நாட்டின் முன்னணி நிறுவனமான விஜய் சேல்ஸ் ஆப்பிள் டேஸ் சேல் விற்பனையை தொடங்கியுள்ளது. சமீபத்திய ஐபோன் 16 சீரிஸ் உட்பட அனைத்து பிரபலமான ஐபோன் மாடல்களிலும் முக்கிய விலைக் குறைப்புகளை விஜய் சேல்ஸ் அறிவித்துள்ளது. இந்த விற்பனையானது இன்று டிசம்பர் 29 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 5 ஆம் தேதி வரை கிடைக்கும். இந்த விற்பனையின் மூலம், நிறுவனம் பல வகையான ஆப்பிள் தயாரிப்புகளுக்கு நல்ல தள்ளுபடியை வழங்குகிறது. அதன்படி ஐபோன் 16 சீரிஸ் ரூ.66,900 இல் தொடங்குகிறது.
அதன்படி, ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் ரூ.4,000 தள்ளுபடி உட்பட முறையே ரூ.66,900 மற்றும் ரூ.75,490க்கு கிடைக்கும். இதேபோல், ஐபோன் 16 ப்ரோ ரூ.1,03,900 முதல், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ரூ.1,27,650 முதல் தொடங்கும். ஐபோன் 16 செப்டம்பரில் ரூ.79,900க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து இதுவே அதன் முதல் பெரிய தள்ளுபடியாகும்.

இந்த விற்பனையின் ஒரு பகுதியாக, விஜய் சேல்ஸ் ஐபோன்கள், ஆப்பிள் வாட்ச்கள், ஐபேட்கள், மேக் புக்ஸ், ஏர் பாட்கள், ஆப்பிள் ஆக்சஸரீஸ்கள் ஆகியவற்றில் நல்ல தள்ளுபடியை வழங்குகிறது. நீங்கள் விரும்பும் தயாரிப்பு ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டு, கோடக் மஹிந்திரா வங்கி கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால், கூடுதலாக ரூ. 10,000 வரை தள்ளுபடி பெறலாம்.
இந்த விற்பனையில், விஜய் சேல்ஸ் ஐபோன் 16 ப்ரோவில் முன்பை விட சிறந்த சலுகையை வழங்குகிறது. இதைப் பயன்படுத்துவதன் மூலம், வாடிக்கையாளர்கள் ஐபோன் 16 ப்ரோ ஸ்மார்ட்போனை வெறும் ரூ. 1,03,900 விலையில் வாங்கலாம். ஐபோன் 16 ப்ரோவின் அடிப்படை மாறுபாடு, 128 ஜிபி கொண்ட மாடல் தற்போது ரூ. 1,06,900 கிடைக்கிறது.
இதன் அசல் விலை ரூ. 1,19,900 ஆகும். ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ அல்லது கோடக் மஹிந்திரா வங்கி கிரெடிட் கார்டு மூலம் கிரெடிட் கார்டு மூலம் ஐபோன் 16 ப்ரோ-ஐ வாங்கினால் ரூ. 3000 தள்ளுபடி பெறலாம்.இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 1,03,900 குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், உங்களின் பழைய ஸ்மார்ட்போனை மாற்றினால் ரூ. 6,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் பெறலாம். அதாவது உங்கள் தற்போதைய ஸ்மார்ட்போனை மாற்றினால், கூடுதலாக ரூ. 6000 போனஸும் பெறலாம். இதன் மூலம், ஐபோன் 16 ப்ரோ குறைந்த விலையில் கிடைக்கும்.
இந்த விற்பனையில், ஐபோன் 16 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி, மற்ற ஐபோன் மாடல்கள் மற்றும் மேக் புக், ஐபாட்கள், ஆப்பிள் வாட்ச் மற்றும் ஏர்போட்கள் ஆகியவற்றிலும் நல்ல தள்ளுபடியைப் பெறலாம்.மற்ற மாடல்களைப் பொறுத்தவரையில், ஐபோன் 15 ரூ. 57,490 முதல் கிடைக்கிறது. ஐபோன் 15 பிளஸ் ரூ.66,300 முதல் தொடங்கும். இதேபோல் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 13 ஆகியவை முறையே ரூ.48,000 மற்றும் ரூ.42,900க்கு விற்பனை செய்யப்படும்.
மேக்புக் ஏர் எம்1 ரூ.63,890 முதல், எம்4 சிப் கொண்ட மேக்புக் ப்ரோ ரூ.1,47,900 முதல் தொடங்கும். ஆப்பிள் வாட்ச் SE போன்ற துணைக்கருவிகள் ரூ.21,199-லிருந்து தொடங்கும், ஏர்போட்ஸ் 4-ன் விலை ரூ.11,249-லிருந்து தொடங்கும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications