தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. ஒரு புறம் கூட்டணி பேச்சுகள் நடந்துவரும் நிலையில், மற்றொரு புறம் அரசியல் கட்சி தலைவர்கள் பிரச்சாரங்களை தொடங்கிவிட்டனர். இந்த முறை தேர்தல் களம் முன்பை விட சூடு பிடிக்க தொடங்கிவிட்டது.
ஒருபுறம் திமுக அரசு மகளிர் உரிமை தொகையை உயர்த்தி வழங்கி மகளிர் வாக்குகளை கவர முயற்சிக்கிறது. அதிமுகவும் கவர்ச்சியான தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி வருகிறது. இந்த சூழலில் தமிழக வெற்றி கழகத்தின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலையில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுமார் 5 ஆயிரம் நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் தவெக தலைவர் விஜய் இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில், பிரசார வேனில் நின்றபடி உரையாற்றினார். அப்போது விஜய் வீட்டை விட்டு வெளியே வா பனையூரை விட்டு வெளியே வா என அழைக்கிறார்கள், என் வீடு எங்கிருக்கிறது தெரியுமா, என்னை சீண்டி பார்ப்பவர்களுக்கு சொல்கிறேன். தமிழ்நாடு தான் என் வீடு. எங்கள் வீட்டில் 8 கோடி பேர் உள்ளனர். அவர்களுடன் தான் நான் நிற்கப்போகிறேன் என கூறினார். இதன் மூலம் கூட்டணி இல்லாமல் தவெக தனித்து நிற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விஜய் உங்களிடம் ஓட்டு கேட்டு மட்டும் வரவில்லை, நீதி கேட்டும் வந்துள்ளேன். நான் என்ன தப்பு செய்தேன். என்னை நேசித்த மக்களுக்காக அரசியலுக்கு வந்தேன். அது தவறா? மற்ற கட்சிகள் மாநாடு நடத்த இடம் கொடுக்கிறார்கள். ஆனால், நமக்கு தரமாட்டேன் என்கிறார்கள் இது ஸ்டாலின் சாரி ஆப்பரேட்டிங் புரொசிஜர் என குற்றம்சாட்டினார்.

1000, 2000, 5000 என்று கொடுப்பார்கள், அது உங்கள் பணம், பணத்தை வாங்கிக் கொண்டு, அவர்கள் காதில் விசிலை ஊதி அனுப்புங்கள் என அப்போது விஜய் பேசினார். பணம் கொடுக்கும் கலாசாரத்தை ஒழிக்க வேண்டும் என கூறிய விஜய், எங்கள் ஓட்டுரிமையை யாரும் விலைக்கு வாங்க முடியாது எங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்கு வேறு யாரையும் நம்பி ஏமாறமாட்டோம் என உறுதி மொழி எடுங்கள் என தெரிவித்தார்.
நான் எந்த கட்சியையும் ஒழிக்க அரசியலுக்கு வரவில்லை. வெறுப்பு அரசியல் செய்யவும் வரவில்லை. தேர்தலில் நின்று ஜெயித்து மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வந்துள்ளோம். இந்த ஏ டீம்,பி டீம் எல்லோரும், என்னை அனுபவம் இல்லாதவர் எப்படி ஆட்சி செய்வார் என்று கேட்கிறார்கள் அடுத்தவர்கள் ஆரம்பித்த அரசியல் கட்சியில், அடுத்தவர்கள் முகவரியில் நிற்பவர்கள், என்னைப்போல தனியாக கட்சி ஆரம்பித்து ஒரு சதவீதம் ஓட்டு வாங்க திராணி உள்ளதா? என கூறினார்.

75 வருட கட்சி, 50 வருட கட்சி எல்லாம் கூட்டணியை நம்பி உள்ளது, கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் 30 சதவீத வாக்கு நமக்கு உள்ளது என குறிப்பிட்ட விஜய் எங்களுக்கு அனுபவம் இல்லைதான், கொள்ளையடிக்க அனுபவம் இல்லை, சுட்டு போட்டாலும் அது வராது என தெரிவித்தார். பெண்களுக்கு பாதுகாப்பு கூட தரமுடியாத அரசு இது என சாடிய அவர் மக்கள் விரோத திமுக அரசு நிலைக்கக்கூடாது என்பதுதான் மக்கள் கனவு என கூறினார்.
மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றால், விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம் ஏன் நடக்கிறது? மக்கள் எங்கே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்? விலைவாசி உயர்வு, பஸ் வசதி இல்லை, ரோடு சரியில்லை என்று பல பிரச்சினைகள் உள்ளது என்றார்.
நடைமுறைக்கு சாத்தியமில்லாத வாக்குறுதிகளை தவெக கொடுக்காது என கூறிய அவர் இந்த தேர்தலில் 2 பேருக்கு நடுவில்தான் போட்டி. ஒன்று தி.மு.க., இன்னொன்று த.வெ.க., அதாவது தூய சக்தி த.வெ.க., தீய சக்தி தி.மு.க. இடையேதான் என கூறிய விஜய், மக்களாகிய நீங்கள் விஜய்யை நம்புகிறீர்களா, ஸ்டாலின் சாரை நம்புகிறீர்களா என கேள்வி எழுப்பினார். இதற்கிடையே இந்த கூட்டத்தில் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications