தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று தஞ்சாவூரில் நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்தார். வெறும் தேர்தலுக்கான வாக்குறுதிகளாக மட்டும் இல்லாமல் இவை அனைத்தையும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் அப்போது அறிவித்தார்.
தஞ்சாவூரில் அவர் வெளியிட்ட அறிவிப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்தது ரேஷன் கடைகள் செயல்படும் முறையில் மேஜர் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பு. தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான மக்களின் முக்கிய உணவு ஆதாரமாக ரேஷன் கடைகளில் கிடைக்கும் பொருட்கள் இருக்கின்றன. குறிப்பாக அரசின் பல நல திட்டங்களும் ரேஷன் கார்டுகள் மற்றும் ரேஷன் கடைகள் மூலமாக தான் செயல்படுத்தப்படுகின்றன.

இந்த நிலையில் தமிழகத்தில் ரேஷன் கடைகள் செயல்படும் முறையில் பெரிய மாற்றங்கள் கொண்டு வரப்படும் என விஜய் கூறினார். இதன்படி , ஒரு ரேஷன் கடைக்கு அதிகபட்சம் 500 ரேஷன் கார்டுகள் மட்டுமே இணைக்கப்படும் என கூறினார். தற்போது பல கடைகளில் ஆயிரக்கணக்கான கார்டுகள் இணைக்கப்பட்டுள்ளதால், விநியோகத்தில் தாமதம், பொருட்கள் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்த புதிய வரம்பு அமல்படுத்தப்பட்டால், ஒவ்வொரு கடையிலும் பொருட்கள் விரைவாகவும் தரமாகவும் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.
அதே போல ரேஷன் கடைகளில் பெண் விற்பனையாளர்களுக்கு பெண் எடையாளர்களும், ஆண் விற்பனையாளர்களுக்கு ஆண் எடையாளர்களும் நியமிக்கப்படுவார்கள் என்று விஜய் அறிவித்தார். மேலும் ரேஷன் கடைகளில் அரிசி தவிர மற்ற அனைத்து பொருட்களும் பாக்கெட் வடிவில் மட்டுமே வழங்கப்படும் என்று விஜய் கூறினார். ரேஷனில் அரிசி தவிர பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை போன்றவை வழங்கப்படுகின்றன.
தற்போது திறந்த விற்பனை முறையால் அளவு குறைவு, தரக்குறைவு, அசுத்தம் போன்ற பிரச்சினைகள் இருப்பதாக மக்கள் புகார் கூறி வருகின்றனர். இந்த சூழலில் விஜய் முன்கூட்டியே பாக்கெட் செய்யப்பட்டு பாக்கெட் வடிவில் மட்டுமே வழங்கப்படும் என கூறினார்.
கல்வி, மருத்துவம், ரேஷன் , குடிநீர் , சாலை வசதி, பேருந்து வசதி போன்ற அடிப்படை விஷயங்களுக்கு தான் தவெக அரசு முதலில் முக்கியத்துவம் கொடுக்கும் எனக் கூறிய விஜய், நம்முடைய குழந்தைகள் பெண்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அப்போது தெரிவித்தார். உண்மையான ஒப்பந்தங்களை போட்டு வெள்ளை அறிக்கை வெளியிட்டு அவற்றை செயல்படுத்துவோம் என கூறினார்.
நாங்களே மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என கூறுபவர்கள் நாங்க ஊழல் செய்யாதவங்க, ஊழலே செய்ய மாட்டோம் என கூற முடியுமா என்ற கேட்ட விஜய் ஊழல், லஞ்சம், இல்லாத ஆட்சியை தவெக தரும் என குறிப்பிட்டார்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications