தூத்துக்குடி: வியட்நாம் நாட்டை சேர்ந்த மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான வின்ஃபாஸ்ட் (Vinfast) தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் தன்னுடைய வாகன உற்பத்தி ஆலையை கட்டமைத்து வருகிறது. கட்டுமான பணிகள் தீவிரமடைந்திருக்கும் நிலையில் ஜூன் மாத இறுதியிலேயே ஆலை செயல்பட தொடங்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் தன்னுடைய மின்சார வாகன உற்பத்தி ஆலையை கட்டமைத்து வருகிறது. இந்த நிலையில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பாம் ஷாவ், நிறுவன பங்குதாரர்களிடம் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போது நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக்கத் திட்டங்கள் குறித்தும் பேசினார்.

எதிர்காலத்தில் வியட்நாம் மட்டுமில்லாமல் இந்தோனேசியா, இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய சந்தைகளிலும் வின்ஃபாஸ்ட் நிறுவனம் கவனம் செலுத்தும் எனக் குறிப்பிட்டார். அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்கிற்கு சொந்தமான டெஸ்லா மின்சார வாகன நிறுவனத்திற்கு போட்டியாளராக வின்ஃபாஸ்ட் நிறுவனம் கருதப்படுகிறது. இந்த நிறுவனம் இந்தியாவில் 2 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறது.
இதன் ஒரு பகுதியாக தான் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் 500 மில்லியன் டாலர்களை முதலீடு செய்து மின்சார வாகன உற்பத்தி ஆலையை அமைத்து வருகிறது. இந்த ஆலையில் ஓர் ஆண்டுக்கு 1,50,000 மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும் என வின்ஃபாஸ்ட் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மின்சார வாகனம் மட்டுமில்லாமல் மின்சார வாகனத்திற்கு தேவையான பேட்டரியும் இதே ஆலையில் உற்பத்தி செய்யப்படும் என கூறுகிறது. இது தவிர இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் சார்ஜிங் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் தங்களுடைய நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக வின்ஃபாஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமான நிலையம் மற்றும் துறைமுகமாக இரண்டும் இருப்பதால் ஏற்றுமதிக்கு உகந்த இடமாக இருக்கும் என கருதி தான் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உற்பத்தி ஆலையை நிறுவி இருப்பதாக வின்ஃபாஸ்ட் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. தற்போது வின்ஃபாஸ்ட் நிறுவனம் வியட்நாமில் இரண்டு உற்பத்தி ஆலைகளை கொண்டிருக்கிறது. ஒரு உற்பத்தி ஆலையில் ஆண்டுக்கு 50,000 மின்சார வாகனங்களும் மற்றொரு ஆலையில் ஆண்டுக்கு 1 லட்சம் மின்சார வாகனங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை உள்நாட்டிலும் மின்சார வாகனங்களுக்கான டிமாண்ட் அதிகரித்து இருக்கிறது. அதேவேளையில் மேற்காசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கிறது என்பதால் அடுத்த சில ஆண்டுகளுக்கு இந்தியாவில் இருக்கும் ஆலையில் தீவிர கவனம் செலுத்த இருப்பதாக வின்ஃபாஸ்ட் நிறுவனம் கூறியிருக்கிறது. தூத்துக்குடியில் அமைக்கப்பட்டு வரும் இந்த உற்பத்தி ஆலை மூலம் 3,500 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications