வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய முதல் உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் நிறுவி மின்சார கார்களை உற்பத்தி செய்து வருகிறது. உலக அளவில் மின்சார வாகன சந்தை வேகமாக வளர்ச்சியை எட்டி வருகிறது.
மின்சார வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணி நிறுவனமாக இருக்கிறது வியட்நாமை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் . இந்த நிறுவனம் இந்தியாவிலேயே தன்னுடைய முதல் ஆலையை தமிழ்நாட்டில் தான் நிறுவி இருக்கிறது . தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் வின்ஃபாஸ்ட் ஆலை கட்டுமான பணிகள் முடிந்து கார் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கே உற்பத்தியாகும் மின்சார கார்கள் இந்தியா மட்டும் இன்றி வெளிநாடு சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தூத்துக்குடி துறைமுகம் அருகிலேயே இருப்பதால் வின்ஃபாஸ்ட் நிறுவனம் தன்னுடைய ஏற்றுமதி, இறக்குமதிக்கு பொருத்தமான இடமாக தூத்துக்குடி இருக்கும் என்ற நம்பிக்கையில் அங்கே மிகப் பெரிய உற்பத்தி ஆலையை அமைத்து செயல்படுத்தி வருகிறது . தமிழ்நாடு அரசும் வின்ஃபாஸ்ட் ஆலைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறது.
இந்திய சந்தையில் வேகமாக தன்னுடைய கிளைகளை பரப்பி வரும் வின்ஃபாஸ்ட் நிறுவனம் மின்சார கார் மட்டும் இல்லாமல் மின்சார பேருந்து சந்தையிலும் கால் பதிக்க இருக்கிறது. 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தன்னுடைய முதல் மின்சார பேருந்தை இந்திய சந்தையில் அறிமுகம் படுத்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. தற்போது மின்சாரக்கார உற்பத்தி செய்து வரக்கூடிய தூத்துக்குடி ஆலையிலேயே மின்சார பேருந்துகளை உற்பத்தி செய்யும் முடிவையும் வின்ஃபாஸ்ட் நிறுவனம் எடுத்து இருக்கிறதாம்.

வின்ஃபாஸ்ட் நிறுவனம் ஏற்கனவே தூத்துக்குடி ஆலையில் 500 மில்லியன் டாலர்களை முதலீடு செய்திருக்கிறது . இந்திய சந்தையில் 2 பில்லியன் டாலர்களை முதலீடு செய்வதற்கான உறுதியை அளித்திருக்கிறது. இந்த சூழலில் தான் மின்சார பேருந்துகளை தூத்துக்குடி ஆலையில் உற்பத்தி செய்ய திட்டமிட்டு இருக்கிறது .
இதற்காக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த போக்குவரத்து துறை அமைச்சகங்களிடம் வின்ஃபாஸ்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது .இதன் மூலம் மாநில போக்குவரத்து துறைக்கு தேவையான மின்சார பேருந்துகளை விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தங்களை பெறுவதில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் தீவிரமாக இறங்கி இருக்கிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு ,உத்திரபிரதேசம் , ஆந்திரா , தெலுங்கானா ஆகிய மாநில அரசுகளிடம் வின்ஃபாஸ்ட் நிறுவனம் மின்சார பேருந்து கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறதாம் .
தூத்துக்குடி ஆலையில் தற்போது மின்சார கார் மட்டுமில்லாமல் மின்சார பேருந்துகளும் உற்பத்தி செய்யப்படுவதன் மூலம் ஆலை மேலும் விரிவாக்கம் செய்யப்படும் இதனால் வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் இது தூத்துக்குடி மாவட்டத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது .
அண்மையில் தான் வின்ஃபாஸ்ட் நிறுவனம் ஐரோப்பிய சந்தையில் 6 முதல் 12 மீட்டர்கள் நீளம் கொண்ட மின்சார பேருந்துகளை அறிமுகம் செய்தது. ஒருமுறை சார்ஜ் செய்தாலே 260 கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்யும் திறன் கொண்டதாக இந்த மின்சார பேருந்துகள் இருக்கின்றன. தற்போது பல்வேறு மாநிலங்களும் தங்களுடைய போக்குவரத்து துறையில் மின்சார பேருந்துகளை பயன்படுத்த தொடங்கி விட்டன என்பதால் இந்திய சந்தையில் மின்சார பேருந்துகளின் விற்பனையும் தங்களுக்கு சாதகமாக அமையும் என வின்ஃபாஸ்ட் நிறுவனம் நம்புகிறது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications