தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே இருக்கிறது. அடுத்த வாரம் வியாழக்கிழமை மக்கள் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற இருக்கிறார்கள். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் இந்த முறை பல சுவாரசியங்கள் நிறைந்ததாக மாறி இருக்கிறது.
திமுக கூட்டணி , அதிமுக பாஜக கூட்டணி என பாரம்பரியமாக போட்டியிடக்கூடிய கட்சிகள் மட்டும் இல்லாமல் சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் முதன்முறையாக தேர்தலில் களம் காணும் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் என நாளுக்கு நாள் தேர்தல் களம் விறுவிறுப்படைந்து வருகிறது. இந்த தேர்தலில் நடிகராக இருந்த அரசியல்வாதியாக மாறி இருக்கக்கூடிய விஜய் நேரடியாக களம் காண்கிறார். இது இன்னும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விஜய் திடீரென சைக்கிளில் பயணம் செய்து ரசிகர்களையும் தொண்டர்களையும் ஆச்சர்யப்படுத்துவார். ஒரு முறை தேர்தலில் வாக்களிக்க வீட்டில் இருந்து வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் சென்று அசத்தினார். நேற்று கூட தேர்தல் பரப்புரையின் போது சைக்கிள் ஓட்டி சென்றார். ஆனால் சைக்கிளைத் தாண்டி அவருக்கு மற்ற ஒரு இருசக்கர வாகனம் மீதும் ஒரு பெரிய கிரேஸ் இருப்பது தேர்தல் பிரமாண பத்திரம் மூலம் தெரிய வந்திருக்கிறது.

விஜய் தனக்கு சொந்தமாக பிஎம்டபிள்யூ, டொயோட்டா , மாருதி நிறுவனங்களின் கார்களை வாங்கி வைத்துள்ளார். குறிப்பாக அவரிடம் BMW 530 கார் இருக்கிறது. 2020ஆம் ஆண்டு வாங்கப்பட்ட இந்த காரின் விலை 80.54 லட்சம் ரூபாய் ஆகும். அதே போல BMW 17 காரை சொந்தமாக வைத்துள்ளார். 2024இல் வாங்கப்பட்ட இந்த காரின் விலை 2 கோடி ரூபாய் ஆகும்.
அதே போல TOYOYA LEXUS காரை 2024இல் வாங்கியுள்ளார், இதன் விலை 3 கோடி ரூபாய் ஆகும். இத நிறுவனத்தில் TOYOTA VELLFIRE காரை வாங்கியுள்ளார் அதன் விலை 1 கோடி ரூபாய் ஆகும். மாருதியின் maruti swift காரை 2024இல் வாங்கியுள்ளார் அதன் விலை 5 லட்சம் ரூபாய் ஆகும்.

விஜயிடம் 5 கார்கள் இருக்கும் நிலையில் அவர் தனக்கு சொந்தமாக tvs xl super வண்டியை வாங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது.2024ஆம் ஆண்டு தனக்கு சொந்தமாக 67,000 ரூபாய் கொடுத்து tvs xl super வண்டியை வாங்கியுள்ளதாக விஜய் பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளார். எனவே சைக்கிளை தாண்டி டிவிஎஸ் எக்ஸ் எல் வண்டியின் மீது விஜய்க்கு ஆர்வமோ என்ற விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.
அதே வேளையில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தங்களுக்கு சொந்தமாக கார், இருசக்கர வாகனங்கள் எதுவுமே இல்லை என கூறியுள்ளனர். நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனக்கு சொந்தமாக ஒரே ஒரு ஹுண்டாய் வெர்னா கார் இருப்பதாக அறிவித்திருக்கிறார் தன்னுடைய மனைவிக்கு சொந்தமாக டொயோட்டா இன்னோவா மற்றும் ஹுண்டாய் க்ரெட்டா ஆகிய கார்கள் இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications