விஜய் மல்லையா ஒட்டுமொத்த இந்தியாவும் வியந்து பார்த்த ஒரு தொழிலதிபர், அவருடைய வெற்றி மற்றும் வீழ்ச்சி பற்றிய கதை நாம் அனைவரும் அறிந்ததே. அவரது மகன் சித்தார்த் மல்லையா குறித்து பலரும் தெரியும், இதேபோல் பல முறையில் செய்தியில் இடம்பெற்றுள்ளார்.
ஆனால் விஜய் மல்லையாவுக்கு லியானா மல்லையா, தான்யா மல்லையா மற்றும் லைலா மல்லையா ஆகிய மூன்று மகள்கள் இருப்பது பலருக்குத் தெரியாது. தெரியாதவர்களுக்கு லைலா விஜய் மல்லையாவின் மாற்றாள் மகள், நீங்கள் படித்தது சரிதான், அதாவது step daughter.

விஜய் மல்லையா தனது முதல் மனைவி சமீராவை பிரிந்து பெங்களூரில் தனது பக்கத்து வீட்டு பெண்ணான ரேகாவை மணந்தார். ரேகா, விஜய் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம். ரேகா ஷாஹித் மஹ்மூத் என்பவரை மணந்தார், அவருக்கு லைலா மற்றும் கபீர் மஹ்மூத் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவர்களது திருமணத்திற்கு பின்பு விஜய் மல்லையா இறுதியில், லைலாவை தத்தெடுத்தார். அவர் ஒரு முதலீட்டு வங்கியாளரான சமர் சிங்கை மணந்தார்.
ஏப்ரல் 6, 2019 அன்று பிறந்த லைலா பெங்களூருவில் உள்ள மல்லையா அதிதி சர்வதேசப் பள்ளியில் படித்தார். அவர் தனது பட்டப்படிப்பை பென்ட்லி பல்கலைக்கழகம், வால்தம், மாசசூசெட்ஸில் முடித்தார், பின்னர் நியூயார்க் நகரத்தில் உள்ள ஃபேஷன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் பட்டம் பெற்றார். லைலா மல்லையா ஒரு நகை வடிவமைப்பாளர்.
பெங்களூரில் உள்ள கஹாவா என்ற லைஃப்ஸ்டைல் கடையில் தனது தயாரிப்புகளை அவுட்சோர்ஸ் செய்கிறார். அவர் பல பேஷன் வீக் நிகழ்ச்சிகளில் தோன்றியுள்ளார். அதெல்லாம் பெரிய விஷயம் இல்லை. அவர் முன்னாள் ஐபிஎல் கமிஷனர் லலித் மோடியுடன் பணிபுரிந்தார். ஐபிஎல் சர்ச்சையில் இவரது பெயரும் வந்தது.
லைலாவின் சகோதரர் கபீர் மஹ்மூத் ஒரு தொழிலதிபர். அவருக்கு சித்தார்த் மல்லையா, தன்யா மல்லையா மற்றும் லியானா மல்லையா - உடன் பிறந்தவர்கள் உள்ளனர். ஆகஸ்ட் 2017 இல் விஜய் மல்லையாவின் நிகர மதிப்பு ரூ.7,500 கோடி என சுவிஸ் வங்கி மதிப்பிட்டுள்ளது. அவருக்கு பல ஆடம்பர வீடுகள் மற்றும் கார்கள் உள்ளன.


Click it and Unblock the Notifications