் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அதில் பல சட்ட சிக்கல்கள் இருப்பதால் இந்தியாக்கு அழைத்து வர முடியாத நிலையே இருந்து வந்தது. அதோடு கொரோனா காலத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க முடியாத சூழலே இருந்து வந்தது. எனினும் இது குறித்தான வழக்கு விசாரணையும் தொடர்ந்து நடந்து வந்தது.
திவால் நடவடிக்கை எடுக்க வேண்டும்
வங்கிகள் சார்பில், விஜய் மல்லையா சார்பில் அவரது மதுபான நிறுவன சொத்துகள், அவரது கட்டுப்பாட்டில் இல்லை. எனவே, அந்த சொத்துகள் மூலம் கடனை திருப்பிச் செலுத்துவதாக அவர் கூறுவதை நிச்சயம் ஏற்க முடியாது. மல்லையா மீது திவால் நடவடிக்கை எடுத்து, எங்கள் பணத்தை பெற்றுத்தர வேண்டும் என்று வங்கிகள் தரப்பில் கூறப்பட்டது.
வங்கிகளுக்கு மிகப்பெரிய வெற்றி
இப்படி பல பிரச்சனைகளுக்கும் நடுவில் தான் விஜய் மல்லையாவை திவால் ஆனவர் என லண்டன் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. இது எஸ்பிஐ தலைமையிலான வங்கிகளுக்கு மிகபெரிய வெற்றி என்றே கூறலாம். இதன் மூலம் வங்கிகளுக்கு தாங்கள் கொடுத்த கடனை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மே மாத விசாரணை
கடந்த மே மாதம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தப்பட்ட உயர் நீதிமன்ற விசாரணையில், வங்கிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட திவால் மனுவை நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இந்தியாவில் விஜய் மல்லையா கடன் பெறுவதற்கு ஈடாக சொத்துகள் வைத்துள்ளதாகக் கூறி நிறுத்தி வைத்தது.
சொத்துகளை
இதற்கிடையில் தான் சமீபத்தில் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று இங்கிலாந்து அரசு விஜய் மல்லையாவை கைது செய்தது. அவர் மீதான விசாரணை பிரிட்டன் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், விஜய் மல்லையாவின் சர்வதேச அளவிலான சொத்துக்களை முடக்க பிரிட்டன் உயர் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.
வங்கிகளுக்கு அனுமதி
விஜய் மல்லையாவுக்கு எதிரான இந்த திவால் உத்தரவால், அவரது சொத்துக்களை முடக்க இந்திய வங்கிகளுக்கு நிபந்தனையற்ற அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதனால், மல்லையாவின் சொத்துக்களை முடக்கி கொடுத்த கடன் தொகையை மீட்க, வங்கிகளுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது எனலாம். இதற்கு மத்தியில் விஜய் மல்லையா நாடு கடத்தப்படுவாரா? இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications