வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் (VinFast) நிறுவனம் எலக்ட்ரிக் கார் உற்பத்தி மற்றும் விற்பனையில் உலகளவில் முன்னணியில் இருக்கிறது. இந்நிறுவனம் இந்திய சந்தையை கையகப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
வின்ஃபாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் தன்னுடைய எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலையை நிறுவி வருகிறது. துறைமுகத்துக்கு அருகே இருந்தால் தங்கள் கார்களை எளிதாக ஏற்றுமதி செய்ய முடியும் என வின்ஃபாஸ்ட் நிறுவனம் கூறுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தின் அடையாளத்தையே மாற்றும் வகையில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் கார் உற்பத்தி ஆலையை கட்டமைத்து வருகிறது.

இந்திய சந்தையில் தங்கள் கார்கள் விற்பனை செய்யப்பட்ட பிறகு அவற்றுக்கு தேவையான சேவைகளை வழங்குவதற்கு வின்ஃபாஸ்ட் நிறுவனம் மைடிவிஎஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. விற்பனைக்கு பிந்தைய சேவைகளை நாடு முழுவதும் வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் வின்ஃபாஸ்ட் நிறுவனம் இதற்காக மைடிவிஎஸ் உடன் கை கோர்த்திருக்கிறது.
இதன்படி வின்ஃபாஸ்ட் நிறுவன கார்களை விற்பனை செய்யப்பட்ட பிறகு அதன் வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் மை டிவிஎஸ் நிறுவனம் வழங்கும். சர்வீஸ் செய்வது, உபகரணங்களை மாற்றி தருவது , பழுது பார்ப்பது ஆகிய சேவைகளை மை டிவிஎஸ் நிறுவனம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வின்ஃபாஸ்ட் நிறுவன கார்களின் விற்பனைக்கு பிந்தைய சேவைகளுக்காக மைடிவிஎஸ் நிறுவனம் இந்தியா முழுவதும் 120 இடங்களில் சர்வீஸ் வொர்க் ஷாப்புகளை நிறுவ இருக்கிறது .
விற்பனைக்கு பிந்தைய சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு தரமான முறையில் வழங்க வேண்டும் என்பதற்காக மை டிவிஎஸ் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்திருப்பதாக வின்ஃபாஸ்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சான் சௌ தெரிவித்துள்ளார். வின்ஃபாஸ்ட் நிறுவன எலக்ட்ரிக் கார்களை வாங்கக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு அனைத்து இடங்களிலும் அந்த வாகனங்களுக்கான பராமரிப்பு சேவைகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காகவே மை டிவைஸ் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்திருக்கிறோம் என கூறியுள்ளார்.
தரமான சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக பிரத்தியேக பயிற்சி கொடுத்து நிபுணர்கள் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என மைடிவிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. வின்ஃபாஸ்ட் உடனான ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பது இந்திய வாகன துறையில் விற்பனைக்கு பிந்தைய சேவைகளை வழங்குவதில் எங்கள் நிறுவனம் சிறப்பாக செயல்படுகிறது என்பதற்கான சான்று என கூறி இருக்கும், மைடிவிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நடராஜன் சீனிவாசன், வின்ஃபாஸ்ட் வாடிக்கையாளர்களுக்கு விரிவான சேவைகள் வழங்கப்படும் என கூறியுள்ளார்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications