விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, ஆகஸ்ட் 27, புதன்கிழமை அன்று இந்தியாவின் முக்கிய நகரங்களில் வங்கிகள் மூடப்பட உள்ளது. பங்குச் சந்தைகள் மற்றும் கமாடிட்டி சந்தைகளும் நாளைய தினத்தில் செயல்படாது. இந்த விடுமுறை, பல மாநிலங்களில் வங்கிச் சேவைகளைப் பாதிக்கும்.
ஆகஸ்ட் 27 அன்று வங்கி விடுமுறை உள்ள நகரங்கள் பட்டியல்
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) விடுமுறை பட்டியலின் படி, அகமதாபாத் (குஜராத்), பேலாப்பூர், மும்பை, நாக்பூர் (மகாராஷ்டிரா), பெங்களூரு (கர்நாடகா), புவனேஸ்வர் (ஒடிசா), சென்னை (தமிழ்நாடு), ஹைதராபாத் (தெலுங்கானா), பனாஜி (கோவா) மற்றும் விஜயவாடா (ஆந்திரப் பிரதேசம்) ஆகிய நகரங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். மற்ற பகுதிகளில் வங்கிகள் வழக்கம்போல் செயல்படும்.

டிஜிட்டல் சேவைகள் பாதிக்கப்படாது:
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஆகஸ்ட் 27ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படும் வேளையில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வங்கி கிளைகள் மூடப்பட்டிருந்தாலும், மக்கள் UPI, நெட்-பேங்கிங், NEFT, RTGS, மொபைல் செயலிகள் மற்றும் ATM போன்ற டிஜிட்டல் வங்கி சேவைகளை வழக்கம் போல் பயன்படுத்தலாம். இவை எவ்வித பாதிப்புமின்றி தொடர்ந்து செயல்படும்.
விநாயகர் சதுர்த்தி விடுமுறை
விநாயகர் சதுர்த்தி, இந்தியாவின் முக்கிய இந்து பண்டிகைகளில் ஒன்றாகும். இது ஒரு தேசிய விடுமுறையாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, ஒடிசா, தெலுங்கானா, தமிழ்நாடு, கோவா மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இது பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான மாநிலங்களில் வங்கிகள் ஒரு நாள் மட்டும் மூடப்பட்டிருக்கும். அத்தியாவசிய வங்கி நடவடிக்கைகளை முன்கூட்டியே திட்டமிடுமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
அடுத்து எப்போது வங்கி விடுமுறை?
ரிசர்வ் வங்கியின் வருடாந்திர காலாண்டர் படி, நாடு முழுவதும் வங்கிகள் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகள் உட்பட குறைந்தது 25 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். ஆகஸ்ட் 28 அன்று நுவாகாய் அறுவடைத் திருவிழாவை முன்னிட்டு புவனேஸ்வர் (ஒடிசா) மற்றும் பனாஜி (கோவா) ஆகிய இடங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.


Click it and Unblock the Notifications