ரூ.275 கோடி ரூ.2 லட்சமாக குறைந்தது..!! ஒரே ஆண்டில் அடியோடு மாறிய விஜய் வாழ்க்கை..!!

தமிழ்நாடு அரசியலில் விஜய் தவிர்க்க முடியாத ஒரு ஆளாகிவிட்டார். கடந்த ஆண்டு ஜூன் 22ஆம் தேதி அன்று தன்னுடைய 51ஆவது பிறந்தநாளை கொண்டாடும் போது அடுத்த ஆண்டு தான் முதலமைச்சர் அரியணையில் அமர்ந்திருப்பேன் என நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார். ஆனால் அது நடந்துவிட்டது. யாருக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அவர் தான் மக்களால் தேர்வு செய்யப்பட்ட தமிழ்நாட்டின் முதலமைச்சர்.

விஜய் தனது 52ஆவது பிறந்த நாளை கொண்டாடும் இவ்வேளையில் அவரது வாழ்க்கை கடந்த ஓராண்டிலேயே எப்படி மாறி இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். 2024ஆம் ஆண்டில் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அப்போது ரஜினியாலேயே முடியவில்லை இவர் என்ன செய்ய போகிறார் என அரசியல் கட்சிகள் கருதின. ஆனால் விஜய் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அதிகரித்தது. ஆனால் திமுக, அதிமுக ஆகியவை விஜய்க்கு செல்வாக்கு பெருகுவதை கண்டுகொள்ளாமல் கூட்டம் எல்லாம் ஓட்டாகுமா என கேள்வி எழுப்பின.

ரூ.275 கோடி ரூ.2 லட்சமாக குறைந்தது..!! ஒரே ஆண்டில் அடியோடு மாறிய விஜய் வாழ்க்கை..!!

இந்நிலையில் தேர்தலிலும் விஜய் என்ற ஒற்றை அடையாளத்துடன் தனியாக தேர்தலை எதிர்கொண்டது தவெக. இந்த முறை மக்களும் சர்ப்பிரைஸாக விஜய்க்கு வாக்களித்து அவரை முதலமைச்சர் அரியணையில் அமர வைத்து விட்டனர். கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி நடிகராகவும் அரசியல் கட்சி தலைவராகவும் மட்டுமே இருந்த விஜய் இந்த 52ஆவது பிறந்தநாளில் முதலமைச்சர் அரியணையில் இருக்கிறார்.

தன்னுடைய கடைசி படமான ஜனநாயகன் படத்திற்கு அவர் 275 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் திரையுலகில் அதிக ஸ்டார் வேல்யூ கொண்டவர் என்பதால் அவர் வழக்கமாகவே அதிக தொகை தான் சம்பளமாக பெறுவார். அந்த வகையில் கடைசி படம் என்பதால் அவர் ஜனநாயகனுக்கு 275 கோடிரூபாய் சம்பளம் பெற்றதாக சொல்லப்படுகிறது. அரசியலுக்கு வராமல் சினிமாவில் நீடித்திருந்தாலும் ஒரு படத்திற்கு 200 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் வாங்கி இருப்பார். ஆனால் அதனை விடுத்து முதலமைச்சர் பதவியில் இருக்கும் விஜய் இப்போது மாத சம்பளம் 2 லட்சம் ரூபாய். இத்துடன் சில அலோவென்ஸுகளும் சேர்த்து சுமார் 2.85 லட்சம் ரூபாய் சம்பளமாக கிடைக்கும்.

Also Read

விஜயை பொறுத்தவரை முதலமைச்சர் என்பதால் அரசு ரீதியான பயண செலவுகளை அரசே ஏற்கும். அது தவிர்த்து தான் அவருக்கு சம்பளமாக 2.85 லட்சம் ரூபாய் மாதம் தோறும் கிடைக்கிறது. இது இல்லாமல் தனிப்பட்ட முறையில் சொத்துகள் மற்றும் முதலீடுகள் ,மூலமும் அவருக்கு வருமானம் உண்டு. தனக்கு 624 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக விஜய் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய சொத்தின் பெரும்பகுதியை அவர் வங்கிகளில் நிலையான வைப்பு தொகை திட்டங்களில் தான் பெரிய அளவில் முதலீடு செய்து இருக்கிறார். அப்படி பார்த்தால் அதிகபட்சமாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நிலையான வைப்புத் தொகை எனப்படும் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் மட்டும் 25 கோடி ரூபாயை டெபாசிட் செய்து வைத்திருக்கிறார்.

Recommended For You

அதே போல ஆக்சிஸ் வங்கியில் 40 கோடி ரூபாயை நிலையான வைப்புத் தொகையாக முதலீடு செய்து வைத்திருக்கிறார். ஹெச்டிஎஃப்சி வங்கியில் 20 கோடி ரூபாயும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 15 கோடி ரூபாய் நிலையான வைப்புத் தொகை திட்டங்களில் டெபாசிட் செய்துள்ளார். மொத்தமாக அவர் 100 கோடி ரூபாயை நிலையான வைப்புத்தொகையில் மட்டுமே டெபாசிட் செய்துள்ளார்.

இந்த நிலையான வைப்பு தொகைகளுக்கு சராசரியாக 7.5% வட்டி வருகிறது என வைத்து கொண்டால். இதன் மூலம் மட்டுமே விஜய்க்கு ஆண்டுக்கு 7.5 கோடி ரூபாய் அதாவது ஒரு மாததிற்கு 62.50 லட்சம் ரூபாய் வட்டி வருமானமாகவே கிடைக்கும். அதே போல பல்வேறு வங்கிகளிலும் சேமிப்பு கணக்குகளில் மட்டும் 219.99 கோடி ரூபாயை வைத்திருக்கிறார். அதற்கு 3% சராசரி வட்டி வருமானம் கிடைக்கிறது என்றால் கூட ஆண்டுக்கு 6.5 கோடி ரூபாய் வட்டி கிடைக்கும்.அதாவது விஜய்க்கு சேமிப்பு கணக்கு, ஃபிக்ஸட் டெபாசிட்கள் மூலமே ஆண்டுக்கு சுமார் 14 கோடி ரூபாய் வட்டி வருமானம் கிடைக்கும். ஒரு மாதத்திற்கே இவருக்கு 1 கோடி ரூபாய் வட்டி வருமானமே வரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+