மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரைவில் வங்கி துறை சீர்த்திருத்தங்களுக்கான உயர்மட்ட குழு அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். விக்சித் பாரத் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வலிமையான மாபெரும் கடன் வழங்கும் நிறுவனங்களை உருவாக்க, விரைவில் ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட உள்ளது. "விக்சித் பாரதத்திற்கான வங்கித் துறை" என்ற இந்தக் குழு, இதற்கான விரிவான செயல் திட்டத்தை வகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிடிஐ-க்கு அளித்த பேட்டியில், "விக்சித் பாரதத்திற்கான நிதி தேவையை வங்கித் துறை எவ்வாறு திறம்பட வழங்க வேண்டும் என்பது குறித்து இந்தக் குழு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என விரும்புகிறோம்" என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இக்குழு பொதுத்துறை வங்கிகளின் இணைப்பைப் பரிந்துரைக்குமா என்ற கேள்விக்கு, "அவ்வாறு குறுகிய நோக்கில் பார்க்கக் கூடாது. விக்சித் பாரதத்தின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு இந்தியாவின் வங்கித் துறை வலிமையாக்கப்பட வேண்டும். அது கடன், நிதி வசதிகள் மற்றும் சாமானிய மக்களைச் சென்றடையும் வங்கிச் சேவைகள் என அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்" என அவர் விளக்கினார்.

இக்குழு அமைப்பதற்கான காலக்கெடு குறித்துப் பேசிய நிதியமைச்சர், "விரைவில் இதைச் செயல்படுத்துவோம்" என்றார். பிப்ரவரி 1 அன்று தனது பட்ஜெட் உரையில், "வங்கித் துறையை விரிவாக ஆய்வு செய்து, இந்தியாவின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு ஏற்றவாறு சீரமைக்கும் வகையிலும், நிதி நிலைத்தன்மை, உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், 'விக்சித் பாரதத்திற்கான வங்கித் துறை குறித்த உயர்மட்டக் குழு' ஒன்றை அமைக்க நான் முன்மொழிகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
பொதுத்துறை வங்கி சாரா நிதி நிறுவனங்களில் (NBFCs) செயல்திறனை மேம்படுத்தவும், அவற்றின் செயல்பாட்டு அளவை அதிகரிக்கவும், பட்ஜெட்டில் முதற்கட்டமாக பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (PFC) மற்றும் ரூரல் எலெக்ட்ரிபிகேஷன் கார்ப்பரேஷன் (REC) ஆகியவற்றை மறுசீரமைக்கப் பரிந்துரைக்கப்பட்டது. REC, அரசுக்குச் சொந்தமான மின் துறை கடன் நிறுவனமான PFC-யின் துணை நிறுவனம் ஆகும். மின் உற்பத்தி மற்றும் விநியோகத் திட்டங்களுக்கு நிதியுதவி செய்வதில் இரு நிறுவனங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
முன்னதாக, மார்ச் 2019-இல், PFC நிறுவனம் மத்திய அரசுக்கு ரூ 14,500 கோடி செலுத்தி, REC லிமிடெடின் பெரும்பான்மையான பங்குகளைக் கையகப்படுத்தியது. பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் கொள்கை ரீதியான ஒப்புதலைத் தொடர்ந்து இந்த பங்கு கையகப்படுத்தல் நடந்தது.
PFC மற்றும் REC ஆகிய இரண்டுமே நவரத்னா அந்தஸ்து பெற்ற மத்திய பொதுத்துறை நிறுவனங்களாகும். ஒரே துறையில் செயல்படும் நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் இந்த கையகப்படுத்தல் ஒரு முக்கிய நடவடிக்கையாக அமைந்தது. இந்நிலையில், கடந்த வாரம், PFC-யின் இயக்குநர்கள் வாரியம், வங்கி சாரா நிதி நிறுவனமான REC லிமிடெடை தன்னுடன் இணைத்துக் கொள்வதற்கு கொள்கை ரீதியான ஒப்புதலை அளித்தது. இந்த இணைப்பு முடிவானது, அண்மையில் பட்ஜெட்டில் செய்யப்பட்ட அறிவிப்பிற்குப் பிறகு எடுக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

ட்ரம்ப் - ஈரான் மோதல்: இந்திய வங்கித்துறையில் பாதிப்பு ஏற்படுமா? RBI உத்தரவின் பின்னணி என்ன?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications