நாம் சினிமாவில் பார்த்து வியக்கக்கூடிய நடிகர், நடிகைகள் ஆகட்டும் அல்லது அரசியல்வாதிகள் ஆகட்டும் இவர்கள் அனைவருமே தங்களுடைய வருமானத்தை சரியான இடத்தில் முதலீடு செய்து தான் தங்களுடைய செல்வத்தை பெருக்குகிறார்கள், தக்கவைத்துக் கொள்கிறார்கள். நடிகராக இருந்து தற்போது அரசியல்வாதியாக மாறி இருக்க கூடிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் தன்னுடைய பணத்தை எதில் எல்லாம் முதலீடு செய்திருக்கிறார், அவர் நமக்கு கற்றுத் தரக்கூடிய முதலீட்டு பாடம் என்ன என்பதை நாம் தற்போது விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருகிறது இன்னும் சரியாக இரண்டு வாரத்தில் தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் பல்வேறு பெரிய தலைகளும் களத்தில் இருந்தாலும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய் முதன்முறையாக தேர்தலில் போட்டியிடுவது தான் தற்போது பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.

விஜய் செல்லும் இடமெங்கும் மக்கள் திரளான வரவேற்பு தருகின்றார்கள். இவை அனைத்தும் வாக்குகளாக மாறுமா தமிழக வெற்றி கழகம் தன்னுடைய முதல் தேர்தலிலேயே எவ்வளவு சதவீத வாக்கினை பெறும் என்பன உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்ப்புகளை இந்த தேர்தல் எகிற வைத்திருக்கிறது. விஜய் சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
இதற்காக அவர் தாக்கல் செய்த வேட்பு மனு தாக்கலில் தன்னுடைய சொத்து விவரங்கள் குறித்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். அதில் தனக்கு உள்ள அசையும் சொத்துகள் , அசையா சொத்துகளின் மதிப்பு என்ன எங்கெல்லாம் அதனை முதலீடு செய்திருக்கிறேன் என்பதை விரிவாக தெரிவித்துள்ளார். விஜய் பொறுத்தவரை பாரம்பரியமான ஃபிக்சட் டெபாசிட் எனப்படும் நிலையான வைப்பு தொகை மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய இரண்டிலும் தான் அதிக பணத்தை முதலீடு செய்திருக்கிறார்.
அவர் கையில் ரொக்கமாக 1,10,000 ரூபாய் வைத்திருப்பதாக கூறி இருக்கிறார். இதை தாண்டி தன்னுடைய சொத்தின் பெரும்பகுதியை அவர் வங்கிகளில் நிலையான வைப்பு தொகை திட்டங்களில் தான் பெரிய அளவில் முதலீடு செய்து இருக்கிறார். அந்த வகையில் பார்க்கும்போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நிலையான வைப்புத் தொகை எனப்படும் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் மட்டும் 25 கோடி ரூபாயை டெபாசிட் செய்து வைத்திருக்கிறார்.

அதே போல ஆக்ஸிஸ் வங்கியில் 40 கோடி ரூபாயை நிலையான வைப்புத் தொகையாக முதலீடு செய்து வைத்திருக்கிறார். ஹெச்டிஎஃப்சி வங்கியில் 20 கோடி ரூபாயும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 15 கோடி ரூபாய் நிலையான வைப்புத் தொகை திட்டங்களில் டெபாசிட் செய்துள்ளார். மொத்தமாக அவர் 100 கோடி ரூபாயை நிலையான வைப்புத்தொகையில் மட்டுமே டெபாசிட் செய்துள்ளார்.
அதே போல பல்வேறு வங்கிகளிலும் சேமிப்பு கணக்குகளில் மட்டும் 219.99 கோடி ரூபாயை வைத்திருக்கிறார். நிலையான வைப்பு தொகை, சேமிப்பு கணக்குகள் மூலம் வட்டி வருமானமாக மட்டுமே விஜய்க்கு பல கோடிகள் கிடைக்கும்.
இதைத் தாண்டி ஜெயா நகர் பிராபர்ட்டி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் 19 லட்சம் ரூபாய்க்கு பங்குகளை வாங்கி வைத்திருக்கிறார். அதே போல இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 9,600 ரூபாய் மதிப்பிலான பங்குகளை வைத்திருக்கிறார். சன் பேப்பர் மில் லிமிட நிறுவனத்தில் 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பங்குகளை வைத்திருக்கிறார்.
விஜய் தேசிய சேமிப்பு திட்டம் , அஞ்சலக சேமிப்பு போன்ற எந்த ஒரு திட்டத்திலும் பணத்தை முதலீடு செய்யவில்லை. இதைத் தாண்டி ரியல் எஸ்டேட்டிலும் கணிசமான பணத்தை விஜய் முதலீடு செய்து இருக்கிறார். அவர் வசம் கொடைக்கானலில் வேளாண்மை நிலம் இருக்கிறது. அதேபோல சென்னையில் போரூர், சாலிகிராமம் ,நீலாங்கரை பகுதிகளில் வேளாண்மை அல்லாத பிற நிலங்களை சொந்தமாக வைத்திருக்கிறார் . பாடி , தி நகர், சோழிங்கநல்லூர் , கொப்பூர் ஆகிய பகுதிகளில் வணிக கட்டிடங்களை தனக்கு சொந்தமாக வைத்திருக்கிறார். நீலாங்கரை, சாலிகிராமம் ,மயிலாப்பூர், சோழிங்கநல்லூர் பள்ளிப்பட்டு , கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்புகளை விஜய் வாங்கி வைத்திருக்கிறார்.
மேலும் தனக்கு திரும்ப செலுத்த வேண்டிய கடன்கள் எதுவும் இல்லை எனக் கூறியுள்ளார். கடன் இல்லை, பணமும் நிலையான பாதுகாப்பான வருமானம் தரும் வைப்பு தொகை திட்டங்களில் முதலீடு செய்துள்ளார். விஜய் பொறுத்தவரை வளர்ச்சிக்கு ரியல் எஸ்டேட் முதலீடுகளையும், பாதுகாப்புக்கு வங்கி எஃப்டி முதலீடுகளையும் நம்பியுள்ளார். பெரிய அளவில் ரிஸ்க் எடுக்காமல் பணத்தை பாதுகாக்கும் வழிமுறையே விஜயின் இன்வெஸ்ட்மெண்ட் ஸ்டைலாக உள்ளது.
More From GoodReturns

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: விறுவிறுப்பாக நடக்கும் வாக்குபதிவு!! வாக்காளர்களை வரவேற்கும் ரோபோ!!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

ரேஷன் கார்டு: தேர்தல் நடத்தை விதிகளுக்கு மத்தியில் வெளியான முக்கிய அறிவிப்பு..!!

ஸ்டாலின் Vs ஈபிஎஸ் Vs விஜய் Vs சீமான்: பெண்களுக்காக இவர்கள் முன் வைக்கும் வாக்குறுதிகள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?



Click it and Unblock the Notifications

