விஜய் நடிப்பில் உருவாகி இருக்கக்கூடிய ஜனநாயகன் திரைப்படம் எப்போது திரைக்கு வரும் என்பதற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். நடிகராக இருந்து அரசியல்வாதியாக உருவெடுத்திருக்கும் விஜய் தன்னுடைய கடைசி திரைப்படம் ஜனநாயகன் என அறிவித்தார். இதனால் ஜனநாயகன் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது.
ஹெச். வினோத் இயக்கியுள்ள ஜனநாயகன் திரைப்படத்தில் விஜய் முன்னணி கதாபாத்திரத்திலும் மமீதா பைஜூ , பூஜா ஹெக்டே ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றது. பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் திரைக்கு வருவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. விஜயின் கடைசி படம் அதுவும் பொங்கலுக்கு வெளியாகிறது என்பதால் ஏராளமான ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு முதல் நாள் முதல் ஷோவுக்கான டிக்கெட்டுகளை வாங்கி தீர்த்தனர்.

விஜய் ரசிகர்கள் அனைவரும் ஒரு திருவிழாவைப் போல இந்த படத்தை கொண்டாட வேண்டும் என உற்சாகமாக தயாராகி இருந்தனர். ஆனால் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் பொங்கல் பண்டிகையில் சொன்ன தேதியில் இந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர் பல்வேறு சிக்கல்களைக் கடந்து படம் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. அவர்களும் கடந்த மாதமே படத்தை பார்த்துவிட்டனர்.
இதன் பின்னரும் படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய ஒரு முடிவு தெரியாமல் இருக்கிறது. தற்போது தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தமிழக வெற்றி கழகம் சார்பில் விஜய் நேரடியாக தேர்தலில் களம் காண்கிறார். தற்போது தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும் போது படம் வெளிவருமா வெளிவராதா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு ஜனநாயகன் படம் இணையதளத்தில் வெளியானது. இது படக்குழுவினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சைபர் கிரைம் காவல்துறையினரும் இது தொடர்பாக விசாரணையில் இறங்கினர். இதனை அடுத்து ஜனநாயகன் படத்தை இணையதளம் வாயிலாக பரவ விட்டதாக ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் ஏப்ரல் 17ஆம் தேதி அல்லது 24ஆம் தேதி ஏதேனும் ஒரு தேதியில் ஜனநாயகன் படத்தை வெளியிடப்பட திட்டமிட்டதாக தகவல் வெளியானது. ஏப்ரல் 23இல் தேர்தல் நடைபெற இருப்பதால் அதனை காரணம் காட்டி படத்திற்கு சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதற்காக வரும் 24ஆம் தேதி அதாவது சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறுவது 23ஆம் தேதி அதற்கு அடுத்த நாளான ஏப்ரல் 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிட தயாரிப்பாளர் தரப்பு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக விநியோகஸ்தர்களோடு தயாரிப்பாளர் தரப்பு நாளைய தினம் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்த இருக்கிறதாம். இந்த கூட்டத்தில் படத்தின் ரிலீஸ் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என சொல்லப்படுகிறது. இரு தரப்பிலும் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் ஜனநாயகன் திரைப்படம் தேர்தலுக்கு அடுத்து நாளான ஏப்ரல் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


Click it and Unblock the Notifications