கத்தார் நேஷனல் வங்கிக்கும் அல்வா கொடுத்த விஜய் மல்லையா.. எப்படி தெரியுமா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக இருந்த கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையாவை அறிய முடியாதவர் யாரும் இருக்க முடியாது.

 

ஒரு புறம் இவரின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், ஒரு காலத்தில் முன்னணியில் இருந்ததும், பின்னர் கடன் பிரச்சனையின் காரணமாக இவர் சொல்லாமல் கொள்ளாமல் லண்டனுக்கு தப்பிச் சென்றதும் நாடறிந்த விஷயமே.

தற்போது லண்டனுக்கு ஓடிய விஜய் மல்லையாவுக்கு மீண்டும் ஒரு பிரச்சனை ஆரம்பித்துள்ளது. அது அரண்மனை போன்ற அமைப்பிலான வீட்டின் மேல் வாங்கியிருந்த கடனை கட்டவில்லை என்றும், அந்த வீடு தற்போது மிக சேதமடைந்துள்ளதாகவும் கடன் கொடுத்த கத்தார் நேஷனல் வங்கி நீதிமன்றத்தை நாடியுள்ளது.

பிரமாண்டமான வீடு

பிரமாண்டமான வீடு

பிரெஞ்சு தீவில் உள்ள இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான அரண்மனை பாணியில் ஆனா பிரமாண்ட வீடு மீட்க முடியாத அளவுக்கு மிக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கடன் கொடுத்த வங்கி தெரிவித்துள்ளது. லு கிராண்ட் ஜார்டின் 17 படுக்கை அறைகள், தியேட்டர், ஹெலிபேட் என பிரமாண்டமான அரண்மனைப் பங்களாவைப் காட்டி கத்தார் நேஷனல் வங்கியின் கிளையில் இருந்து 30 மில்லியன் டாலர் கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

சொகுசு கப்பலும் அடமானம்

சொகுசு கப்பலும் அடமானம்

இந்த பிரமாண்டமான அரண்மனை மட்டும் அல்லாது, சொகுசு கப்பல் ஒன்றையும் அடமானம் வைத்தும் 5 மில்லியன் யூரோக்களை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. வீடு தான் மிக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சொகுசு கப்பலையாவது விற்க அனுமதி தர வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட வங்கி லண்டன் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சொத்து மதிப்பு வீழ்ச்சி
 

சொத்து மதிப்பு வீழ்ச்சி

இது குறித்து கத்தார் நேஷனல் வங்கி கூறுகையில், விஜய் மல்லையாவுக்கு கடன் வழங்கியது தொடர்பாக அவரது அரண்மணை பங்களாவை ஆய்வு செய்த நிலையில், கிட்டதட்ட அதன் மதிப்பு 10 மில்லியன் யூரோக்கள் அளவில் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் அவ்வங்கி தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 2018ல் பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு கப்பலை விற்க அனுமதி கோரியுள்ளது.

கடனை திரும்ப செலுத்தவில்லை

கடனை திரும்ப செலுத்தவில்லை

தற்போது செயல்பாட்டில் இல்லாத கிங்பிஷர் ஏர்லைன்ஸ் லிமிடெட் நிறுவனத்தை நிறுவிய விஜய் மல்லையா, இந்தியாவில் சுமார் 9000 கோடி ரூபாய் கடன் மோசடி வழக்கில் சிக்கிய நிலையிலேயே லண்டனுக்கு தப்பி சென்றார். இதனால் அவரை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அவர் இப்படி ஒரு சர்ச்சையில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Vijaya mallaya’s Le grand jardin defaulted $30 million on the loan

Vijaya mallaya’s Le grand jardin defaulted $30 million on the loan. Mallaya bought le grand jardin through his company Gizmo invest Sa in 2008 using $30 million loan facility from Qatar National Bank SAQ. Gizmo has since defaulted on the loan.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X