விஜய் மல்லையா ட்வீட்..கொரோனாவால் உற்பத்தி நிறுத்தம் தான்..எனினும் பணி நீக்கம் இல்லை..சம்பளம் உண்டு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச அளவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் மணிக்கு மணி அதிகரித்து வருகிறது.

எங்கள் கம்பெனியில் பணி நீக்கம் இல்லை..சம்பளம் உண்டு
 

சீனாவில் நோய் பரவல் குறைந்து விட்டது, தற்போது அங்கு புதிதாக பாதிக்கப்பட்ட நபர்கள் குறைந்து வருகிறார்கள் என்றாலும், அங்கு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து விட்டது என்றும் கூறப்படுகிறது.

ஆனாலும் கூட சீனா முழுவதும் முக்கியமான நகரங்களின் எல்லைகள் தற்போது வரை கண்கானிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. எனினும் சீனாவில் இதன் தாக்கம் குறைந்து இருந்தாலும், மற்ற நாடுகளில் நோயின் தாக்கம் பல மடங்கு அதிகரித்து வருகிறது. மேலும் தற்போது இந்த கொரோனா உலகம் முழுவதும் பரவி விட்டதால், இது எப்போது கட்டுக்குள் வரும் என்று சொல்ல முடியாது என்றும் ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.

அனைத்து செயல்படுகளும் நிறுத்தம்

அனைத்து செயல்படுகளும் நிறுத்தம்

இந்தியாவில் தொற்று மேற்கொண்டு பரவாமல் இருக்க, மத்திய அரசு இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பல நிறுவனங்களும் முடங்கியுள்ளன. இந்த நிலையில் வங்கியில் கடனை வாங்கிவிட்டு, சரியாக திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடிய கிங்க்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா. தான் இன்று வரை அரசின் முடிவுக்கு ஏற்ப அனைத்து நிறுவனங்களின் செயல்பாடுகளையும் நிறுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

பணி நீக்கம் இல்லை

இதனால் அவற்றின் உற்பத்தி பெரும்பாலும் முடங்கி விட்டதாக தெரிவித்துள்ளார். எனினும் இதுவரை தான் எந்த ஒரு ஊழியரையும் பணி நீக்கம் செய்யவில்லை என்றும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களுக்கு சம்பளத்தினையும் வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஏனெனில் ஊழியர்களின் பாதுகாப்பு தங்களுக்கு முக்கியம் எனவும் கூறியுள்ளார்.

அனைத்து உற்பத்தி நிறுவனங்களும் மூடல்
 

அனைத்து உற்பத்தி நிறுவனங்களும் மூடல்

மேலும் யாரும் நினைத்து கூட பார்த்திராத வகையில், இந்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தியுள்ளது. இது நல்ல விஷயம் தான். நான் அதை வரவேற்கிறேன். எனினும் நாடு முழுவதிலும் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து விஜய் மல்லையா தனக்கு சொந்தமான அனைத்து உற்பத்தி நிறுவனங்களையும் மூடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அனைத்து கடனையும் செலுத்த தயார்

மேலும் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தாலும் தனது அனைத்து ஊழியர்களுக்கும் 100% ஊதியத்தினை வழங்கி வருவதாகவும் தெரிவித்தூள்ளார். மேலும் தான் கிங்க்பிஷர் ஏர்லைன்ஸூக்காக வாங்கிய கடனை 100% செலுத்த தயாராக உள்ளதாகவும், ஆனால் அவற்றினை வங்கிகளோ அல்லது ED கேட்க தயாராக இல்லை என்றும் கூறியுள்ளார். ஆக இதனை நிதியமைச்சர் கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றும் மற்றொரு டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Vijay Mallya said all his companies’ shutdown but still paying employees

Vijay mallaya tweeted Indian Government has done what was unthinkable in locking down the entire Country. We respect that. All my Companies have effectively ceased operations. All manufacturing is closed as well. Yet we are not sending employees home and paying the idle cost. Government has to help.
Story first published: Tuesday, March 31, 2020, 13:18 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X