தூத்துக்குடி: வியட்நாமை சேர்ந்த மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான வின்பாஸ்ட் (VinFast) தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் தங்களுடைய உற்பத்தி ஆலையை நிறுவி வருகிறது. நடப்பு ஆண்டின் மத்தியிலேயே இந்த ஆலை செயல்பாட்டுக்கு வரும் என அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் மின்சார வாகன உற்பத்தியில் டெஸ்லா நிறுவனத்திற்கு போட்டியாளராக வியட்நாமை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தற்போது இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் தங்களுடைய உற்பத்தி மையங்களை நிறுவ ஆர்வம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உற்பத்தி ஆலை அமைக்கப்பட இருக்கிறது.

2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் இந்த ஆலை நிறுவப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது . இந்த ஆலை நடப்பாண்டின் மத்தியிலேயே செயல்பாட்டுக்கு வரும் என நம்புவதாக இந்தியாவுக்கான தலைமை செயல் அதிகாரி பாம் சாவ் தெரிவித்துள்ளார் . டெல்லியில் நடைபெற்று வரக்கூடிய இந்திய வாகன கண்காட்சியில் கலந்து கொண்ட போது அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
தங்களுடைய வின்பாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் மின்சார வாகனம் மட்டுமின்றி மின்சார வாகனங்களுக்கு தேவையான பேட்டரிகளை தயாரிக்கும் ஆலையையும் அமைக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். அதேபோல சார்ஜிங் நிலையங்கள் அமைப்பதற்கான பணிகளையும் தீவிரபடுத்தி உள்ளதாக கூறியுள்ளார். இந்தியாவில் இந்த நிறுவனம் விகுரூப் என்ற நிறுவனத்தை தொடங்கி நாடு முழுவதும் சார்ஜிங் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்திய சந்தைக்காக இந்நிறுவனம் தயாரித்த முதல் மின்சார வாகனம் விஎஃப் 6 மற்றும் விஎஃப்7 டெல்லியில் நடைபெற்று வரக்கூடிய வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு பிரிமியம் ரக மின்சார கார்களும் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது.
மேலும் தூத்துக்குடியில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் கார்களை இந்திய சந்தையில் விற்கப்படுவது மட்டும் அல்லாமல் தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஐரோப்பிய சந்தைகளில் விற்பனை செய்வதற்கான ஏற்றுமதி செய்யும் HUB ஆக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. தூத்துக்குடி ஆலை வெறுமென இந்தியாவுக்காக விற்கப்படுவது இல்லை, சர்வதேச சந்தைகாக உருவாக்கப்பட்டு வருவது தான் வின்பாஸ்ட்-ன் மாஸ்டர் பிளான்.
தூத்துக்குடி மாவட்டம் விமான நிலையம் மற்றும் துறைமுகமாக இரண்டையும் கொண்டு இருப்பதால் ஏற்றுமதி இறக்குமதிக்கு உகந்த இடமாக இருக்கிறது என வின்பாஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. வியட்நாமில் தற்போது இந்த நிறுவனம் 50000 மற்றும் 1 லட்சம் மின்சார வாகனங்களை தயார் செய்யக்கூடிய இரண்டு ஆலைகளை செயல்படுத்தி வருகிறது. மூன்றாவது ஆலையை இந்தியாவில் தமிழ்நாட்டில் நிறுவுகிறது.
முதல்கட்டமாக 500 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்து ஆலை செயல்படுத்தப்படும் என்றும் பின்னர் படிப்படியாக இந்த முதலீடு அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வின்பாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் அனைத்து நகரங்களிலும் டீலர்களை நியமனம் செய்து வருவதாக தெரிவித்துள்ளது. வின்பாஸ்ட் நிறுவனத்தின் இந்த ஆலை மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் 3000 முதல் 3,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications