விராட் கோலி மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல மிகச்சிறந்த தொழில் முனைவோரும் கூட. கிரிக்கெட் மட்டுமல்லாமல் பல்வேறு தொழில்களையும் உருவாக்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். கிரிக்கெட் மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு மத்தியில் அவரால் எப்படி தொழிலிலும் சிறந்து விளங்க முடிகிறது? இதற்கு உறுதுணையாக இருப்பது அவரது அண்ணன் விகாஸ் கோலி.
ஆம், விராட் கோலி பிசினஸிலும் கொடி கட்டி பறப்பதற்கு விகாஸ் கோலி தான் முக்கிய காரணம். விராட் கோலியின் தந்தை ஒரு கிரிமினல் வழக்கறிஞர். விராட்டிற்கு 14 வயதாகும் போதே தந்தை இறந்துவிட்டார். விராட் தான் வீட்டில் இளையவர். இவருக்கு விகாஸ் கோலி மூத்த அண்ணன், பாவ்னா கோலி அக்கா. தந்தை இறந்த பிறகு அண்ணனும், அக்காவும் தான் விராட்டிற்கு உறுதுணையாக இருந்தனர். குறிப்பாக விராட் கோலியை கிரிக்கெட்டில் ஊக்குவித்து இத்தனை பெரிய இடத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

விகாஷ் கோலி தான் விராட்டின் 112 கோடி மதிப்பிலான தொழில் சாம்ராஜ்யத்தை திறமையாக நிர்வாகம் செய்து வருபவர். விராட் கிரிக்கெட்டில் சம்பாதித்த பணத்தை கொண்டு முதலீடு செய்ய வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது முதல் அதனை வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டியது விகாஸ் தான். ஆரம்பத்தில் இருந்து தற்போதுவரை பிராண்டுகளின் அனைத்து நிலைகளையும் திறம்பட கொண்டு செல்பவர் விகாஸ்.
அண்ணன் மட்டுமல்ல முக்கிய பிஸினஸ் பார்ட்டனராகவும் செயல்பட்டு வருகிறார். விராட்டின் ஒன்8 பிராண்டினை முழுக்க முழுக்க இவரே கவனித்து வருகிறார். குறிப்பாக ஒன்8இன் உணவகங்கள் மற்றும் பார்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருவது விகாஸ் கோலி தான். தற்போது இந்த நிறுவனத்தின் மதிப்பு 112 கோடி என சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி ஒன்8 நிறுவனத்தின் கீழ் செயல்படக்கூடிய ரீடெய்ல் பிசினஸ்களையும் இவர்தான் கவனித்து வருகிறாராம்.
ஒன்8 என்பது விராட் கோலியின் ஜெர்ஸி எண்ணான 18 என்பதற்கு கவுரவம் அளிக்கும் வகையில் சூட்டப்பட்ட பெயராகும். இந்த நிறுவனம் இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் உணவகங்கள் மற்றும் பார்களை நடத்தி வருகிறது இதன் மூலம் ஆண்டுக்கு 112 கோடி வருவாய் ஈட்டி வருகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications