உலகளாவிய எலக்ட்ரிக் வாகன சந்தை மந்த நிலையில் இருக்கும் வேளையிலும், அமெரிக்காவில் விற்பனை குறைவாக இருந்தாலும், வியட்நாம் நாட்டின் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான வின்ஃபாஸ்ட் ஆட்டோ லிமிடெட் ஆசியாவில் தனது உற்பத்தியையும், வர்த்தகத்தையும் விரிவாக்கம் செய்ய தீவிரமாக உள்ளது.
வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான வின்குரூப் ஜே.எஸ்.சி.யின் ஹனோய் தலைமையகத்தில் புதன்கிழமை அன்று நடைபெற்ற ஒரு தொலைக்காட்சி பேட்டியில், வின்ஃபாஸ்ட் நிறுவனர் பாம் நட் வுங் முக்கியமான தகவலை வெளியிட்டார்.

இந்த பேட்டியில் இந்தியாவில் (தமிழ்நாட்டில்) உள்ள தங்கள் தொழிற்சாலையைத் திட்டமிட்டதற்கு 6 மாதங்கள் முன்னதாக, அடுத்த ஆண்டின் முதல் பாதியில் திறக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதேபோல் அடுத்த இரண்டு மாதங்களில் இந்தோனேசியாவில் ஒரு தொழிற்சாலையைக் கட்டும் பணிகளை தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார் Pham Nhat Vuong.
தமிழ்நாட்டின் துறைமுக நகரமான தூத்துக்குடியில் எலக்ட்ரிக் கார் (Electric Vehicle - EV) தொழிற்சாலையின் களப்பணிகள் கடந்த மாதம் துவங்கப்பட்டது. வியட்நாம் நிறுவனமான வின்ஃபாஸ்ட் இந்த ஆலையை நிறுவும் பணிகள் மந்தமாகத் துவங்கினாலும், தற்போது வேகமெடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசுடன் கடந்த ஆண்டு வின்ஃபாஸ்ட் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதைத் தொடர்ந்து, வின்ஃபாஸ்ட் நிறுவனம் தற்போது ஆலைக்கான கட்டுமான பணிகளைத் தொடங்கியுள்ளது. இந்த ஆலை சுமார் 380 ஏக்கர் பரப்பளவில், ஆண்டுக்கு 1,50,000 எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக அமைக்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 3,000 முதல் 3,500 வரையிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்கான ஹப் ஆக மாறுவதற்கான முயற்சிகளில் இது ஒரு முக்கிய படியாகும்.
உலகளவில் மிகவும் போட்டி மிகுந்த எலக்ட்ரிக் வாகனச் சந்தையில் கால் பதிப்பதற்கான போராட்டத்தில் இருக்கும் நிலையில் கூட, வின்ஃபாஸ்ட் தனது விரிவாக்கத் திட்டங்களைக் கைவிடாமல் தொடர்ந்து எதிர்கால இலக்கை அடைய தனது முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.
வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் வெறும் 9,689 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது, இது இந்த ஆண்டின் இலக்கான 1 லட்சம் கார்கள் விற்பனையை பார்க்கும் போது மிகவும் குறைவான விற்பனையை பதிவு செய்துள்ளது.
2023 ஆம் ஆண்டில், இந்நிறுவனம் 34,855 வாகனங்களை விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது, அவற்றில் பெரும்பாலானவை தங்கள் நிறுவனத்திற்கு தொடர்புடைய நிறுவனங்களுக்கே விற்பனை செய்யப்பட்டவை.
வின்ஃபாஸ்ட் தனது அதிநவீன எலக்ட்ரிக் வாகனங்களை குறைந்த விலையில் உலகளவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. ஆனால் அமெரிக்க சந்தையில் இந்நிறுவனத்தின் தொடக்க விற்பனை மந்தமாகவே உள்ளது.
இருப்பினும், இந்தியா மற்றும் இந்தோனேசியா போன்ற வளரும் எலக்ட்ரிக் வாகன சந்தைகளில் வின்ஃபாஸ்ட் கூடுதலான கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த சந்தையில் எதிர்கால வளர்ச்சிக்கான திடமான அடித்தளத்தை அமைக்க வின்ஃபாஸ்ட் முயற்சித்து வருகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications