வியட்நாம் நாட்டின் எலக்ட்ரிக் வாகன (EV) உற்பத்தி நிறுவனமான வின்பாஸ்ட் தற்போது தூத்துக்குடியில் மாபெரும் கார் தயாரிப்பு தொழிற்சாலையை அமைத்து வரும் வேளையில், இந்திய சந்தையில் தனது கார்களை அறிமுகம் செய்வதற்கு முன்பு நீண்ட பயணத்தை உறுதி செய்ய இந்திய நிறுவனங்கள் உடன் கூட்டணி வைக்க வேண்டும் என முடிவு செய்துள்ளது.
இதற்காக வின்பாஸ்ட் ஹைதரபாத்-ஐ சேர்ந்த மேகா இன்ஜினியரிங் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் (MEIL) மற்றும் அதானி குழுமத்துடன் இணைந்து செயல்பட திட்டமிட்டு பேச்சுவார்த்தையை துவங்கியுள்ளது.

வின்ஃபாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் EV தொழிற்சாலை அமைப்பதற்கான கள பணிகளைத் தொடங்கியுள்ளது. இந்த ஆலை சுமார் 380 ஏக்கர் பரப்பளவில், 1600 கோடி ரூபாய் முதலீட்டில் ஆண்டுக்கு 1,50,000 எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கப்போகிறது. இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 3,000 முதல் 3,500 வரையிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் தனது எலக்ட்ரிக் கார்களை அறிமுக செய்ய தயாராகி வரும் வின்பாஸ்ட், இந்தியாவில் இருக்கும் சிக்கலான ஒழுங்குமுறை சூழலை கையாளவும், தொழிலாளர் உறவுகளை நிர்வகிக்கவும், கார் தயாரிப்புக்கான உதிரிபாகங்களுக்கு நிலையான சப்ளை செயின் உருவாக்க உள்நாட்டில் தனிப்பட்ட சப்ளை செயின் உருவாக்க வேண்டும்.
இதை வின்பாஸ்ட் நிறுவனத்தால் தனிப்பட்ட முறையில் செய்ய முடியாது என்பதை உணர்ந்து தற்போது மேகா இன்ஜினியரிங் மற்றும் அதானி குழுமத்துடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது.
இதில் மேகா இன்ஜினியரிங் ஏற்கனவே ஆட்டோமொபைல் துறையில் அனுபவம் பெற்றது, எலக்ட்ரிக் பேருந்து பிரிவில் தனது ஒலெக்ட்ரா பிராண்ட் இந்த நிறுவனத்தின் கூட்டணியில் தான் செயல்படுகிறது. மேலும் மேகா இன்ஜினியரிங் நிறுவனமும், வின்பாஸ்டுடன் ஆரம்ப பேச்சுவார்த்தைகளை நடத்தியதை உறுதி செய்துள்ளது. ஆனால் இந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பக்கட்ட நிலையில் மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications