ரூட்டை மாற்றிய Vinfast.. தூத்துக்குடி தொழிற்சாலையில் என்ன நடக்கிறது..?

இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதாக டெஸ்லா டேக்கா கொடுத்த நிலையில், தமிழ்நாடு அரசு முன்கூட்டியே திட்டமிட்டு EV துறையில் இருக்கும் பிற முன்னணி நிறுவனங்களில் இருந்து முதலீட்டை ஈர்க்க திட்டமிட்டு பெரும் வெற்றியைக் கண்டு உள்ளது. இதில் மிகவும் முக்கியமானது வியட்நாம் நாட்டின் வின்பாஸ்ட் நிறுவனம்.

வியட்நாம் நாட்டின் வின்பாஸ்ட் தமிழ்நாடு அரசுடன் கடந்த ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டு தூத்துக்குடியில் 16,000 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 380 ஏக்கர் பரப்பளவில் மாபெரும் தொழிற்சாலை அமைக்கும் பணிகளை மிகவும் விறுவிறுப்பாகச் செய்து வருகிறது.

ரூட்டை மாற்றிய Vinfast.. தூத்துக்குடி தொழிற்சாலையில் என்ன நடக்கிறது..?

இந்த நிலையில் வின்பாஸ்ட் தனது திட்டத்தில் திடீரென முக்கியமான மாற்றத்தைச் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் வின்பாஸ்ட் ஆண்டுக்கு 1,50,000 எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட தொழிற்சாலையில் விரைவில் பணியாளர்களை சேர்க்க துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் மூன்றாவது மிகப்பெரிய கார் சந்தையான இந்தியாவில், முழுக்க முழுக்க இறக்குமதி செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார்களை மட்டுமே முதல்கட்டமாக விற்பனை செய்வோம், அதைத் தொடர்ந்து தூத்துக்குடி தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் கார்கள் விற்கப்படும் என்ற திட்டத்தில் இருந்து வின்பாஸ்ட் திடீரென மாற்றியுள்ளது.

வின்பாஸ்ட் தனது விற்பனை மற்றும் வருவாய் அதிகரிக்கத் தமிழ்நாட்டில் அசம்பிள் செய்யப்பட்ட எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த முடிவு உண்மையாகும் பட்சத்தில் வின்பாஸ்ட் முதலில் அசம்பிளி ஆலையை அமைத்து அதிகப்படியான ஊழியர்களை பணியில் அமர்த்தும். சமீபத்தில் மத்திய அரசின் எலக்ட்ரிக் வாகன கொள்கையில் வின்பாஸ்ட் சலுகை பெறுவதில் சில பிரச்சனைகள் ஏற்பட்ட காரணத்தால் இறக்குமதியில் இருந்து அசம்பிளி திட்டத்திற்கு மாறியிருக்கக் கூடும் எனத் தெரிகிறது.

வியட்நாம் நாட்டின் வின்குரூப் (Vingroup) எலக்ட்ரிக் வாகன பிரிவான வின்பாஸ்ட், தூத்துக்குடி ஆலையை வேகமாக கட்டி முடிக்கப்பட்டு வருவதையடுத்து, இந்திய சந்தையில் இறங்குவதற்கான தனது மாஸ்டர் பிளானை மாற்றியுள்ளது.

வின்பாஸ்ட் தூத்துக்குடி தொழிற்சாலை கட்டுமானத்தை முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட கால அளவை விட 3 மாதங்கள் முன்னதாக முடிக்கப்பட உள்ளது. 2025 மார்ச் மாதத்திற்குள் இந்த ஆலை கார் அசம்பிளி உடன் இயங்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் வளர்ந்து வரும் எலக்ட்ரிக் வாகன சந்தையில் புதிய வானகங்களுக்கும், பிராண்டுகளுக்கும், தரமான கார்களுக்கும் எப்போதும் இடம் உண்டு. இந்த சூழ்நிலையில் அசம்பிள் உடன் துவங்கும் வின்பாஸ்ட் குறைவான விலையில் கார்களை அறிமுகம் செய்ய முடியும்.

வின்பாஸ்ட் 25-30 லட்சம் ரூபாய் விலைப்பட்டியில், தனது முதல் எலக்ட்ரிக் காரை 2025 ஆம் ஆண்டின் பண்டிகை காலத்தில் அதாவது தீபாவளி பண்டிகையின் போது விற்பனைக்கு அறிமுகப்படுத்த வின்பாஸ்ட் திட்டமிட்டுள்ளது. இவை 300-500 கிலோ மீட்டர் வரையிலான தூரம் பயணம் செய்யும் திறன் கொண்டது.

40,000 டாலருக்கு மேற்பட்ட CIF (cost, insurance, freight) மதிப்புள்ள இறக்குமதி செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு இந்தியா 100% இறக்குமதி வரியை விதிக்கிறது, இதுவே 40,000 டாலருக்கு குறைவான CIF மதிப்புள்ள இறக்குமதி செய்யப்பட்ட மாடல்களுக்கு 70% வரி விதிக்கிறது. ஆனால் Completely Knocked Down - CKD கார்களுக்கு 15% வரி மட்டுமே விதிக்கப்படுகிறது.

Completely Knocked Down - CKD கார்கள் என்பது கார்களை தனிதனி பாகங்களாக இறக்குமதி செய்து அதை உள்நாட்டில் அசம்பிள் செய்யப்படுவது. இறக்குமதி செய்யப்படும் கார்களை காட்டிலும் அசம்பிள் செய்யப்படும் கார்களுக்கு வரி குறைவு என்பதால் மலிவான விலையில் கார்களை அறிமுகம் செய்ய வாய்ப்பு அதிகம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+