கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த சித்தராமையாவை கடந்த 28ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்போது கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக டி.கே.சிவகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது துணை முதலமைச்சராக இருக்கும் அவர் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.
ஜூன் 3ஆம் தேதி மாலை ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா எளிமையாக நடைபெறும் என்றும் இதில் ராகுல்காந்தி பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநில முதலமைச்சராக டி கே சிவகுமாருக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது. அந்த வகையில் இந்தியாவின் பணக்கார முதலமைச்சர் என்ற பெருமை டி.கே.சிவகுமாருக்கு கிடைத்துள்ளது.

டி.கே.சிவகுமார் தேர்தலின் போது தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ள அதிகாரப்பூர்வ கணக்கின்படி அவரது மொத்த மொத்த சொத்து மதிப்பு ₹1,413 கோடி ஆகும். இவரிடம் அசையா சொத்துக்கள் மட்டுமே ₹1,140 கோடிக்கு உள்ளது. பெங்களூருவில் உள்ள குளோபல் மால் போன்ற பெரிய வணிக வளாகங்களின் பங்குகள், விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள் இதில் அடங்கும். அடுத்ததாக பணம், நகைகள், முதலீடுகள்) என அசையும் சொத்து மட்டுமே ₹273 கோடிக்கு வைத்துள்ளார். இவருக்கு ₹265 கோடி கடன் இருக்கிறதாம்.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) வெளியிட்ட தரவுகளின்படி பார்த்தால் இந்தியாவின் பணக்கார முதலமைச்சர் என்ற பெருமை சிவகுமாருக்கு கிடைக்கிறது. இதில் மற்றொரு சுவாரஸ்யம் என்னவென்றால் இந்தியாவின் பணக்கார முதலமைச்சர்கள் பட்டியலில் முதல் 3 இடங்களையும் தென்னிந்திய முதலமைச்சர்களே பிடித்துள்ளனர்.
1. டி.கே. சிவகுமார் (கர்நாடகா) - ₹1,413 கோடி
2. என். சந்திரபாபு நாயுடு (ஆந்திரா) - ₹931 கோடி
3. விஜய் (தமிழ்நாடு) - ₹648 கோடி
இந்தியாவின் பணக்கார முதலமைச்சர்கள் பட்டியலில் விஜய்க்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது.
கர்நாடக முதலமைச்சராக பதவியேற்கும் டி.கே.சிவகுமார் லூயி விட்டான் (Louis Vuitton), குஸ்ஸி (Gucci), பிராடா (Prada), பர்பெரி (Burberry) போன்ற உலகின் மிக உயர்தரமான ஆடம்பர பிராண்ட் ஆடைகள் மற்றும் ஸ்கார்ஃப்களை அணிவதை வழக்கமாகக் கொண்டவர். தன்னை எப்போதுமே ஆடம்பரமாக காட்டி கொள்ள விரும்புபவர்.சிவகுமாருக்கு ரியல் எஸ்டேட் முதலீடுகள் மூலமே சொத்து மதிப்பு பல மடங்கு பெருகியுள்ளது. 2008ஆம் ஆண்டு 75 கோடி ரூபாயாக இருந்த சொத்து மதிப்பு, தற்போது 1413 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளில், அதிமுக எம்.எல்.ஏ. லீமா ரோஸ் மார்ட்டின் (சொத்துக்கள் ரூ. 5,863 கோடி மற்றும் கடன்கள் ரூ. 340 கோடி), மற்றும் மகாராஷ்டிர எம்.எல்.ஏ. பராக் ஷா (அறிவிக்கப்பட்ட சொத்துக்கள் ரூ. 3,383 கோடி) ஆகியோரே பணக்காரர்கள் என பிரமாணப் பத்திரத் தரவுகள் காட்டுகின்றன.


Click it and Unblock the Notifications

