விஜய்-யின் ஜனநாயகன் திரைப்படம்.. நீதிமன்றத்தில் நடந்தது என்ன..? அடுத்தடுத்து நடந்த விசாரணை - முழு விபரம்

ஜனநாயகன் திரைப்படம் விஜய் நடிப்பில் உருவாகியுள்ளது, இதை இயக்குநர் ஹெச். வினோத் இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் போன்ற பெரிய நட்சத்திரங்கள் பட்டாளமே இதில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று (ஜனவரி 9, 2026) திரையரங்குகளில் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சென்சார் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சிக்கலால் படத்தின் வெளியீட முடியாமல் தடைபட்டுள்ளது, இது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக விஜய் அரசியலில் இறங்கியிருக்கும் வேளையில், இது அவருடைய கடை படம் என கூறப்படுவதால் விஜய் ரசிகர்கள் ஜனநாயகன் படத்தை பார்க்க பெரும் ஆர்வத்துடன் உள்ளனர்.

விஜய்-யின் ஜனநாயகன் திரைப்படம்: நீதிமன்றத்தில் நடந்தது என்ன? அடுத்தடுத்து நடந்த விசாரணை முழு விபரம்

சென்சார் போர்ட்டு
சென்சார் குழுவைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் இப்படத்தின் சில காட்சிகளுக்கு ஆட்சேபனை தெரிவித்ததால், ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்க திரைப்பட சென்சார் போர்ட் மறுத்தது. இதனால் படத்தை மறுஆய்வு குழுவுக்கு அனுப்பி வைத்தது.

ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷன்ஸ் இந்த முடிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த சிக்கல், படத்தின் கன்டென்ட் தொடர்பான சர்ச்சையால் ஏற்பட்டது, ஆனால் இது பொதுமக்களின் உணர்வுகளை பாதிக்காத வகையில் இருந்தது என தயாரிப்பாளர்கள் தரப்பில் வாதிட்டனர்.

தனி நீதிபதியின் தீர்ப்பு
இந்த வழக்கை தனி நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, இன்று தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பில், சென்சார் போர்ட் அதிகார வரம்பு மீறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். தணிக்கை குழு பரிந்துரைத்த திருத்தங்களை படக்குழு மேற்கொள்ள வேண்டும் என்றும், ஜனநாயகன் படத்துக்கு எதிரான புகார் ஆபத்தானது என்பதால் அதை ஊக்கப்படுத்த முடியாது என்றும் தெரிவித்தார்.

ஆவணங்களை ஆய்வு செய்தபோது, சென்சார் குழுவின் குற்றச்சாட்டுகள் பிற்போக்குத்தனமானவை என தெரிய வந்ததாக கூறினார். எனவே, மறுஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்து, படத்துக்கு உடனடியாக யு/ஏ சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

சென்சார் போர்ட் மேல்முறையீடு
இந்த நிலையில் சென்சார் குழு, தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்தது. இந்த மனு தலைமை நீதிபதி ஶ்ரீவஸ்தவதா மற்றும் நீதிபதி அருள்முருகன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அவசரமாக மேல்முறையீடு செய்தது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சென்சார் போர்ட் சார்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், பதில் மனு தாக்கல் செய்வதற்கு போதிய அவகாசம் வழங்கப்படவில்லை என்றும், பதில் மனுவில் கோரப்படாத நிவாரணத்தை (யு/ஏ சான்றிதழ்) தயாரிப்பு நிறுவனத்துக்கு தனி நீதிபதி வழங்க உத்தரவிட்டது தவறு என்றும் வாதிட்டார். மறுஆய்வு உத்தரவை ரத்து செய்ய கோரப்படாமல் அதுவும் ரத்தாகியுள்ளது என்றும், டிசம்பர் 22 அன்று சென்சார் போர்ட் முடிவு தெரிவிக்கப்பட்ட நிலையில் வழக்கு தொடர தாமதம் ஏன் எனவும் கேட்டார்.

நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு
சென்சார் போர்ட் தரப்பின் வாதங்களை கேட்ட நீதிபதிகள் சென்சார் சான்றிதழ் பெறுவதற்கு முன்பே வெளியீட்டு தேதியை அறிவித்தது ஏன் என தயாரிப்பு நிறுவனத்துக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சான்றிதழ் இல்லாமல் படத்தை வெளியிட முடியாது என்றும், குறிப்பிட்ட தேதியை நிர்ணயித்து நீதிமன்றத்துக்கு நெருக்கடி கொடுக்க முடியாது என்றும் தெரிவித்தனர். வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டீர்கள் என்பதற்காக எல்லோரும் உங்கள் விருப்பப்படி செயல்பட வேண்டுமா என கேட்டனர்.

பல்வேறு நடைமுறைகள் இருக்கும்போது சான்றிதழுக்காக பொறுமையாக காத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். இதனால், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்து, மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க கே.வி.என் நிறுவனத்துக்கு நோட்டீஸ் வழங்கினர். வழக்கு விசாரணையை ஜனவரி 21க்கு ஒத்திவைத்தனர். இதன் காரணமாக ஜனநாயகன் படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகாது.

இந்த சென்சார் சிக்கல், திரைப்படத்தின் கருத்து சுதந்திரம் மற்றும் தணிக்கை விதிகளுக்கு இடையிலான மோதலாக உள்ளது. விஜய்-யின் ஜனநாயகன் திரைப்படம் எதிர்கொண்ட பிரச்சனை போலே சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி திரைப்பட்டத்திற்கும் வந்தது. பல்வேறு சிக்கல், காட்சி மற்றும் வசனம் மாற்றத்திற்கு பின்று சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+