தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பல அதிர்ச்சிகளையும் பல அதிசயங்களையும் நிகழ்த்தி இருக்கிறது. முதலமைச்சரே தோல்வி அடைந்திருக்கிறார், 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்சியை தொடங்கியவர் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் 4ஆவது முறையாகப் போட்டியிட்டார். இதற்கு முன்பு நடந்த 3 தேர்தல்களிலும் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இந்த தேர்தலில் தோல்வியை தழுவி இருக்கிறார். இந்த தேர்தலில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் 8000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்டாலின் தோல்வியை தழுவியுள்ளார்.

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் எடப்பாடி தொகுதியிலேயே மீண்டும் களம் கண்டார். இங்கே அவர் பெரும்பான்மை வாக்குகளை பெற்று வெற்றி அடைந்திருக்கிறார்.

தமிழக வெற்றி கழக கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். அந்த வகையில் பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளின் முடிவுகள் அதிகமான மக்களால் கவனிக்கப்படும் முடிவுகளாக மாறின. இதில் இரண்டு தொகுதிகளிலுமே விஜய் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் முதன்முறையாக எம்.எல்.ஏ ஆகி இருப்பதோடு மட்டுமில்லாமல் முதலமைச்சராகவும் வாய்ப்பினை பெற்றுள்ளார். பெரம்பூரில் 40,000 வாக்குகள், திருச்சி கிழக்கில் 26,000 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் வெற்றி பெற்றுள்ளார்.
நாம் தமிழர் கட்சி சீமான் காரைக்குடியில் போட்டியிடுவதால் அந்த தொகுதி நட்சத்திர அந்தஸ்து கொண்ட தொகுதியாக இருந்தது. ஆனால் இங்கே அவர் தவெக வேட்பாளரிடம் படுதோல்வி அடைந்துள்ளார். குறிப்பாக சீமான் டெபாசிட் கூட பெறவில்லை என்பது தான் சோகம்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்று விட்டார். சிறை வாசத்திற்குப் பிறகு செந்தில் பாலாஜி போட்டியிடும், கோவை தெற்கு தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்ற நிலையில் அவர் வெற்றி அடைந்துள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தில் சென்னை தி. நகர் தொகுதியில் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா, கோபிசெட்டிபாளையம் தொகுதியில் கே.ஏ. செங்கோட்டையன் ஆகியோர் வெற்றி வாகை சூடியுள்ளனர்.
பாஜக சார்பில் மயிலாப்பூரில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்ட சுந்தர் சி ஆகியோர் தோல்வியை தழுவியுள்ளனர். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாராஜன் தோல்வி அடைந்துள்ளார்.


Click it and Unblock the Notifications

