தமிழ்நாடு அரசு உலக சுற்றுலா உச்சி மாநாட்டில் பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதில் முக்கியமாக வியட்நாம் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான வின்குரூப் (Vingroup), கார் தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட்-ன் (VinFast) தாய் நிறுவனம், தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திட்டுள்ளது.
வின்பாஸ்ட் நாம் அனைவருக்கும் ஒரு கார் நிறுவனமாக தான் தெரியும், ஆனால் இக்குழுமம் வியட்நாம் நாட்டில் பல்வேறு துறைகளில் இயங்கி வருகிறது. இதன்படி வின்குரூப்-ன் கிளை நிறுவனமான வின்வண்டர் (VinWonder) பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் சொகுசு ஹோட்டல்கள் அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஒப்பந்தம் தமிழ்நாட்டின் சுற்றுலா துறையை பெரிதும் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வின்குரூப் நிறுவனம் இத்திட்டங்களுக்கு ரூ.3000 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் சுமார் 12,000 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும்.
மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில், சென்னை அருகே அமிர்தானந்தமயி மடம் அறக்கட்டளையுடன் மற்றொரு MoU கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் படி heritage theme park அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டமும் சுற்றுலாவை ஊக்குவிப்பதோடு உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்தும்.
இமேஜிகா வேர்ல்டு என்டர்டெயின்மென்ட் என்னும் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டது. இதன்படி தமிழ்நாட்டில் வேகமாக வளரும் 2வது மாவட்டமான கோயம்புத்தூரில் பெரிய அளவிலான amusement park அமைக்கப்பட உள்ளது.
இமேஜிகா நிறுவனம் இத்திட்டத்துக்கு 650 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இந்த திட்டம் மூலம் சுமார் 500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு சுற்றுலாவை மாநிலத்தின் முக்கிய பொருளாதார இயந்திரமாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. வின்குரூப் போன்ற உலகளாவிய பெருநிறுவனத்தின் வருகை தமிழ்நாட்டை சர்வதேச சுற்றுலா வரைபடத்தில் உயர்த்தும். இந்த பொழுதுபோக்கு பூங்காக்கள் ஊக்குவிப்பதன் மூலம் உள்ளூர் வணிகங்களையும் உயர்த்தும்.


Click it and Unblock the Notifications