இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் முன்னோடியாக இருக்கும் தமிழ்நாட்டு புதிய பொக்கிஷமாக வியட்நாம் நாட்டின் வின்பாஸ்ட் கிடைத்துள்ளது. வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் பேட்டரி தொழிற்சாலை அமைக்க உள்ளதாகத் தகவல் 2 நாட்களுக்கு முன்பு வெளியான தற்போது வியக்க வைக்கும் வகையில் முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.
வியட்நாம் நாட்டின் வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் சுமார் 2 பில்லியன் டாலர் முதலீட்டில் அதாவது 17000 கோடி ரூபாய் முதலீட்டில் மெகா எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலையும், பேட்டரி தொழிற்சாலையும் அமைக்க உள்ளதாகத் தெரிகிறது. இதில் அனைத்துத் தரப்பு மக்களும் கவனிக்க வேண்டிய விஷயம் 2 பில்லியன் டாலர்.

இந்த முக்கியமான அறிவிப்பு இன்று துவங்க உள்ள தமிழ்நாடு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. ஏற்கனவே தூத்துக்குடியில் ஒரு சர்ப்ரைஸ் உள்ளது எனத் தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் வரப்போவதாகக் கூறப்படும் டெஸ்லா இதே 2 பில்லியன் டாலர் முதலீட்டில் தான் மெகா தொழிற்சாலையை அமைக்கத் திட்டமிட்டு உள்ளது. கிட்டதட்ட இதே முதலீட்டைத் தமிழ்நாடு வின்பாஸ்ட் மூலம் பெறப்படுவது டக்கரான விஷயம்.
இது மட்டும் அல்லாமல் பெங்களூரில் பாக்ஸ்கான் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்புக்காகக் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட தொழிற்சாலைக்கு இதே 2 பில்லியன் டாலர் முதலீட்டை தான் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஓரே கல்லில் ரெண்டு மாங்காய் என்பது போது வின்பாஸ்ட் மூலம் குஜராத் மற்றும் கர்நாடகாவிற்குப் பதிலடி கொடுத்துள்ளது.

வின்பாஸ்ட் தனது மெகா தொழிற்சாலையைச் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் அமைக்க உள்ளது. முதல்கட்டமாக 500 மில்லியன் டாலர் முதலீட்டில் 3000 முதல் 3500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த எலக்ட்ரிக் கார் தொழிற்சாலையில் வருடத்திற்குச் சுமார் 1,50,000 கார்களைத் தயாரிக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.
மேலும் இத்தொழிற்சாலைக்கான கட்டுமானம் 2024 ஆம் ஆண்டு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வின்பாஸ்ட் தனது மெகா தொழிற்சாலையைச் சென்னையில் அல்லாமல் தூத்துக்குடியில் அமைக்கும் காரணத்தால் தென்தமிழக வளர்ச்சியில் இது புதிய அத்தியாயமாக விளங்கும்.
2023 ஆம் ஆண்டின் மே மாதத்தில் தென் கொரியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் தமிழ்நாட்டில் 15000 முதல் 20000 கோடி ரூபாய் வரையிலான தொகையை அடுத்த 7 -10 வருடத்தில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்தது.
இந்த 15000 கோடி ரூபாய் முதலீடு என்பது முழுக்க முழுக்க எலக்ட்ரிக் வாகனங்கள், ஹைட்ரஜென் பியூயல் செல் மூலம் இயங்கும் வாகனங்களுக்காகப் பிரத்தியேகமாக முதலீடு செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications