சென்னை: டெஸ்லா மின்சார கார்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்திருப்பதன் மூலம் மின்சார கார் விற்பனை சந்தை சூடு பிடித்திருக்கிறது . இந்தியாவை பொருத்தவரை டெஸ்லாவின் மின்சார கார்களுக்கு சீனாவின் பிஒய்டி நிறுவனத்தின் மின்சார கார்களும், வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவன மின்சார கார்களும் கடும் போட்டியாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
உலக அளவில் இந்தியா மின்சார கார்கள் விற்பனைக்கான மிக முக்கியமான ஒரு சந்தையாக மாறி இருக்கிறது. பெரும்பாலான இந்தியர்கள் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களை வாங்கி பயன்படுத்த தொடங்கி இருக்கின்றனர் . வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் ஏற்கனவே தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் தன்னுடைய மின்சார கார்கள் உற்பத்தி ஆலையை நிறுவி வருகிறது.

தற்போது டெஸ்லா நிறுவனம் மும்பையில் தன்னுடைய முதல் ஷோரூமை திறந்து இருக்கும் நிலையில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் தங்களின் இரண்டு கார்களுக்கான முன்பதிவை தொடங்கி இருக்கிறது., வின்ஃபாஸ்ட் இந்தியாவில் VF 6, VF7 ஆகிய இரண்டு எஸ்யூவி மின்சார கார்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதற்கான புக்கிங் தான் தற்போது தொடங்கியுள்ளது.
வின்ஃபாஸ்ட் சென்னை மவுண்ட் ரோடில் தங்களுடைய முதல் ஷோரூமை நிறுவி இருக்கிறது . இந்த ஷோரூமில் தாங்கள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரவிருக்கும் VF 6, VF7 ஆகிய இரண்டு மாடல் கார்களையும் நிறுத்தி வைத்திருக்கிறது. வரும் ஆகஸ்ட் அடுத்த மாதத்தில் இருந்தே வின்ஃபாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடி ஆலையில் மின்சார கார்கள் உற்பத்தியை தொடங்க இருக்கிறது. அதே போல ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே இந்திய சந்தையில் VF 6, VF7 மாடல் எஸ்யூவி மின்சார கார்களை விற்பனைக்கு கொண்டு வரவும் முடிவு செய்து இருக்கிறது.
வாடிக்கையாளர்கள் சென்னை மவுண்ட் ரோடில் அமைந்திருக்கக்கூடிய வின்ஃபாஸ்ட் ஷோரும் சென்று நேரிலோ அல்லது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ கார்களுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 21,000 ரூபாய் முன்பதிவு கட்டணமாக செலுத்தலாம் என்றும் இது திரும்ப வழங்கக்கூடிய கட்டணம் என்றும் வின்ஃபாஸ்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்திய சாலைகளுக்கு ஏற்ற வகையிலும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையிலும் இந்த கார்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக வின்ஃபாஸ்ட் நிறுவனம் கூறியிருக்கிறது. நாள்தோறும் நகரங்களுக்குள்ளேயே பயணம் செய்பவர்கள் ,நகரம் விட்டு நகரம் பயணம் செய்பவர்கள், வார இறுதி நாட்களில் வெளியூர்களுக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையிலான எஸ்யூவி காராக இந்த இரண்டு மாடல்களும் இருக்கும் என வின்ஃபாஸ்ட் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது.
பிரீமியம் முறையில் இன்டீரியர் செய்யப்பட்டிருப்பதாகவும் லெவல் 2 Advanced Driver Assistance System உள்ளிட்ட வசதிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்கள் முன்பதிவு விற்பனைக்காக 27 நகரங்களில் உள்ள டீலர்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது . அத்துடன் விற்பனைக்கு பிந்தைய சேவைகளை வழங்குவதற்காக மைடிவிஎஸ் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்திருக்கிறது.
முதல் கட்டமாக டெல்லி, குருகிராம் ,சென்னை,பெங்களூர் ,ஹைதராபாத் ,புனே, கோயம்புத்தூர் ,விசாகப்பட்டினம், கோவா உள்ளிட்ட பகுதிகளில் டீலர்களிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டு கார்கள் விற்பனை செய்யப்படும் என தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் VF 6 கார் 18 லட்சம் ரூபாயில் இருந்து 24 லட்சம் ரூபாய் வரை விற்பனைக்கு வரும் என சொல்லப்படுகிறது. அதே வேளையில் VF7 கார்கள் 30 லிருந்து 35 லட்சம் ரூபாய் வரை விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications