டாடா ப்ராஜெக்ட்ஸ் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மற்றும் முன்னணி தொழில்துறை உள்கட்டமைப்பு நிறுவனங்களில் ஒன்றாகும்.
பெரிய மற்றும் சிக்கலான நகர்ப்புற மற்றும் தொழில்துறை உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் நிபுணத்துவம் கொண்டு உள்ளது.
இந்த நிறுவனம் தான் தற்போது கிருஷ்ணகிரி-யில் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையைக் கட்டி வருகிறது. இந்நிலையில் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்திற்குப் புதிய நிர்வாக இயக்குநரை டாடா குழுமம் நியமித்துள்ளது.
டாடா குழுமம்
டாடா குழுமம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் TATA Projects நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநராக விநாயக் பாய் நியமித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் தலைவராக விநாயக் தேஷ்பாண்டே சுமார் 11 ஆண்டுகள் பணியாற்றி இருந்த நிலையில் அவர் பணியில் இருந்து ஒய்வு பெறும் வேளையில் விநாயக் பாய் புதிய தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
விநாயக் பாய்
விநாயக் பாய் முன்னணி பொறியியல் மற்றும் EPC நிறுவனங்களில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளார். பொறியியல் வடிவமைப்பு, தொழில்நுட்ப உரிமம், திட்ட மேலாண்மை, வணிக மேம்பாடு மற்றும் செயல்பாடுகளில் பணிபுரியும் பல்வேறு குழுக்களில் முக்கியப் பதவிகளை வகித்தார்.
விநாயக் பாய் கல்வி தகுதி
புனேவில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், புனேவில் உள்ள சிம்பயோசிஸில் மேலாண்மைப் படிப்பில் முதுகலைப் பட்டமும், ஐஐடி பாம்பேயில் வணிக நிர்வாகம் மற்றும் நிர்வாகத்தில் நிர்வாக எம்பிஏ பட்டமும் பெற்றவர்.
டாடா ப்ராஜெக்ட்ஸ்
டாடா ப்ராஜெக்ட்ஸ் சுத்திகரிப்பு நிலையங்கள், சாலைகள், பாலங்கள், ஒருங்கிணைந்த ரயில் மற்றும் மெட்ரோ அமைப்புகள், வணிகக் கட்டிடம் மற்றும் விமான நிலையங்கள், மற்றும் மின் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோக அமைப்புகள், இரசாயன செயல்முறை ஆலைகள், நீர் மற்றும் கழிவு மேலாண்மை மற்றும் சுரங்க மற்றும் உலோக சுத்திகரிப்பு அமைப்புகளுக்கு ரெடிமேட் கட்டுமான தீர்வுகளை வழங்குகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications