இந்தியாவில் கிங் ஆஃப் குட்டைம்ஸ் என பெருமையை கொண்டு வலம் வந்த விஜய் மல்லையா, கொண்டாட்டம் நிறைந்த ஆடம்பரமான வாழக்கையை மட்டும் அல்லாமல் வருடத்தின் 365 நாளும் பணம் கொட்டும் மதுபான வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை கொண்டு இருந்தார். இவரது முதல் தவறு இந்திய சந்தையில் தவறான காலத்தில் ஆடம்பர விமான சேவையை துவங்கி அதை காப்பாற்ற தொடர்ந்து கடன் வாங்கியது தான்.
அதீத கடன், கிங்பிஷர் திவால், வாங்கிய கடனை முறைகேடாக பயன்படுத்தியது என அடுத்தடுத்த பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டு நாட்டை விட்டே ஓடினார் விஜய் மல்லையா. லண்டனில் வசித்து வரும் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வருவது குறித்து மத்திய அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது.

இப்படி கடந்த சில வருடங்களாக பிரச்சனைகளும், சோகங்களும் நிறைந்த விஜய் மல்லையா வீட்டில் விரைவில் கெட்டிமேள சத்தம் கேட்க உள்ளது.
விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா, வெளிநாடுகளில் தற்போது கோலாகலமாக கொண்டாடப்படும் ஹாலோவீன் பார்ட்டியில் தனது காதலியான ஜாஸ்மின்-க்கு ப்ரோபோஸ் செய்தார்.
கலிப்போர்னியா லாஸ் ஏஞ்சல்ஸ் -ல் நடந்த இந்த ஹாலோவீன் பார்ட்டியில் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா தனது பல வருட காதலியான ஜாஸ்மின்-ஐ திருமணம் செய்துகொள்வதற்காக ப்ரோபோஸ் செய்தார், இதை அவரும் ஏற்றுக்கொண்டார். இந்த ப்ரோபோஸ் போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சித்தார்த் மல்லையா-வுக்கு அவருடைய பாலோவர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
சித்தார்த் மல்லையா தனது நிச்சயதார்த்தத்தின் சில படங்களை நவம்பர் 1 ஆம் தேதி Instagram இல் வெளியிட்டார். முதல் படம் அவர் ஹாலோவீன் மந்திரவாதி காஸ்டியூம் அணிந்து தரையில் மண்டியிட்டு தனது காதலி ஜாஸ்மினிடம் ப்ரோபோஸ் செய்தார்.

சித்தார்த் மல்லையா தற்போது நடிகராகவும், மாடலாகவும் உள்ளார். இவர் பிறந்தது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்-ல் வளர்ந்தது லண்டனில், இளம் வயதில் இருந்து ஆடம்பரத்தின் உச்சத்தில் வாழ்ந்து வந்த சித்தார்த் லண்டனின் வெலிங்டன் கல்லூரி மற்றும் லண்டனின் குயின் மேரி பல்கலைக்கழகத்தில் படித்தார். இதை தொடர்ந்து நடிப்பின் மீதான ஆர்வத்தால் லண்டன் ராயல் சென்ட்ரல் ஸ்கூல் ஆஃப் ஸ்பீச் அண்ட் டிராமா கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார்.
கலை கல்லூரியில் சித்தார்த் பட்டம் பெற்ற பின்பு மாடலாகவும் நடிகராகவும் பணியாற்றத் தொடங்கினார். அவர் பாலியல் நகைச்சுவைத் திரைப்படமான பிரம்மன் நாமன் உட்பட பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இடம்பெற்றுள்ளார். இதுமட்டும் அல்லாமல் ஒரு ஆன்லைன் வீடியோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் மற்றும் கின்னஸின் மார்கெட்டிங் மேனேஜர் ஆகவும் பணியாற்றினார்.


Click it and Unblock the Notifications