தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு தந்தன. இதன் அடிப்படையில் தவெக ஆட்சி அமைத்து விஜய் முதலமைச்சராக பதவியேற்றார்.
தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் 118 இடங்கள் இல்லாமல் தவெக ஆட்சி அமைப்பது இழுபறியாக இருந்தது. திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு கரம் நீட்டின. இந்நிலையில் தான் நாளைய தினம் விஜய் சட்டப்பேரவையில் தனக்கு பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார். அதாவது 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லை என்றால் விஜய்யின் முதலமைச்சர் பதவி பறிபோய்விடும்.

எனவே தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் தீர்மானம் நாளை சட்டசபையில் கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. தவெக சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சியினர் மட்டுமில்லாமல் பெரும்பான்மையை நிருபிப்பதில் தமிழக வெற்றி கழகத்திற்கு அதிமுகவின் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான ஒரு தரப்பு எம்எல்ஏக்கள் ஆதரவு அளிக்க உள்ளனர். இதன் மூலம் தமிழக வெற்றி கழக கூட்டணியின் பலம் 151 ஆக உயரும் என சொல்லப்படுகிறது. இருந்தாலும் நாளைக்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

நாளை சட்டமன்றம் கூடிய உடன் தவெக அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்படும். இந்த தீர்மானத்தை ஆளும் கட்சியில் இருந்து ஒருவர் முன்மொழிய அதன் மீது முதலமைச்சர் விஜய் உரையாற்றுவார். அப்போது அனைவரது நம்பிக்கையையும் கோரும், வகையில் அவரது பேச்சு இருக்கும். இந்த தீர்மானத்தின் மீது மற்ற கட்சியினரும் உரையாற்றுவார்கள். இது முடிந்த உடன் அந்த தீர்மானம் மீது எம்எல்ஏக்கள் வாக்கெடுப்பு நடக்கும்.
இந்த வாக்கெடுப்பில் டிவிஷன் முறைப்படி வாக்கெடுப்பு நடக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் 3 முறை மணியோசை ஒலிக்கப்படும். அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் யாரேனும் வெளியே சென்றிருந்தால் அவர்கள் உள்ளே வர வேண்டும், ஏனெனில் அதன் பின் கதவுகள் அடைக்கப்படும். பின்னர் உறுப்பினர்களின் விஜயின் ஆட்சியை ஆதரிக்கும் தீர்மானத்தை ஆதரிப்பவர்கள் எதிர்ப்பவர்கள் என தனி தனியே எழுந்த நிற்க சொல்லி அதனை கணக்கிட்டு சட்டசபை செயலாளர் சபாநாயகரிடம் வழங்குவார். அந்த எண்ணிக்கை தான் தீர்மானம் வெற்றி அடைந்ததாக் தோல்வி அடைந்ததால் என்பதை தீர்மானிக்கும்.
118க்கும் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் கிடைத்துவிட்டால் விஜய் ஆட்சி தொடரும் இல்லை என்றால் ஆளுநருக்கு தகவல் அளிக்கப்பட்டு ஆட்சி கலைக்கப்படும். ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவு. தற்போது ஒருவர் சபாநாயகர் ஆகிவிட்டார், திருப்பத்தூர் உறுப்பினர் வாக்கெடுப்பில் பங்கேற்க நீதிமன்றம் தடை விதித்துவிட்டது, விஜய் ஒரு பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்பதால் அவையில் தவெக பலம்105ஆக மாறிவிட்டது.
காங்கிரஸ் 5 பேர், 2 இடதுசாரி கட்சிகள், விசிக, ஐயுஎம்எல் தலா 2 பேர் என 13 பேர் ஏற்கனவே ஆதரவு தந்துள்ளதால் சரியாக 118 பேரின் வாக்கு கிடைக்கும். அதிமுக உறுப்பினர்களில் சிலரும் தவெகவுக்கு ஆதரவு தருவார்கள் என்பதால் விஜய்க்கு சிக்கல் இருக்காது.


Click it and Unblock the Notifications

