வியட்நாம் நாட்டின் எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவில் கார் தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்கும் திட்டத்தில் இந்தியாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு வந்த நிலையில், தற்போது முக்கியமான திட்டத்தைத் தமிழ்நாட்டில் கொண்டு வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
2024 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரி உற்பத்தி ஆலையை அமைக்கத் திட்டமிட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டு அரசின் முதலீட்டு மாநாடு அடுத்த வாரம் நடக்க உள்ள நிலையில் வின்ஃபாஸ்ட் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாமல் வைக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் வின்பாஸ்ட் எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரி உற்பத்தி ஆலை அமைக்க எவ்வளவு முதலீடு செய்யப்போகிறது என்ற விஷயமும் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்தத் தொழிற்சாலை தூத்துக்குடி மாவட்டத்தில் அமையும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் வின்ஃபாஸ்ட் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்துக் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார், நிறுவனம் அதன் திட்டங்களின் விவரங்களை "சரியான நேரத்தில்" வெளியிடும் எனக் கூறியதாக ப்ளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கும் எலக்ட்ரிக் கார்களை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் விற்பனை செய்யத் திட்டமிட்டு தான் சில மாதங்களுக்கு முன்பு வின்ஃபாஸ்ட் அதிகாரிகள் இந்தியாவுக்கு வந்தனர். வின்ஃபாஸ்ட் நிறுவனம் தற்போது தனது வர்த்தகத்தை அமெரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் தீவிரமாக விரிவாக்கம் செய்து வருகிறது.

இதன் மூலம் இந்தத் திட்டத்திற்குத் தமிழ்நாடு தான் பெஸ்ட், காரணம் தமிழ்நாட்டில் ஏற்கனவே ஆட்டோமொபைல் உற்பத்திக்கான பேஸ் உள்ளது, அதேபோல் கார் ஏற்றுமதிக்கான சிறப்புத் தளமாக எண்ணூர் காமராஜர் துறைமுகம் உள்ளது.
இதன் மூலம் தூத்துக்குடியில் பேட்டரி தொழிற்சாலை வந்தால், சென்னையில் எலக்ட்ரிக் கார் தொழிற்சாலை வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்தியாவில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் கார் தொழிற்சாலை அமைக்க முதல் கட்டமாக 200 மில்லியன் டாலர் முதலீடு செய்யத் திட்டமிட்டு இருப்பதாக அறிவித்திருந்தது.
வியட்நாம் மிகவும் குட்டி நாடாக இருந்தாலும் உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் அசத்தி வருகிறது, கிட்டதட்ட குட்டி சீனாவை போலேவே இந்நாடு செயல்படுகிறது. இந்தியாவில் எப்படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா குரூப், அதானி குழுமம் ஆகியவை வர்த்தக துறையில் பெரும் ஆதிக்கம் செலுத்துகிறதோ, அதேபோல வியட்நாம் நாட்டின் முக்கியமான வர்த்தக சம்ராஜ்ஜியமாக விளங்குகிறது வின்குரூப்.
டெஸ்லா-வின் வெற்றியை பார்த்த பின்பு 2017ல் வின்குரூப் உருவாக்கிய ஒரு ஆட்டோமொபைல் நிறவனம் தான் வின்பாஸ்ட் (VinFast Auto), முதலில் நூடில்ஸ் உருவாக்கும் ஒரு நிறுவனம் எலக்ட்ரிக் கார்களை தயாரிக்க போகிறதா என பலரும் சிரித்தனர், விமர்சனம் செய்தனர்.
ஆனால் கடந்த 7 வருடத்தில் பல்வேறு கூட்டணி, திறன் மேம்பாடு, டிசைன் மேம்பாடு, உற்பத்தி அளவில் உயர்வு மற்றும் தரம் மேம்பாடு என பல பிரிவில் அசத்தியது மூலம் சர்வதேச நிறுவனங்களுக்கு இணையான கார்களை தயாரித்தனர்.
இதன் விளைவு VinFast தயாரித்த கார்கள் வியட்நாம் நாட்டில் மட்டும் அல்லாமல் ஐரோப்பா, ஆசிய, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, அமெரிக்காவிலும் ஏற்றுமதி செய்து விற்பனை செய்ய துவங்கியது. அமெரிக்க பங்குச்சந்தையில் வின்பாஸ்ட் பட்டியலிடப்பட்டு உள்ளது.
அமெரிக்கவில் வின்ஃபாஸ்ட் கார்களுக்கு பெரிய அளவிலான வரவேற்பு கிடைத்திற்கும் வேளையில் 2 பில்லியன் டாலர் முதலீட்டில் வட கரோலினா பகுதியில் புதிய தொழிற்சாலை அமைத்து வருகிறது. இதேபோல் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்காக இந்தோனேஷியாவில் புதிய தொழிற்சாலை அமைத்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications