விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. வரும் 23ஆம் தேதி அதாவது அடுத்த வாரம் வியாழக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. வழக்கத்தை விட இந்த முறை சட்டமன்ற தேர்தல் மிகவும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இதற்கு காரணம் நடிகராக இருந்த விஜய் இந்த முறை தவெக என்ற கட்சியை தொடங்கி அதன் மூலம் நேரடியாக மக்கள் களத்தில் மோதுகிறார்.

திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் கூட்டணியோடு களமிறங்கி இருக்கும் நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜயின் தமிழக வெற்றி கழகம் ஆகியவை தனித்து களம் காண்கின்றன. குறிப்பாக விஜய் முதன்முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். அதுவும் முதல் தேர்தலிலே இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். ஒன்று சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட பெரம்பூர் சட்டமன்ற தொகுதி , இரண்டாவது திருச்சிக்கு உட்பட்ட திருச்சி கிழக்கு தொகுதி.

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

இந்த இரண்டு தொகுதியிலும் கடந்த தேர்தலில் யார் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பன உள்ளிட்ட விவரங்களை தற்போது விரிவாக தெரிந்து கொள்ளலாம். பெரம்பூர் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 519 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றிவேல் வெற்றி பெற்றார். 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் ஆர்.டி சேகர் வெற்றி பெற்றார் 68,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றியை பெற்றார்.

2021ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சட்டமன்ற தேர்தலிலும் 54,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகரே வெற்றி கனியை பறித்தார். பெரம்பூர் பொருத்தவரை நீண்ட காலமாகவே அது திமுகவின் கோட்டையாக தான் இருக்கிறது. இங்கே பெரும்பாலானவர்கள் தினமும் அன்றாட கூலிக்காக வேலைக்கு செல்பவர்கள். பெரும்பாலானவர்கள் லோயர் மிடில் கிளாஸ் குடும்பங்களாக தான் இருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் இங்கே 10 இருந்து 15 சதவீதம் பேர் கிறிஸ்தவர்களாக இருக்கின்றன.

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

இங்கே திமுக தன்னுடைய எம்எல்ஏவான ஆர்.டி.சேகரையே மீண்டும் இந்த தொகுதியில் களத்தில் இறக்கி இருக்கிறது அதிமுக இந்த தேர்தலில் பெரம்பூர் தொகுதியை கூட்டணி கட்சியான பாமகவுக்கு ஒதுக்கீடு செய்து விட்டது. இதில் கட்சியின் பொருளாளர் ஆன திலகபாமா நேரடியாக போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் வெற்றி தமிழன் களம் காண்கிறார். மொத்தம் 49 வேட்பாளர்கள் இங்கே போட்டியில் இருக்கின்றனர். இந்த தொகுதியை பொருத்தவரை 2,22,000 வாக்காளர்கள் இருக்கின்றனர்.

Also Read

அடுத்ததாக விஜய் போட்டியிடக்கூடிய மற்றொரு தொகுதி திருச்சி கிழக்கு. 1952 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இங்கே நடைபெற்ற 16 தேர்தல்களில் 9 முறை திமுகவும் ஐந்து முறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. 2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் அதிமுக ஆட்சியில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த வெள்ளமண்டி நடராஜன் இந்த தொகுதியில் வெற்றி பெற்றார். 2021இல் இந்த தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட இனிகோ இருதயராஜ் வெற்றி பெற்றார்.

Recommended For You

கிறிஸ்தவ வெள்ளாளர்கள் ,பட்டியல் சமூகத்தினர், இஸ்லாமியர்கள் , பிள்ளைமார் உள்ளிட்டோர் ஏராளமானோர் இருக்கக்கூடிய ஒரு பகுதி இது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இங்கே போட்டியிடுகிறார். திமுக சார்பில் மீண்டும் இனிகோ இருதய ராஜே களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் ராஜசேகரன் நாம் தமிழர் கட்சி சார்பில் வி கிருஷ்ணசாமி ஆகியோர் களம் காண்கின்றனர். 2,20,000 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

முதல் முறை வாக்காளர்கள், மத அடிப்படையில் வாக்களிப்பவர்கள் இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றியை தீர்மானிப்பவர்களாக இருப்பார்கள் என சொல்லப்படுகிறது. எனவே இந்த இரண்டு தொகுதியிலும் போட்டி கடுமையாக இருப்பது உறுதி. மே 4ஆம் தேதி அன்று விஜய் இந்த இரண்டில் எதில் வெற்றி பெறுவார் என்பது தெரிந்து விடும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+