பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான One97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் (OCL) இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பேமெண்ட் மற்றும் நிதிச் சேவை நிறுவனமாகும், மேலும் QR மற்றும் மொபைல் கட்டண பேமெண்ட் சேவைகளின் முன்னோடியாகும்.
பேடிஎம் ஐபிஓ வெளியிட்டு முதல் முறையாகத் தனது வருடாந்திர பொதுக் கூட்டத்தை (AGM) சில நாட்களுக்கு முன்பு நடத்தியது. இதில் விஜய் சேகர் சர்மா-வின் பதவி நீட்டிப்பு குறித்து முக்கியமான முடிவு எடுக்கப்பட்டது.
Paytm - விஜய் சேகர் சர்மா
இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பேமெண்ட் மற்றும் நிதியியல் சேவை நிறுவனமான பேடிஎம் நிறுவனத்தின் Paytm நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக விஜய் சேகர் சர்மா-வை மீண்டும் நியமிக்கச் சுமார் 99.67 சதவீத பங்குதாரர்கள் அவருக்கு ஆதரவாக வாக்களித்ததால் மீண்டும் பேடிஎம் நிறுவனத்தின் உயர் பதவியைத் தக்கவைத்துக்கொண்டார்.
Paytm - 22வது வருடாந்திர பொதுக் கூட்டம்
பேடிஎம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆக இருக்கும் விஜய் சேகர் சர்மா 22வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் (AGM) அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் இதே பதவியில் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்படுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
பேடிஎம் ஐபிஓ
பேடிஎம் ஐபிஓ பெரிய அளவிலான இழப்பை முதலீட்டாளர்களுக்கு அளித்தது மட்டும் அல்லாமல், சீன தகவல் பரிமாற்ற பிரச்சனை, ஆர்பிஐ கட்டுப்பாடுகள், வர்த்தகத்தில் தடுமாற்றம், லாப நஷ்ட அளவீடுகள் எனப் பலவற்றுக்கு மத்தியில் 22வது வருடாந்திர பொதுக் கூட்டத்தை (AGM) நடந்துள்ளது.
விஜய் சேகர் சர்மா
இந்தக் கூட்டத்தில் தான் விஜய் சேகர் சர்மா தனது பதவியையும், நிறுவனத்தின் தனது ஆதிக்கத்தையும் காப்பாற்றும் வண்ணம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மீண்டும் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
One97 கம்யூனிகேஷன்ஸ்
முன்னதாக மே 2022 இல், One97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் இயக்குநர்கள் குழு, விஜய் சேகர் சர்மாவை நிர்வாக இயக்குநராக மீண்டும் நியமிக்க ஒப்புதல் அளித்தது. இதேவேளையில் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான் செபி பிப்ரவரி 2022 இல், இந்தியா நிறுவனங்களுக்கு ஒரு தனித் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்/தலைமைச் செயல் அதிகாரியைக் கொண்டிருப்பதைத் தனிப்பட்ட முடிவு என அறிவித்தது.


Click it and Unblock the Notifications