இந்தியாவின் மிகப்பெரிய பேமெண்ட் மற்றும் பின்டெக் சேவை நிறுவனமான பேடிஎம்-ல் அதிகப்படியான பங்குகளை சீனாவின் அலிபாபா பிடியில் இருப்பது பெரும் பிரச்சனையாக இருந்து வரும் வேளையில், இது பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்தில் முதலீடு செய்யும்போது கவனிக்கும் முக்கியமான விஷயமாகவே இருந்து வந்தது.
இந்த நிலையில் சீனாவின் முன்னணி ஈகாமர்ஸ் தளமான அலிபாபா-வின் நிதியியல் சேவை பிரிவான Ant Group வைத்திருக்கும் பேடிஎம்-ன் தாய் நிறுவனமான One 97 Communications-ன் 44 சதவீத பங்குகளை பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் பேடிஎம்-ல் சீன நிறுவனத்தின் ஆதிக்கம் குறைந்துள்ளது.

இதுக்குறித்து பேடிஎம் வெளியிட்டுள்ள அறிவிப்பிஸ் விஜய் சேகர் சர்மா-வுக்கு சொந்தமான வெளிநாட்டு நிறுவனமான Resilient Asset Management BV, சீனாவின் ஆன்ட் குரூப்-ன் கிளை நிறுவனமான Antfin (Netherlands) நிறுவனத்திடம் இருந்து 10.3 சதவீத பங்குகள் மற்றும் வாக்களிக்கும் உரிமையை கைப்பற்றியுள்ளது.
இதன் மூலம் விஜய் சேகர் சர்மா-வின் பேடிஎம் ஹோல்டிங் அளவு 19.42 சதவீதமாக உயர்ந்து நிறுவனத்தின் பெரும் பங்கு உரிமையாளராக மாறியுள்ளார். இதேவேளையில் Antfin நிறுவனத்தின் பங்கு இருப்பு 13.5 சதவீதமாக குறைய உள்ளது. விஜய் சேகர் சர்மா இந்த பங்குகளை OCD அதாவது optionally convertible debentures ஆக பெறுவதால் Antfin பொருளாதார ரீதியாக உரிமை கொண்டு இருக்கும், ஆனால் நிர்வாகத்தில் வாக்களிக்கும் உரிமை (Voting Rights) கைப்பற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
2015ல் சீனா-வின் ஆன்ட் குரூப், ஓன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் முதல் முறையாக முதலீடு செய்தது, நவம்பர் 2021ல் ஐபிஓ மூலம் ஓன்97 சுமார் 18,300 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை திரட்டியது குறிப்பிடத்தக்கது. இந்த 10.30 சதவீத பங்குகளின் பரிமாற்ற மதிப்பு 628 மில்லியன் டாலர்.
தற்போது பேடிஎம்-ன் தாய் நிறுவனமான One 97 Communications-ல் விஜய் சேகர் சர்மா 19.42 சதவீத பங்குகளையும், வென்சர் கேப்பிடல் நிறுவனமான Elevation Capital 15 சதவீத பங்குகளையும், சீனாவின் Ant Group 13.5 சதவீத பங்குகளையும் வைத்துக்கொண்டு டாப் பங்கு முதலீட்டாளராக உள்ளனர்.
இன்றைய மும்பை பங்குச்சந்தை வரத்தகத்தில் ஓன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 1.77 சதவீதம் சரிந்து 835.70 ரூபாயாக உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 7.05 சதவீதமும், ஒரு மாதத்தில் 1.62 சதவீதமும், 6 மாதத்தில் 23.50 சதவீதமும், 2023 ஆம் ஆண்டில் 57.24 சதவீதமும் உயர்ந்துள்ளது. பேடிஎம் ஐபிஓ வெளியிட்டு 1781 ரூபாய் வரைக்கும் வளர்ச்சி அடைந்தது, ஆனால் தற்போது 835.95 ரூபாய் அளவில் உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications